விக்கிப்பீடியா:பெப்ரவரி 20, 2011 பிரக்யான் பட்டறை திருச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருச்சி, தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்.ஐ.டி) பெப்ரவரி 19-20ம் தேதிகளில் நடைபெறும் பிரக்யான் 2011 தொழில்நுட்ப-மேலாண்மைத் திருவிழாவில் விக்கிப்பட்டறையும் (20ம் தேதி), கண்காட்சியில் சிறுகடையும் (19-20) வைக்க ஸ்ரீகாந்த் ஏற்பாடு செய்துள்ளார். திருச்சியின் விக்கி பத்து கொண்டாட்ட நிகழ்வுகளும் இவற்றுடன் இணைந்து நடைபெறும்.

நிகழ்ச்சி நிரல்[தொகு]

(வரைவு)

  • 19 பெப்ரவரி -- காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை -- காட்சிகூடத்தில் சிறுகடை -- பயனர்:Sodabottle
  • 20 பெப்ரவரி -- சந்திப்பு / பட்டறை / விக்கிப்பத்து கொண்டாட்டம் -- காலை 9 மணி முதல்
    • 0900 - அறிமுகம்,10 ஆண்டுகள் பற்றி
    • 0930 - விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது எப்படி -- ஆங்கில விக்கியர் தீனுசெரியன்
    • 1000 - தமிழ் விக்கிப்பீடியா - அறிமுகம் -- பயனர்:Sodabottle
    • 1030 - விக்கிப்பீடியா - தொழில்நுட்பப் பங்களிப்பு -அறிமுகம் -- ஸ்ரீகாந்த்
    • 1100 - கலந்துரையாடல்
    • 1130 முதல் சிறுகடையில்

பங்கு கொள்வோர்[தொகு]

பேருந்து வழித்தடம்[தொகு]

  • திருச்சி தமிழ்நாட்டின் நடுவில் அமைந்துள்ளதால், சென்னையிலிருந்து வரும் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக பேருந்தில் வருபவர்கள், திருச்சியிலுள்ள சத்திரம் பேருந்து நிலையில் இறங்கி, அங்கிருந்து துவாக்குடிக்குச் செல்ல மற்றொரு உள்ளூர் பேருந்திற்கு (நகரப் பேருந்துக்கு) மாற வேண்டும்.
  • தஞ்சாவூர் சாலை வழியாக வருபவர், துவாக்குடியிலேயே இறங்கவும். ஏனெனில், திருச்சி பேருந்து நிலையத்திற்கு முன்பே துவாக்குடி நிறுத்தம் உள்ளது.
  • வானூர்தி, தொடருந்து வழியாக வருபவர், திருச்சி பேருந்து நிலையம் செல்லாமலே துவாக்குடிக்கு வரலாம்.


நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது[தொகு]

சனிக்கிழமை நன்பகல் 12 மணியளவில் இருந்து தீனு செரியனும் சோடாபாட்டிலும் சிறுகடையில் வருவோருக்கு அறிமுகம் அளித்துக் கொண்டு இருந்தார்கள். பல மாணவர்களைச் சந்தித்து விளக்க நேரிட்டது. சோடாபாட்டில் ஒரு துண்டு பதிப்பும் கொண்டு வந்திருந்தார். ஞாயிறு காலை ஒரு பட்டறை போல் தொடங்கினோம். முதலில் தீனு விக்கிப்பீடியாவுக்கு ஓர் அறிமுகமும், பின்னர் சோடாபாட்டில் ஒரு செய்முறை விளக்கமும் அளித்தனர். ஒரு கணினிக்கூடத்தில் நடைபெற்றதால் வந்திருந்தோரும் சேர்ந்து செய்தார்கள். பின்னர் சோடாபாட்டில் தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றி பேசினார். மாணவர்களிடையே நல்ல ஆர்வம் இருந்தது. பின்னர் நான் தொழில்நுட்பம் பற்றி பேசினேன். இதற்கிடையே தமிழ்நாடு_சட்டமன்றத்_தேர்தல்,_2011 கட்டுரையை ஒரு மாணவர் தொகுக்க (இலக்கணப் பிழை திருத்தினார்), இன்னொரு விசமியும் தொகுத்தார். விசமியின் தொகுப்பை கனக்சு மீளமைத்தார். நிகழ்ச்சி முடியும் தருவாயில் இதை சோடாபட்டில் விளக்கினார். அனைவரும் விக்கியில் விசமி தொகுப்புகள் எப்படி கையாளப்படுகின்றன என நேரடியாக காண்பிக்க முடிந்தது. பிறகு நன்பகலில் இருந்து மீண்டும் கடைக்கு வந்தோம். மைக்ரோசாப்டு சரவணன் விக்கிபாஷாவை பற்றி எங்களிடம் நன்கு கேட்டறிந்தார். சுமார் 100 பேர் பட்டறையில் கலந்து கொண்டார்கள். புகைப்படங்கள் விரைவில் பதிவேற்றப் படும். எங்களை உபசரித்த என்.ஐ.டி மாணவர்களுக்கு சிறப்பு நன்றிகள். தனது தொகுத்தல் பணியை நிறுத்திவிட்டு வந்திருந்த சோடாபாட்டில் அவர்களுக்கு சிறப்பு நன்றிகள். ஸ்ரீகாந்த் 00:51, 21 பெப்ரவரி 2011 (UTC)

மாணவர்களைத் தவிர சில விக்கி ஆர்வலர்களும் வந்திருந்தனர். பேரா. துரை. மணிகண்டனின் நண்பர் வந்திருந்தார் (பெயர் மறந்துவிட்டது மன்னிக்கவும்). மேலும் புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் கணினியல் துறைத் தலைவராக இருக்கும் பேரா. முரளிதரனும் அவரது நண்பர் திரு.செல்வகுமார், நூலகர் அவர்களூம் வந்திருந்தனர். கணினி ஆய்வுக் கூடத்தில் நிகழ்ச்சி நடை பெற்றதால் அனைவருக்கு நேரடியாகத் தொகுக்கச் சொல்லித் தர இயன்றது. ஸ்ரீகாந்த் குறிப்பிட்ட மாணவர் (பயனர்:Balajichinna) திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர்; நான் இலக்கணப் பிழைகளைத் திருத்தலாம், சிறு சிறு பிழைகளையும் திருத்தலாம் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே உடனே ஒரு திருத்ததை செய்து அசத்தினார். மேலும் ஒரு மாணவர் ஆர்வக்கோளாறில் துடுக்குத் தனமாக ஒரு தொகுப்பினைச் செய்ய, அதை பன்னிரெண்டே நிமிடங்களுள் கனக்ஸ் மீளமைத்திருந்தார். இது விக்கி எப்படி யதார்த்ததில் செயல்படும் எனும் மாணவர்களின் கேள்விக்கு நல்லதொரு விளக்கமாக சுட்டிக் காட்டினோம். ஒருவர் செய்யும் தொகுப்புக்கள் உடனுக்குடன் கண்காணிக்கப்பட்டு பிழைகள் திருத்தப்படுகின்றன என்பதைக் கண்ட அனைவருக்கும் விக்கி மீதான மதிப்பு நன்கு உயர்ந்தது போல எனக்குப் பட்டது.

வந்திருந்த 100 பேரில் ஒரு இருபது தமிழறியாதோர் (என் ஐ டியில் பிற மாநில மாணவர்களின் விகிதம் 50% என்று நினைக்கிறேன்) என்பதால் பல விஷயங்களை ஆங்கிலம் அல்லாத மொழிகள் என்று பொதுவாக ஆங்கிலமும் தமிழும் கலந்து சொன்னேன். விக்கி பற்றி அறிந்தவர்கள் (மேற்குறிப்பிட்ட மாணவரல்லாத தன்னார்வலர்கள்) விக்கி கொள்கைகளைக் குறித்து சிறப்பான சில கேள்விகள் கேட்டனர். ஈழத்தமிழ் vs தமிழ்நாட்டுத் தமிழ் பொதுமை, வெளி இணைப்புகள் தருவது, நடுநிலைக் கொள்கையுடன் தொகுப்பது, எம்மாதிரி உசாத்துணைகளை பயன்படுத்தலாம் போன்ற ஐயங்களை எடுத்துக்காட்டுடன் விளக்க முடிந்தது. விக்சனரி பற்றி பலர் நன்கு அறிந்துள்ளனர்; அடிக்கடி பயன்படுமொரு தளமாக விக்சனரி மாறியுள்ளதை உணர முடிந்தது (விக்சனரியை இந்த அளவுக்கு வளர்த்த விக்கியர்களுக்கு என் சிரம் தாழ்த்தல் + தொப்பி தூக்குதல்).

ஆங்கில விக்கி தமிழ் விக்கி இரண்டுக்கும் செய்முறை விளக்கம் நானே அளித்ததால் ஏன் தமிழ் விக்கிக்கு பங்காற்ற வேண்டும் என்று என் கதையை சொல்லி விளக்கினேன். ஆங்கிலத்தில் மட்டும் எழுதிக்கொண்டிருந்த என்னை, ரவி செம்மொழி மாநாட்டு கடைக்கு அழைத்துச் சென்று அங்கு மக்கள் தமிழில் வேண்டும் என்று கேட்பதை உணரச் செய்ததை விவரித்தேன். பட்டறை முடிந்த பின்னர் சில தமிழ் மாணவர்கள் வந்து, நான் சொன்னது தங்களுக்கும் தமிழில் பங்களிப்பதன் அவசியத்தை உணர்த்தியதாகச் சொன்னார்கள். பட்டறை முடிந்து விக்கி 10 கேக்கினை வெட்டியபின்னரும் பல மாணவர்கள் இருந்து சந்தேகங்களைத் தீர்த்துச் சென்றனர். கோவை அம்ரூதா வித்யபீடத்திலிருந்து வந்திருந்த மாணவர் ஒருவர் அவரது கல்லூரியிலும் பட்டறை நடத்த ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார்.

எங்கள் கடை இருந்த அதே அரங்கில் சில மாணவர்களின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழ்நாடெங்கும் சுற்றி அருமையான புகைப்படங்களை அவர்கள் எடுத்திருந்தனர். அவர்களுள் ஒருவரான தயா (பிஎச்டி பட்ட ஆராய்ச்சி மாணவர்) விடம் இப்படங்களை சிசி/ எசு ஏ 3.0 உரிமத்தில் விக்கிக்குத் தாருங்கள் என்று கேட்டதற்கு உடனே ஒப்புக்கொண்டார். பிற் புகைப்படங்களை எடுத்த மாணவர்களையும் மறுநாள் மறவாமல் அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். அவர்களும் தங்களது படைப்புகளை விக்கிக்குத் தர உடனே ஒப்புக்கொண்டனர். பின்பு விக்கிபாசா சரவணனுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். விக்கி சமூகத்துடன் உரையாடி எதையும் செய்வது எவ்வளவு அவசியம் என்பதை அவருக்கு விளக்கினோம்.

மொத்தம் இரு நாட்களும் சேர்த்து கடையில் 200 மாணவர்களை சந்தித்தோம். பட்டறையில் ஒரு 100 பேர். ஆக மொத்தம் 300 பேர்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. இது நடக்கக் காரணமாக இருந்த ஒருங்கிணைப்பாளர் நிவாஷ் மற்றும் பத்து பேர் அடங்கிய மாணவர் குழு (தினேஷ் மற்றும் சுதர்ஷன் ஆகிய பெயர்கள் மட்டும் நினைவில் உள்ளன) பம்பரமாகச் சுழன்று இதனை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள். இரு நாட்களும் எங்களது தேவைகளை உடனுக்குடன் கவனித்துக் கொண்டனர். இவ்வளவு பேருடன் இப்படி ஒரு அருமையான சூழ்நிலையில் பேசும் வாய்ப்பினை தந்த அவர்களுக்கு விக்கி சமூகத்தின் நன்றிகளும் பாராட்டுகளும்.

புகைப்படங்களை தீனு காமன்சில் ஏற்றியவுடன் தொடுப்பு கொடுத்து விடுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 05:08, 21 பெப்ரவரி 2011 (UTC)

படங்கள்[தொகு]

மேலும் படங்கள் இங்கே

வாழ்த்துகள்[தொகு]

  • நிகழ்வைப் பற்றிய விவரங்களைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகச் சிறப்பாக நடத்த உழைத்த அனைவருக்கும் வாழ்த்துகள்--இரவி 12:07, 21 பெப்ரவரி 2011 (UTC)
  • இந்நிகழ்வு நடைபெற உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள்! நன்றிகள்! --பெ. கார்த்திகேயன் (Karthi.dr)\உரையாடுக 14:39, 21 பெப்ரவரி 2011 (UTC)
  • நிகழ்வைச் சிறப்பாக நடத்திய விக்கிப்பீடியா பயனர்களுக்கும், ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள்! --தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 18:14, 21 பெப்ரவரி 2011 (UTC)
  • வாழ்த்துகள். --சூர்ய பிரகாசு.ச.அ. 05:05, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • நிகழ்ச்சி நடக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும் வாழ்த்துகள் --குறும்பன் 05:08, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • அருமை. திறம்பட செயற்பட்டமைக்கு உங்களுக்கு எனது வாழத்துக்களும், வணக்கங்களும் --தகவலுழவன் 16:27, 22 பெப்ரவரி 2011 (UTC)
  • சிறப்பாக பட்டறை நடத்தி முடித்தமைக்கு வாழ்த்துக்கள். --Natkeeran 01:46, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • அருமை. அருமை. வாழ்த்துகள் சோடா, லாஜிக், டீனு. கலந்து கொண்டோர் அனைவருக்கும் சிறப்புப் பாராட்டுகள் உரித்தாகட்டும்.--பரிதிமதி 03:37, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • மிகச்சிறப்பாக நடந்தேறியது குறித்து பெருமையாக உள்ளது. இதனை ஒருங்கிணைத்த, ஒத்துழைப்பு நல்கிய, பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துகளும் !! --மணியன் 09:26, 23 பெப்ரவரி 2011 (UTC)
  • நிகழ்வைப் பற்றிய விவரங்களைக் கேட்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது.அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றிகள்!-நட்புமிகு கனகராஜ்