விக்கிப்பீடியா:ஆகஸ்ட் 24, 2013 சென்னை விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அம்பத்தூரில் உள்ள சர் இராமசாமி முதலியார் மேல்நிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 24, 2013 அன்று விக்கிபீடியா விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. பள்ளியின் அறிவியல் மன்றம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் மன்றம் ஆகியவை இணைந்து நடத்திய இப்பயிற்சியில் பள்ளியின் மேனிலை வகுப்பு மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

சூர்யப்பிரகாஷ் வழிகாட்டுதலில் மாணவர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய பொதுவான அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு போன்றவை அளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பள்ளியின் கல்வியியல் ஆலோசகர் சுந்தரவடிவேலு, கணினி அறிவியல் ஆசிரியர் சங்கர், இயற்பியல் ஆசிரியர் இரவிசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தொகுப்பு[தொகு]