விக்கிப்பீடியா:சென்னை கிறித்தவக் கல்லூரியில் தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

சென்னை கிறித்தவக்கல்லூரியில், தமிழியல் ஆய்வு மன்றத்தின் சார்பில் விக்கிப்பீடியா தொகுத்தல் பயிற்சி.

நோக்கம்[தொகு]

மாணவர்களுக்கு தமிழ்க்கணினி விழிப்பூட்டுதல், தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் ஈடுபாட்டை ஏற்படுத்துதல்,தமிழ் விக்கிப்பீடியா தொகுப்புப்பணிகளில் செய்முறை விளக்கம் அளித்தல்.

நிகழிடம்[தொகு]

சென்னை கிறித்தவக்கல்லூரி, கலைப்புல அறை எண் 110

நேரம்[தொகு]

26.07.2013, வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணி

நிகழ்ச்சி நிரல்[தொகு]

வரவேற்புரை:முனைவர் ந. இளங்கோ, தமிழ்த்துறை இணைப்பேராசிரியர், தலைமையுரை:பேராசிரியர் கு. அரசேந்திரன், தமிழ்த்துறைப்பேராசிரியர் மற்றும் தலைவர், சிறப்புரை:மா. தமிழ்ப்பரிதி, துணைப்பேராசிரியர், இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறை,பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.

நிகழ்வுப்பொருண்மைகள்[தொகு]

இந்நிகழ்வில்,தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம், தமிழ் விக்கிப்பீடியா திட்டங்கள் ,தமிழ் விக்கிப்பீடியா தொகுத்தல் பணி, தமிழ்க்கணினி அறிமுகம், தமிழ்க்கணினியின் தேவை, தமிழ் இயங்கு தளங்கள், தமிழ் மென்பொருட்கள், தமிழ் எழுத்துரு, தமிழ் ஒருங்குகுறி, தமிழ் ஒருங்குகுறியின் பயன்கள், தமிழ் வலைப்பூ உருவாக்கம், திறந்தநிலை இயங்குதளங்கள் மற்றும் மென்பொருட்கள், ஒலிக்கோப்பு, ஒளிப்படங்கள், காணொளிகளின் பயன்பாடுகள் மற்றும் அவற்றை விக்கிப்பீடியா திட்டங்களில் இணைக்கும் முறைகள்

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு[தொகு]

தமிழியல் ஆய்வு மன்றம், சென்னை கிறித்தவக்கல்லூரி.

அழைப்பு[தொகு]

ஆர்வமுள்ளவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கலாம்.