விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை தமிழ் விக்கிப்பீடியா பட்டறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சென்னைக்கு அருகிலுள்ள திருநின்றவூரில் அமைந்திருக்கும் ஜெயா பொறியியல் கல்லூரியில் பிப்ரவரி 4, 2012 அன்று தமிழ் விக்கிப்பீடியா பட்டறை ஒன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் விக்கிப்பீடியா தொடர்பான அறிமுகத்தையும் தொகுத்தல் வழிமுறைகளையும் பயனர் சூர்யபிரகாஷ் விளக்கினார். இந்தப் பட்டறையில் தோராயமாக 70 பேர் கலந்து கொண்டனர். அனைவரும் அப்பொறியியல் கல்லூரியில் படிக்கும் கணினி அறிவியல் பொறியியல் (CSE) மாணவர்கள்.

அதைத் தொடர்ந்து இந்திய விக்கிமீடியா அலுவலகத்தில் பணிபுரியும் சுபாசிஷ் பனிக்ரஹி பொதுவாக விக்கிப்பீடியா பற்றியும் பிற சகோதரத் திட்டங்களைப் பற்றியும் விளக்கினார். மேலும் எவ்வாறு கோப்பைப் பதிவேற்றுவது என்று விளக்கப்பட்டது. உரிமங்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் தமிழ் விக்கி ஊடகப்போட்டி குறித்த சிறு அறிமுகமும் தரப்பட்டது.

கலந்து கொண்ட இருவருக்கும் கல்லூரி சார்பில் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மேலும், கல்லூரி முதல்வருடன் சிறிய கலந்துரையாடலுக்கும் ஏற்பாடு செய்திருந்தனர். கல்லூரி முதல்வர் விக்கிப்பீடியா குறித்த அதிக தகவல்களைக் கேட்டறிந்தார். மேலும், கல்லூரியில் மாணவர் மன்றம் ஒன்றை அமைக்கவும் விருப்பம் தெரிவித்தார்.