உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:பிப்ரவரி 4, 2012 சென்னை விக்கிப்பீடியா அறிமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயா பொறியியல் கல்லூரியில் பட்டறை முடிந்தவுடன் பயனர் சூர்யபிரகாசும் விக்கிமீடியா நிறுவன ஊழியர் சுபாசிஷ் பனிக்ரஹியும் சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் (அண்ணா பல்கலைக்கழகம்) நடந்த குருட்சேத்திரா என்ற ஒரு தொழில்நுட்ப விழாவில் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தனர். இது குறித்து குருட்சேத்திரா இணையதளத்திலும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிமுக நிகழ்வில் சுபாசிஷ் பனிக்ரஹி விக்கிப்பீடியா குறித்த ஓர் அறிமுகத்தை வழங்கினார். மாணவர்கள் பல வகையான வினாக்களை எழுப்பினர். அனைத்துக்கும் உரிய முறையில் பதிலளிக்கப்பட்டது. பலருக்கு விக்கிப்பீடியா இதுபோன்றதொரு பின்னணி உடையது என்று அறிந்து கொள்ளும் வாய்ப்பாக இது இருந்தது. பின்னர், பயனர் சூர்யபிரகாஷ் தமிழ் விக்கிப்பீடியா குறித்த ஒரு சிறு அறிமுகத்தையும் ஊடகப்போட்டி குறித்த அறிமுகத்தையும் தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க வேண்டியதன் நோக்கத்தையும் பார்வையாளர்களின் கருத்துகளின் வாயிலாக எடுத்துரைத்தார்.

பின்னர், மாணவர்கள் பலரும் தாங்களும் பங்களிக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறி விடைபெற்றனர்.

மேலதிக படங்கள் இந்த இணைப்பில் உள்ளன.