விக்கிப்பீடியா:சனவரி 23, 2013 நாகர்கோவில் விக்கிப்பீடியா அறிமுகம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகமும், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில், அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம் இணைந்து Kanya Wizard'13 எனும் தலைப்பில் Soft Kanya (மென்பொருள் கன்யா), Web Kanya (இணையம் கன்யா) எனும் தலைப்பிலான போட்டி அறிவிப்பு நிகழ்வுகள் மற்றும் Wiki Kanya (விக்கி கன்யா) எனும் தலைப்பிலான விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறையும் நடத்தப் பெற்றன.
நிகழ்வுக் குறிப்புகள்
[தொகு]இடம்: அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
நாள்: சனவரி 23, 2013, புதன் கிழமை
நேரம்: காலை 9.00 மணி
தலைமை: எஸ். நாகராஜன் இ. ஆ. ப., கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்.
முன்னிலை: முனைவர் வே. சுந்தரேசுவரன், இயக்குநர், அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டலம்.
நிகழ்வு குறித்த அறிமுக உரை: முனைவர் கவிதா, முதல்வர் பொறுப்பு, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
போட்டிகள் குறித்த அறிமுக உரை: துறைத் தலைவர், கணினிப் பொறியியல் துறை, பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
தமிழ் விக்கிப்பீடியா அறிமுக உரை: தேனி மு. சுப்பிரமணி
ஆங்கில விக்கிப்பீடியா அறிமுக உரை: விஸ்வ பிரபா (ViswaPrabha)
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் உரை குறிப்புகள்:
- கட்டற்ற கலைக்களஞ்சியமாக இணையத்தில் இருக்கும் விக்கிப்பீடியாவை ஆசிரியர்கள், மாணவர்கள், அலுவலர்கள் என்று பல துறையினரும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கூட்டு முயற்சியாகத் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படும் விக்கிப்பீடியாவில் நமக்குத் தெரிந்த தகவல்களை எல்லாம் சேர்க்க அனைத்துத் துறையினரும் முன் வர வேண்டும். குறைவான கட்டுரைகளுடன் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவிலும் பல பயனுள்ள கட்டுரைகளை உருவாக்கிட வேண்டும். குறிப்பாக, கல்லூரிப் பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள் விக்கிப்பீடியாவில் பங்களிப்புகளைச் செய்திட முன் வர வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழகம், திருநெல்வேலி மண்டல இயக்குநர் உரை குறிப்பு:
- சென்னையில் பணியாற்றிய போது என்னுடைய மாணவர் ஒருவர் என்னை விக்கிப்பீடியாவில் பங்களிப்பு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு அதற்காக எனக்குப் பயிற்சியளித்தார். அந்த மாணவர் சொல்லித் தந்தபடி தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்கமைவு எனும் தலைப்பில் நானும் ஒரு கட்டுரையை உருவாக்கி இருக்கிறேன். என்னையும் ஒரு விக்கிப்பீடியர் என்று சொல்லிக் கொள்ள அன்று பயிற்சியளித்த என்னுடைய மாணவர் ச. அ. சூர்ய பிரகாஷ்க்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பயிற்சி நிகழ்வு
[தொகு]ஆங்கில மொழி விக்கிப்பீடியா பயிற்சி :
- விஸ்வ பிரபா - மலையாள விக்கிப்பீடியர்
- சுகீஸ் - மலையாள விக்கிப்பீடியர்
- வைகுண்ட ராஜா - தமிழ் விக்கிப்பீடியர்
தமிழ் மொழி விக்கிப்பீடியா பயிற்சி:
நிகழ்வுத் தகவல்கள்
[தொகு]- கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள 70 கல்லூரிகளிலிருந்து 350 மாணவர்களுடன் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி மாணவர்கள் (முதலாம் ஆண்டு மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத் தேர்வுகள் நடத்தப் பெற்றதால் அவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை) அனைவரும் காலையில் நடைபெற்ற அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
- இப்பயிற்சியின் போது உருவாக்கப்பட்ட பயனர் பெயர்கள் அனைத்தும் kanya என்பதை முதன்மைப் பெயராகக் கொண்டு அதன் பின் எண்களுடன் தொடங்கப்பட்டிருந்தன.
- பயிற்சிக்கு ஆங்கில மொழிக்குத் தனியாகவும், தமிழ் மொழிக்குத் தனியாகவும் என இரு கணினி ஆய்வுக்கூடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
- தமிழ் விக்கிப்பீடியா பயிற்சியின் போது மாணவர்களுக்கு எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் ஊர், படித்த பள்ளி, பிடித்த இடம் போன்றவைகளைக் கட்டுரைகளாக உருவாக்கிட அறிவுறுத்தப்பட்டது. சில மாணவர்கள் ஊர் பெயரையும், பள்ளியின் பெயரையும் கொண்டு கட்டுரைகளை உருவாக்கினர். ஒரு மாணவி அகத்தியர் அருவி எனும் கட்டுரையை உருவாக்கினார்.
- பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்களிப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
நிகழ்வின் படத் தொகுப்பு
[தொகு]-
நிகழ்வு தொடக்கத்துக்கு முன்பாக மாவட்ட ஆட்சியருடன் கலந்துரையாடல்
-
மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அனைவருடனான படம்
-
நிகழ்வில் கலந்து கொண்டவர்களது ஒரு பகுதி
-
நிகழ்வில் கலந்து கொண்டவர்களது மற்றொரு பகுதி
-
மலையாள விக்கிப்பீடியர் விஸ்வ பிரபாவிற்கு நினைவுப் பரிசளிப்பு
-
தமிழ் விக்கிப்பீடியா குறித்த தேனி எம். சுப்பிரமணியின் அறிமுக உரை
-
ஆங்கில விக்கிப்பீடியா குறித்த விஸ்வ பிரபா அறிமுக உரை
-
விக்கிப்பீடியா பயிற்சியளிப்பதற்கான உரை
-
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சியளிக்கும் ஸ்ரீதர்
-
தமிழ் விக்கிப்பீடியா பயிற்சியளிக்கும் தேனி எம். சுப்பிரமணி மற்றும் முனைவர் துரை. மணிகண்டன்
நிகழ்வு ஏற்பாடு
[தொகு]- கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம், நாகர்கோவில் மற்றும் கணினி அறிவியல் மற்றும் கணினிப் பொறியியல் துறை, பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில்.
நிகழ்வுப் புரவலர்
[தொகு]- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, கோணம் கிளை, நாகர்கோவில்.
நிகழ்வுக்கான ஒத்துழைப்பு
[தொகு]கல்லூரி நிகழ்வுக்கான ஒத்துழைப்பு:
- பேராசிரியர் முத்துமாரி, துணைப் பேராசிரியர், பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி, நாகர்கோவில். (அலுவலர் ஒருங்கிணைப்பாளர்)
- விக்னேஷ் மணிகண்டன் (மாணவர் ஒருங்கிணைப்பாளர்)
விக்கிப்பீடியர்கள் தங்குமிடம் மற்றும் உணவுக்கான ஒத்துழைப்பு:
- ஸ்டீபன் (மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், கன்னியாகுமரி மாவட்டம்)
- தங்கராஜ் (அலுவலர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி மாவட்டம்)
- ராஜேந்திரன் (அலுவலக உதவியாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி மாவட்டம்)
- முருகன் (ஓட்டுநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கன்னியாகுமரி மாவட்டம்)
விக்கிப்பீடியர்கள் ஒருங்கிணைப்பு மற்றும் தகவல் தொடர்பு
[தொகு]- சௌம்யன், செயல் மேலாளர், விக்கிமீடியா இந்தியப் பிரிவு, பெங்களூரு.