உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:மார்ச் 5, 2011 விக்கிப் பட்டறை புத்தனாம்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு திருச்சி அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் மார்ச் 5, 2011ல் ஒரு விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டமும் பட்டறையும் நடைபெற்றன. அக்கல்லூரியின் கணினியல் துறைத் தலைவராக இருக்கும் பேரா. முரளிதரனும் அவரது நண்பர் திரு.செல்வகுமார், நூலகரும் இதற்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.


பங்கு கொண்ட விக்கியர்கள்[தொகு]

நிகழ்ச்சி நிரல்[தொகு]

  • 05-03-2011 சனிக்கிழமை காலை 10.30 மணி விக்கி பட்டறை துவக்கம்
  • இடம் : குளிரூட்டப்பட்ட பயிலரங்கம்
  • தலைமை : முனைவர்.கே.இராமசாமி , முதல்வர், நேரு நினைவுக் கல்லூரி
  • வாழ்த்துரை : பொறியாளர், திரு.பொன் பாலசுப்ரமணியன் , தலைவர், நேரு நினைவுக் கல்லூரி
  • மதியம் 2.00 மணி - விக்கி - நமது பங்களிப்பு - நேரலை பயிற்சி வகுப்பு
  • இடம் : கணினி மையம்

பேருந்து வழிதடம்[தொகு]

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரி திருச்சி மற்றும் துறையூர் ஆகிய இரு நகரங்களிடையே உள்ளதால் , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகரப்பேருந்துகளும், துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து சிற்றுந்து மற்றும் நகரப் பேருந்துகளும் உள்ளன.

நிகழ்ச்சிக் குறிப்புகள்[தொகு]

நிகழ்வு இரு அமர்வுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. காலை 11 மணி முதல் 1 மணி வரை விக்கிப்பீடியா அறிமுகக் கூட்டமும். மதியம் 2 மணி முதல் 3.30 மணி வரை தொகுத்தல் வகுப்பும் நடைபெற்றன. பட்டறை துவக்க நிகழ்வில் கல்லூரியின் தலைவர் திரு. பொன். பாலசுப்ரமணியன், பேரா. சந்திரசேகரன், பேரா. முரளிதரன், நூலகர் திரு. செல்வக்குமார் ஆகியோர் உரை ஆற்றினர்.

இப்பட்டறை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒரு நல்கைத் திட்டத்தின் கீழ் நடத்தப்பட்டது. இந்த நல்கை கல்லூரி மாணவர்களை இந்திய அரசுப் பணித் தேர்வுகளுக்குத் தயார் செய்ய வழங்கப்படுகிறது. எனவே விக்கிப்பீடியா அறிமுகம் என்பது பொதுவான அறிமுகமாக மட்டும் இல்லாமல், விக்கிப்பீடியாவை ஒரு கல்வி மற்றும் பொது அறிவு வளவசதியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்ற போக்கிலும் இருந்தது. அறிமுக அமர்வில் சுமார் 100 மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். புத்தகங்களைப் பயன்படுத்தி பெறும் அறிவை விட எப்படி ஒரு மின் கலைக்களஞ்சியத்தின் மூலம் எளிதாக, மனதில் நீண்ட நாள் பதியக்கூடிய வண்ணம் பல விஷயங்களைப் பற்றி அறியலாம். எப்படி விக்கிப்பீடியா கட்டுரைகளின் உசாத்துணைகள் ஆராய்வது, தேடுவதன் மூலம் பல வளவசதிகளை அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்று விளக்கினேன். பின்னர் வழக்கமான விக்கி அறிமுகத்தை செய்தேன். இரண்டு மணி நேரம் பல எடுத்துக்காட்டுகளுடன் ஆங்கில+தமிழ் விக்கித் திட்டங்களை விளக்கினேன். இந்திய ஆட்சிப் பணித் தேர்வுக்குத் தயார் செய்யும் மாணவர்கள் சிலர் பல கூரிய கேள்விகளைக் கேட்டனர். (நடுநிலை + நம்பகத்தன்மை+ உசாத்துணைகளின் தரம் பற்றி)

மதியம் கணினி ஆய்வுக் கூடத்தில் 50 மாணவர்களுடன் நேரடி தொகுத்தல் வகுப்பு நடத்தினேன். நேரு நினைவுக் கல்லூரி என்ற கட்டுரையை உருவாக்கி அனைவரும் சேர்ந்து தமிழ் தட்டச்சு, உள்ளிணைப்புக் கொடுத்தல், விக்கி நடை, தகவல்களை எப்படி எழுதுவது, எப்படி உசாத்துணைகளை இணைப்பது, எம்மாதிரி உசாத்துணைகளைப் பயன்படுத்தலாம், படம் எப்படி பதிவேற்றுவது, கட்டுரையில் இணைப்பது ஆகியவற்றைப் பழகினோம். மாணவ மாணவிகளின் துருதுருப்பால் நேற்று கனக்சுக்கு ஏகப்பட்ட துப்பரவு வேலைகள் உருவாகின :-). பின் விக்கிக்கு ஏன் பங்களிக்க வெண்டும், தமிழ் விக்கித் திட்டங்களின் வரலாறு போன்றவற்றையும் எடுத்துரைத்தேன். காலையில் அறிமுகத்துக்கு வந்தவர்களில் பாதிப்பேர் மட்டும் தொகுத்தல் வகுப்புக்கு வந்திருந்தனர். இரு அமர்வுகளாக தொகுத்தல் வகுப்பினை நடத்த திட்டமிட்டிருந்தொம் (ஆய்வுக்கூடத்தின் கொள்ளளவு சுமார் 50). ஆனால் கணினித்துறை மாணவர்களும் ஆசிரியர்களும் மட்டுமே தொகுத்தல் வகுப்புக்கு வந்திருந்தனர். பிற துறை மாணவர்கள் கணினி/இணைய பரிச்சயம் இல்லாமையால் கூச்சப்பட்டுக் கொண்டு வராமல் இருந்து விட்டனர். தொகுத்தல் வகுப்புக்கு வந்திருந்தவர்கள் அனைவரும் கணினித்துறையினர் என்பதால் விக்கி நிரலாக்கத்தை எளிதில் புரிந்து கொண்டனர் (வழக்கமாக விக்கி மார்க் அப் மொழியை விளக்குவதற்கு ஏற்படும் சிரமம் இதனால் இல்லை). கணினித் துறை மாணவர்களைத் தவிர முனைவர் ஆய்வுப் பட்ட மாணவர்கள் சிலரும் ஆர்வத்துடன் வந்து கலந்து கொண்டனர். அவர்களுக்கு உசாத்துணை + கட்டுரையாக்கம் பற்றி விளக்கத் தேவையிருக்கவில்லை. தமிழ் விக்கியில் முதலில் துறைகளின் அடிப்படைக் கட்டுரைகள் முதலில் தேவை, அதன் பின் அவரவர் ஆய்வுத் துறைகளில் ஆழமான கட்டுரைகளை எழுதலாம் என்று சொன்னேன்.

இதுவரை நகர்ப்புற மாணவர்களைச் சந்தித்து வந்த எனக்கு, ஊரக மாணவர்களைச் சந்திப்பது வித்தியாசமான அனுபவம். நகர்ப்புற மாணவர்களுக்கு இணையத்தில் பிற பொழுதுபோக்கு சாத்தியங்கள் அதிகம் (சோசியல் மீடியா வகையறா), அவர்களை சீரியசான விக்கிப் பங்களிப்பில் ஈடுபடுத்தக் கவரவேண்டியுள்ளது. ஆனால் ஊரக மாணவர்களின் தயக்கம் வேறு மாதிரி உள்ளது - புதிய விஷயங்களுக்கு உடனே முன்வர சற்றே கூச்சப்படுகிறார்கள். வலிந்து சென்று பிடித்து இழுத்துவர வெண்டியுள்ளது (figuratively not literally). நேரு நினைவுக் கல்லூரிக்குச் சென்றதில் வேறு சில நன்மைகளும் கிடைத்தன. அங்கு உள்ள அருமையான நூலகத்தில் வீரமாமுனிவரின் சதுரகராதி 1928 பதிப்பினைக் கண்டேன். நம் கட்டுரைக்கு படமாக இட முதல் பக்கத்தினை படம் பிடித்துக் கொண்டேன்.

பட்டறைக்கு ஏற்பாடு செய்து மாணவர்களிடம் விக்கியினை எடுத்துச் செல்ல உதவிய இருந்த திரு. செல்வகுமார், பேரா. முரளிதரன் ஆகியொருக்கும் விக்கி சமூகத்தின் சார்பில் என் மனமார்ந்த நன்றிகள்.--சோடாபாட்டில்உரையாடுக 06:54, 6 மார்ச் 2011 (UTC)

படங்கள்[தொகு]