உள்ளடக்கத்துக்குச் செல்

விக்கிப்பீடியா:சனவரி 25, 2012 சேலம் தமிழ் விக்கிப்பீடியா பரப்புரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சேலம் -ஆசிரியர்களுக்கு தமிழ்ப் பாடநூல் பாடப்பொருள் வலுவூட்டல் பயிற்சியில் ஒரு பகுதியாக கற்பித்தலுக்காக இணையத்தைப் பயன்படுத்தல் என்ற தலைப்பில் இன்று- 25.1.2012 விக்கி பீடியா பற்றியும் அதிலுள்ள கட்டுரைகள், ஊடகங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துதல் பற்றி விளக்கினேன். 6,7,8 ஆம் வகுப்புத் தமிழ் பாடத்துடன் தொடர்புடைய பல கட்டுரைகளை தமிழ் விக்கிபீடியாவில் இருப்பதைக எடுத்துக் காட்டினேன். ஆசிரியர்கள் ஆர்வமுடன் முன்வந்தனர். ஏனெனில் தற்போது அனைத்து மேநிலை உயர்நிலைப் பள்ளிகளிலும் இணைய வசதி தரபட்டுள்ளது. விக்கி ஊடகப் போட்டி பற்றியும் பரப்புரை செய்யப்பட்டது.

பயனர்: --Parvathisri 13:34, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கருத்துகள்

[தொகு]

நல்ல செய்தி, பார்வதி. பாராட்டுகள். விக்கிப்பீடியா தவிர்த்து விக்கிமூலம், விக்சனரி, விக்கி நூல்கள் குறித்தும் அறிமுகப்படுத்தி இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இவையும் கல்விப்பணிக்குப் பயன் மிக்கவை. விக்கிப்பீடியாவுக்கு வெளியே, நூலகம் திட்டம், மதுரைத் திட்டம், தமிழ் இணையப் பல்கலைக்கழக இணையத்தளம் ஆகியவையும் பயன் மிகுந்தவை--இரவி 13:38, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

ஆம் இரவி. தாங்கள் மேற்குறிப்பிட்ட செய்திகளையே தான் நானும் விளக்கினேன். மேலும் அவற்றைத் தேடுவது, விக்கியில் பங்களிப்பு செய்வது, (தட்டச்சு, தமிழ் நடை, பிழைதிருத்தம்) ஆகியவை குறித்தும் விளக்கினேன்.

--Parvathisri 13:46, 25 சனவரி 2012 (UTC) மிக்க மகிழ்ச்சி. http://dsal.uchicago.edu/dictionaries/list.html#tamil பற்றி குறிப்பிட மறந்துவிட்டேன். இந்த அகரமுதலிகள் ஆசிரியர்களுக்கு மிகவும் பயன் மிக்கதாக இருக்கும்--இரவி 14:17, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள். :) உங்கள் பணி மென்மேலும் சிறப்படைய வாழ்த்துகிறேன். -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 14:13, 25 சனவரி 2012 (UTC)👍 விருப்பம்--shanmugam 14:15, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்--மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 17:48, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
வாழ்த்துக்கள். விக்கி பரப்புரை/பயிற்சிகளில் கோப்புகள் ஏதும் பயன்படுத்துகிறீர்களா? அவ்வாறெனில் பகிர்ந்து கொள்ளுங்களேன். நற்கீரன், சூர்யா போன்றவர்கள் சிலரும் பவர்பாயின்ட் போன்ற தமிழ் விக்கி கோப்புகள் வைத்துள்ளனர். அவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்களின் முன்முயற்சியால் மேலும் பல ஆசிரியர்கள் தமிழ் விக்கிக்கு பங்களிக்க முன்வருவார்கள் என்று நானும் எதிர்பார்க்கிறேன். நன்றி --மாகிர் 14:38, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
👍 விருப்பம் --எஸ்ஸார் 14:44, 25 சனவரி 2012 (UTC)

செய்தி அறிந்து, படங்களையும் பார்த்து மிக மகிழ்ந்தேன்! நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்! இப்படி ஒவ்வொருவரும் செய்தால் விரைந்து பரவும். உங்கள் தொண்டுக்கும், அக்கறை எடுத்து உடன்பணியாற்றுவோருக்கு உதவும் முகமாக அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி! --செல்வா 14:55, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

அருமையான செய்தி, பார்வதி. விக்கிப்பீடியாவை ஆசிரியர்களின் நடுவே அறிமுகப்பட்டுத்தியதற்கு மிக்க நன்றி. வாழ்த்துகள்! -- சுந்தர் \பேச்சு 16:14, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
உங்களது பரப்புரை குறித்து அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். இளமையில் கல் என்றவண்ணம் பள்ளி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதலை வழங்கவும் தமிழ் விக்கிப்பீடியா தொகுப்பில் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்கவும் தங்கள் பரப்புரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்த்துகள் !!--மணியன் 16:40, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]
மிகவும் பாராட்டத்தக்க முயற்சி. வாழ்த்துகள்.--பரிதிமதி 18:01, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் பார்வதி. படங்கள் நன்றாக உள்ளன. விக்கிமீடியாவில் ஏற்றப்பட்டுள்ள இவ்வாறான பரப்புரைப் படங்கள் தகுந்த பகுப்பு ஒன்றினுள் சேர்க்கப்பட வேண்டும். இவற்றுக்கு ஏற்கனவே பகுப்புகள் உள்ளனவா என்று தேட முடியவில்லை. இந்த உப பகுப்பை Category:Tamil_Wikipedia என்ற தாய்ப்பகுப்புக்குள் சேர்க்க வேண்டும். சோடாபாட்டில் கவனிக்க வேண்டும்.--Kanags \உரையாடுக 23:29, 25 சனவரி 2012 (UTC)[பதிலளி]

கனகு சிறீதரன், பார்வதி, பகுப்பு:2011 விக்கிப்பீடியா நிகழ்வுகள் என்னும் பகுப்பைப் பாருங்கள், அதன் தாய்ப்பகுப்பையும் பாருங்கள் (இங்கே பாருங்கள்). 2012 உக்கும் ஒரு நிகழ்வு அப்பகுப்பில் உள்ளது. --செல்வா 00:41, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]
இல்லை செல்வா, நான் குறிப்பிட்டது விக்கிப்பீடியா கட்டுரைப் பகுப்புகள் அல்ல. விக்கிமீடியா படிமப் பகுப்புகளையே. பொதுப் படிமங்கள் அனைத்தும் தகுந்த ஒரு விக்கிமீடியாப் பகுப்புக்குள் சேர்க்கப்பட வேண்டும்.--Kanags \உரையாடுக 00:54, 26 சனவரி 2012 (UTC)[பதிலளி]

👍 விருப்பம் --கிருஷ்ணபிரசாத் /பேசுக 00:57, 26 சனவரி 2012 (UTC) வாழ்த்துக்கள் பார்வதி. உங்கள் பணி தொடரட்டும்.--கலை 14:05, 27 சனவரி 2012 (UTC) [பதிலளி]