விக்கிப்பீடியா:டிசம்பர் 28, 2010 கிழக்குப் பல்கலைக்கழகம் தமிழ் விக்கிப்பீடியா பட்டறை
இடம், திகதி, நேரம்
[தொகு]- இடம்: கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை
- திகதி: டிசம்பர் 28, 2010, செவ்வாய்க் கிழமை
- நேரம்:மு.ப 9.00 - 12.30 (இலங்கை நேரம்)
கலந்து கொள்வோர்
[தொகு]பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர்கள்
பயிற்சி அளிப்போர்
[தொகு]நிகழ்ச்சி நிரல்
[தொகு]பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்
[தொகு]- பல்கலைக்கழகத்திடம் இருந்து அனுமதி பெறுதல் - சஞ்சீவி சிவகுமார் - ஆயிற்று
- கிழக்குப்பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் அனுசரணையில் பட்டறை ஒழுங்கமைப்புகள் செய்யப்பட்டன.
- கணினி வளங்கள் கிழக்குப்பல்கலைக் கழக தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் மையத்தினால் வழங்கப்பட்டன.
- துண்டறிக்கை, கையேடுகள், banner அச்சடித்தல் - உமாபதி - டிசம்பர் 20 முன்பு
- நிகழ்ச்சி நிரல் தயாரித்தல் - சஞ்சீவி சிவகுமார், கோபி, உமாபதி, அனைவரும்
- உபகரணங்கள் ஒழுங்குபடுத்தல் (கணினி (கள்), projector ?):பல்கலைக்கழக கணினி மையத்தில் பேசப்பட்டது.
- Information and Computer Technology(ICT) at Vavuniya Campus மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல்
பட்டறை பற்றிய குறிப்புகள்
[தொகு]கிழக்குப்பல்கலைக் கழக ஊழியர் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் கலாநிதி.பெ.வினோபாவாவின் அறிமுகப்படுத்தலுடன் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழிநுட்ப தொடர்பாடல் மையத்தில் பட்டறை ஆரம்பமானது.விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் என ஏறக்குறைய 55 பேர் பங்குபற்றினர்.
பயிற்சியின் வளவாளர்களாக சஞ்சீவி சிவகுமார்,உமாபதி ஆகியோர் செயற்பட்டனர்.
பிரதான வளாகத்திலிருந்து 20 கிலோமீட்டருக்கு அப்பால் அமைந்துள்ள சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகம், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம் என்பவற்றிலிருந்தும் பலர் பட்டறையில் பங்குபற்றினர்.
- ஒரே IP முகவரியிலிருந்து 6 புதிய உருவாக்கு பதிகைகளுக்கு மேல் ஏற்படுத்தமுடியாமையால் புகுபதிகை செய்யாமலே பல புதுபயனர்கள் பயில்வில் ஈடுபட்டனர்.
- மற்றொரு தொடருறு(Follow up) பயில்வை அவாவியதாக பயில்வு நிறைவடைந்தது.
படங்கள்
[தொகு]வாழ்த்துக்கள்
[தொகு]மிகப் பயனுள்ள பயிற்சிப் பட்டறை வாழ்த்துக்கள்- ஜெயராஜ்.
விக்கிபீடியா உலகப் பல்கலைக்கழகம். அதில் எம்மையும் இணைத்துக் கொள்ள உதவியமைக்கு மிக்க நன்றி.--ச.ஹோபிநாத் 07:10, 28 திசம்பர் 2010 (UTC)
- சஞ்சீவி, உமாபதி இருவருக்கும் எனது வாழ்த்துக்கள். சாந்தரூபனும் இப்பட்டறையில் கலந்து கொண்டமையிட்டு மகிழ்ச்சி. வினோபாபாவுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவியுங்கள். மேலும் படங்கள் வேண்டும். கொம்மன்சில் பதிவேற்றி இங்கு இணைப்புக் கொடுப்பது நல்லது. உதாரணத்துக்கு இங்கு பாருங்கள். படத்தைப் பற்றிய சிறு விளக்கத்தையும் தந்தால் நல்லது. நன்றி.--Kanags \உரையாடுக 11:59, 28 திசம்பர் 2010 (UTC)
- வாழ்த்துக்கள் சஞ்சீவி மேலும் படங்களை தரவும் தொடர்ந்து மேலும் பல விக்கிபீடியா பயிலரங்கினை நடத்த முயற்சிக்கவும் அங்கு இடம்பெற்ற் மிக முக்கிய நிகழ்வுகளை பகிரவும் தவிர்க்க முடியாத பணி சுழலால் பங்குபெற முடியாமைக்கு வருந்துகின்றேன் --கலாநிதி 15:18, 28 திசம்பர் 2010 (UTC)
- பட்டறை இனிதே நடந்துள்ளது என்று கருதுகிறேன். வாழ்த்துக்கள். இப் பட்டறையில் ஒழுங்கமைப்பதில் இருந்த தடைகள், பேசப்பட்ட விடயங்கள், கேக்கப்பட்ட கேள்விகள், என்ன விடயங்கள் சேர்க்கப்பட்டால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும் போன்ற கருத்துக்களைப் பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும். --Natkeeran 16:12, 28 திசம்பர் 2010 (UTC)
- இனிதாக நடந்து முடிந்த இலங்கைக்கான தமிழ் விக்கிப்பீடியா பட்டறையினால் இனி இலங்கைப் பங்களிப்பாளர்களின் எண்ணிக்கையும்,பங்களிப்புகளும் அதிகரிக்க என் இனிய வாழ்த்துக்கள்.--தேனி.எம்.சுப்பிரமணி. 17:07, 28 திசம்பர் 2010 (UTC)