கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ்நாட்டிலுள்ளசேலம் மாவட்டத்தில் டிசம்பர் 11, 2011 அன்று ஒரு விக்கிப்பீடியா அறிமுக நிகழ்வுடன் கூடிய பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். நேரமும் வாய்ப்பும் இருப்பின் ஊடகப் போட்டிக்காக ஒரு சிறிய படநடையும் (photo-walk) மேற்கொள்ளலாம். எனவே வருவோர் குறைந்தபட்சம் ஒரு கைபேசியையோ படக்கருவியையோ (mobile or camera) அல்லது பதிவேற்ற தாங்கள் எடுத்த படங்களையோ கொண்டுவரலாம்.
இடம்: கணினி ஆய்வகம், பாவடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இரண்டாம் அக்ரஹாரம், சேலம்.
நேரம்: 11-12-11, காலை 10 மணி முதல் 1 மணி வரை (அறிமுகம் 1 மணி நேரம்; தொகுத்தல் பயிற்சி 2 மணி நேரம்; முடிந்தால் விக்கியூடகப்போட்டி அறிமுகமும் அருகிலுள்ள இடங்களுக்கு ஒரு சிறிய படநடையும் (photo-walk))
பழைய பேருந்து நிலையத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாகச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகளிலும் வரலாம். பங்குதானிகளும் (Share autos) நிறைய உள்ளன. பட்டைக் கோவில் நிறுத்தம் எனக் கேட்கவும். அங்கிருந்து வலப்புறம் பார்த்தாலே பள்ளி தெரியும்.
ஆத்தூர், வாழப்பாடி போன்ற ஊர்களில் இருந்து வரும் போது புதிய பேருந்து நிலையமோ தொடர்வண்டி நிலையமோ வரத் தேவையில்லை. அம்மாப்பேட்டை கூட்டு ரோடு இறங்கி பங்குதானியிலோ நகரப் பேருந்திலோ வரலாம். (புதிய பேருந்து நிலையத்தில் இருந்தும், தொடர்வண்டி நிலையத்திலிருந்தும் வருவதானால் பழைய பேருந்து நிலையத்திற்கு வர 13 ஆம் எண் பேருந்து மற்றும் நிறைய பேருந்துகள் உள்ளன.)