விக்கிப்பீடியா:பெங்களூரு தமிழ் விக்கிப்பீடியா அறிவகம்
சனவரி 31, 2009 சனி அன்று பெங்களூருவில் தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை நடைபெற இருக்கிறது. நேர விவரம் விரைவில் அறிவிக்கப்படும். கலந்து கொள்ள ஆர்வமுள்ளோர் இங்கு பெயர் பதியலாம். உங்கள் பெயரைப் பதிய, இப்பக்கத்தின் மேல் "தொகு" என்று உள்ளதைச் சொடுக்கவும்.
பட்டறை பற்றிய விபரங்கள்
[தொகு]- திகதி: சனவரி 31, 2009, சனிக் கிழமை
- இடம்: கோரமங்களா.
- நேரம்: மாலை 3:00 மணி தொடங்கி 7:00 மணி வரை
கலந்து கொள்வோர்
[தொகு]பட்டறை தேதி சனவரி 31, சனிக்கிழமைக்கு மாறி உள்ளதைக் கவனிக்கவும். தங்கள் தொலைப்பேசி எண்ணையும் பதிந்தால் பட்டறை குறித்த தகவலைத் தெரிவிக்க இயலும்.
- Prabhurajk
- n.asai
- தமிழ்நம்பி
- K.Senthil Kumar
- அராபத் ரியாத்
- senthilkumar N.K.
- Ramesh KJ
- Shajahan S
- Swaminathan Moorthy
- user:நிலவன்
- பொதுவன் அடிகள் (தேதி மாற்றப்பட்டுள்ளது. கலந்துகொள்ள இயலவில்லை)--59.92.97.178 21:11, 30 ஜனவரி 2009 (UTC)
- Babu Alagarsamy
- மோஜோசாரஸ்
பயிற்சி அளிப்போர்
[தொகு]நிகழ்ச்சி நிரல் (வரைவு)
[தொகு]- தமிழ் விக்கிப்பீடியா இதுவரை
- தமிழ் விக்கிப்பீடியா இனி
- தமிழ் தட்டச்சு (குறிப்பிடத்தக்க நேரம் இதற்கு ஒதுக்கப்பட தேவைப்படலாம்.)
- விக்கிப்பீடியாவில் பயனர் எப்படி பங்களிக்கலாம்?
- கட்டுரையாக்கம்
- கட்டுரை மேம்படுத்தல்
- மொழிபெயர்ப்பு
- விக்கியாக்கம்
- மேற்கோள் சேர்த்தல்
- வகைப்படுதல்
- இன்றைப்படுத்தல்
- நிர்வாகம்
- அறிமுகப்படுத்தல், தொடர்பாடல்
- நிரலாக்கம்
- வரைகலை
- படம் சேர்த்தல்
- கருத்து பகிர்வு
- மெய்ப்பு பார்த்தல்
- தமிழில் எழுதுதல்
- கலைச்சொற்கள்
- தமிழ் விக்சனரி - 100 000 சொற்கள்
- தமிழ்க் கணிமையும் தமிழ் விக்கிப்பீடியாவும்
- விக்கிப்பீடியாவை தம்மொழியாக்குதல் (Localization)
- இந்தி பொறிமுறை மொழிபெயர்ப்பு, தமிழில் முடியுமா? (உள்ளடக்க உருவாக்கத்தில் இது உதவும்)
- தமிழ் விக்கிப்பீடியா மீது விமர்சனங்கள்
நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள்
[தொகு]ஜனவரித்திங்கள் 31ம் தேதி மாலை நான்கு மணியிலிருந்து இரவு 8:30 மணிவரை இப்பட்டறையில் பங்குபெற்றேன். 6 பேர் கலந்துகொண்டு இதில் பங்கு பெற்றனர். முகுந்த், சுந்தர், பாலாஜி,சந்தோசுகுரு ஆகியோருடன் நானும் (சத்தியா) கலந்துகொண்டேன். ஆரம்ப அறிமுகங்களுக்கு முடிந்தபின், ஏற்கனவே நடந்த பதிவர் பட்டறைக்காக தயாரிக்கப்பட்ட முன்னிறுத்தத்தை(presentation) சுந்தர் வழங்கினார். அதன்பின் தமிழ்தட்டச்சு பற்றிய அறிமுகங்கள், மென்பொருட்களை அடையும் மற்றும் பயன்படுத்தும் வழிமுறை ஆகியவை பற்றி முகுந்த் விளக்கினார்.
இதில் முரசுஅஞ்சல், தமிழ்99, e-kalappai, NHMWriter,அதியன் ஆகியவை குறிப்பிடப்பட்டன. விக்கி குறியீடுகள் பற்றிய அறிமுகத்தை பாலாஜியும், அதன் செய்முறை பயன்களை உடனுடனே சுந்தரும் வழங்கினர். தொடர்புடைய மற்ற குறிப்புகளையும்,சந்தேகங்களையும் சந்தோசு குருவும் நானும் இடையிடேயே நிரப்பினோம்.
ஆர்வலர்களின் பங்கேற்பு மிகச்சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. சிலருக்கு ஏற்கனவே ஆங்கில விக்கிப்பங்களிப்பின் அறிமுகம் இருந்தது. நிலவன் ஒரு பயனர் கணக்கையும் ஒரு விக்கிப்பக்கத்தையும் உருவாக்கினார். கனகுவின் வாழ்த்து செய்தி அப்போதே வந்து இருந்தவர்களை வியப்படையவைக்கவும் எல்லா நேரவலையிலும் பங்களிப்பாளர்கள் இருப்பதை உறுதி செய்து உதவிகளை பெறுவதற்கான தன்னம்பிக்கையையும் அளித்திருக்கும்.
பின்னர் பல்வேறு சந்தேகங்களையும், கொள்கை தொடர்பான விளக்கங்களையும், மனத்தடைதொடர்பான விவரங்களையும், பங்களிப்பாளர்கள் ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். விக்கி மற்றும் தமிழ்த்தட்டச்சு தொடர்பான பரப்புதலைப்பற்றியும் பங்களிப்பாளர்கள் தங்கள் குறைகளையும் ஆதங்கங்களையும் பகிர்ந்துகொண்டது பிற முயற்சிகளுக்கான நல்ல ஊக்கியாக அமைந்திருந்தது.
விக்சனரியின் பயன்பாடுகள் பற்றியும் விவரமாக விளக்கப்பட்டது. அதன் நுட்பசாத்தியங்களை முகுந்த் கேட்டறிந்துகொண்டார். சில நல்ல முயற்சிகளுக்கான அவருடைய ஆர்வத்தினை ஏற்படுத்தவதாக அது அமைந்தது.
முக்கிய கேள்வியாக விக்கிப்பீடியாவில் பங்களிப்பதால் என்ன பயன் என்பது விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து INFITT பற்றிய எளிய விளக்கம் கொடுக்கப்பட்டது.
மனத்தடைகளை உருவாக்குவதற்கான காரணிகளாக குறிப்பிடப்பட்டவை
- ஆரம்ப முனைவோருக்கு மிரட்டுவதாக இருக்கும் மிகப்பெரிய கொள்கை விளக்கங்கள் - தேவை குறுக்கப்பட்ட தெளிவான வழிகாட்டிகள்
- வழிகாட்டுதல் குழுதொடர்பானவை- மின்னஞ்சல் குழுமம் ஆர்குட் குழு போன்றவைகள் வழிமுறையாக இருக்கலாம்.
- தமிழ்தட்டச்சு
அடுத்தகட்ட நடவடிக்கைகளாக பரிந்துரைக்கபட்டவை
- விக்கிப்பட்டறைகளை திங்கள்(மாதம்)தோறும் நடத்துவது
- blogcamp, wikicamp,barcamp என்று அடுத்ததோ ஒன்றாகவோ நடத்துவது
- சிறுகுழுக்களாக பிரிந்து நடத்துவதற்கும், பெரிய குழுவாக இருப்பின் அதற்கான கட்டமைப்புகளை அடையும் சாத்தியங்களையும் அறிதல்
- IISCல் நடைபெறும் தமிழ்ச்சங்க கூட்டத்தில் விக்கிப்பீடியா பட்டறையை நடத்துவதற்கான திட்டமிடல்
ட்விட்டரில் த.விக்கி தொடர்பான செய்திகளையும் கருத்துக்களையும் #tawiki எனும் குறிச்சொல்லுடன் பரிமாறிக்கொள்ள முடிவுசெய்யப்பட்டது.
பங்குபெற்றோர் அனைவரையும் வாரம் ஒரு கட்டுரையாவது எழுத வேண்டுகோள் விடப்பட்டது
பாலாஜி மதுரைத்திட்ட குறுந்தகடுகளை வழங்கினார் --72.163.216.217 07:22, 2 பெப்ரவரி 2009 (UTC)சத்தியா