விக்கிப்பீடியா:ஏப்பிரல் 26, 2013 கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப்பட்டறை
கொழும்பு தமிழ் விக்கிப்பீடியா பட்டறை : 2013 ஏப்ரல் 26 வெள்ளிக்கிழமை அன்று தமிழ் விக்கிப்பீடியா அறிமுகப் பட்டறை நடந்தது.
இடம், திகதி, நேரம்
[தொகு]- இடம்: தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபம், 121, ஹம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை, கொழும்பு.
- திகதி: ஏப்ரல் 26, 2013, வெள்ளிக்கிழமை
- நேரம்: மாலை 6.00 - 8.00 (இலங்கை நேரம்)
ஏற்பாட்டாளர்கள்
[தொகு]- இலங்கை தமிழ் விக்கிப்பீடியர்கள்
- சமூக விஞ்ஞான கற்கை வட்டம், இலங்கை
கலந்து கொண்டோர்
[தொகு]- மயூரநாதன்
- இரவி
- சஞ்சீவி சிவகுமார்
- மு. மயூரன்
- கோபி
- க.சங்கீர்த்தன்
- கா. சேது
- கே. எஸ். சிவகுமாரன்
- சந்திரன் - பாண்டிச்சேரி பிரெஞ்சுக் கழகத்தைச் சேர்ந்த ஒளிப்பட ஆவணக் கலைஞர்.
- இரா. தமிழ்செல்வன் - புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர்.
- முனைவர். ந. வேலுசாமி, பெரியார் பல்கலைக்கழகம், சேலம்.
மற்றும் பலர்.
நிகழ்ச்சி நிரல்
[தொகு]- கட்டற்ற உள்ளடக்கம், கட்டற்ற கலைக்களஞ்சியம் அறிமுகம் - மு. மயூரன்.
- தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் - சஞ்சீவி சிவகுமார்.
- தமிழ் விக்கிப்பீடியாவில் உலாவுதல், கட்டுரைகள் உருவாக்கல், பயனர் சமூக அறிமுகம் - இரவி.
நிகழ்ச்சிக் குறிப்புகள்
[தொகு]- விக்கிப்பீடியாவில் பட்டறை அறிவிப்பு இருந்தாலும், விக்கிப்பீடியாவுக்கு அறிமுகம் இல்லாத பல பயனர்கள், மு. மயூரன் பேசுபுக்கில் இட்டிருந்த நிகழ்ச்சிக் குறிப்பைக் கண்டே வந்திருந்தனர். ஒவ்வொரு விக்கிப்பீடியரும், தன்னளவில் பரந்த சமூக வலைத்தள நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பதும், சமூக வலைத்தளங்களைப் பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையையும் இது உணர்த்தியது.
- நிகழ்ச்சிக்கு எதேச்சையாக வந்திருந்த கே. எஸ். சிவகுமாரன் பல பயனுள்ள ஐயங்களைக் கேட்டார். அவரது கட்டுரையையே ஒரு எடுத்துக்காட்டாக கொண்டு அதற்கான விளக்கங்களைத் தந்தது பலரது கவனத்தை ஈர்த்தது. இந்நிகழ்வின் போது, கொழும்புத் தமிழ்ச் சங்கம் என்ற கட்டுரையை உருவாக்கிக் காட்டினோம். உடனுக்குடன் அதற்கு வந்த தொகுப்புகளும் பிற அண்மைய மாற்றங்களும் தமிழ் விக்கிப்பீடியாவின் செயல் முனைப்பை உணர்த்தியது.
நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, தமிழ் விக்கிமீடியா இயக்கத்தின் நல்வளர்ச்சிக்கு வித்திட்டவரும் தொடர்ந்து பத்தாண்டுகளாக விக்கிப்பணியாற்றுபவருமான மயூரநாதனின் பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விக்கிப்பீடியர்கள் அனைவரும் இணைந்து சிறிய நினைவுப் பரிசு ஒன்றை வழங்கினோம்.
இலங்கை முழுவதும் நடத்திய அறிமுகப் பட்டறைகள் / தனிபட்ட உரையாடல்களில் பின்வரும் கேள்விகள் திரும்பத் திரும்ப வருவனவாக இருந்தது:
- தமிழ் விக்கிப்பீடியாவை யார் / எந்த நிறுவனம் நடத்துகிறார்கள்?
- நான் ஏன் விக்கிப்பீடியாவில் கட்டுரை எழுத வேண்டும்? அல்லது, சும்மா ஏன் எழுத வேண்டும்? சும்மாவும் எழுதுகிறார்களா !
இதற்கான பதில்களை நாம் அனைத்து அறிமுகங்களிலும் முதலிலேயே தெளிவாக குறிப்பிடுவது நல்லது. தளத்திலும் விளக்கமாக இட வேண்டும்.
பயனர் அறிமுகங்களைக் காட்டுவது நல்ல வரவேற்பைப் பெறுகிறது. குறிப்பாக, இலங்கை போன்ற இடங்களில் அறிமுகப்படுத்தும் போது நாடுவாரியான பங்களிப்பாளர் பட்டியல் உதவுகிறது.
பட்டறையை ஒழுங்குபடுத்தல் - பணிகள்
[தொகு]- மண்டப ஒழுங்கு - மயூரன்
- துண்டறிக்கை தயாரிப்பு - சஞ்சீவி சிவகுமார்
- Projector உதவி - நூலகம் நிறுவனம்.
- அழைப்பிதழ் - அழைப்பு அனைவருக்குமான திறந்த அழைப்பே. ஆயினும் அதிக எண்ணிக்கையில் பங்குபற்றுதலை அதிகரிப்பதற்கான அழைப்பு - மயூரன்