தமிழ் விக்கிப்பீடியா (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியா
நூல் பெயர்:தமிழ் விக்கிப்பீடியா
ஆசிரியர்(கள்):தேனி மு. சுப்பிரமணி
வகை:கணினி மற்றும் இணையம்
துறை:இணையக் கலைக்களஞ்சியம்
இடம்:மெய்யப்பன் பதிப்பகம்,
53, புதுத் தெரு,
சிதம்பரம் 608 001
&
மணிவாசகர் பதிப்பகம்
31, சிங்கர் தெரு,
பாரிமுனை
சென்னை - 600 108
தொலைபேசி எண்: +91 - 44 -25380396
மொழி:தமிழ்
பக்கங்கள்:168
பதிப்பகர்:மெய்யப்பன் பதிப்பகம்
பதிப்பு:நவம்பர் 2010
ஆக்க அனுமதி:ஆசிரியருடையது
விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப்பட்டது.

தமிழ் விக்கிப்பீடியா, தேனி எம். சுப்பிரமணி எழுதிய ஒரு தமிழ் நூல். 2010ல் டெம்மி அளவில் 168 பக்கங்களில் வெளியானது.

அணிந்துரை[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தை உருவாக்கி, தமிழ் விக்கிப்பீடியாவை தமிழ் உலகுக்கு அறிமுகம் செய்த ஐக்கிய அரபு அமீரகம், அபுதாபியில் கட்டிடக் கலைஞராக/பொறியாளராக உள்ள இ. மயூரநாதன் இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.

உள்ளடக்கம்[தொகு]

"தமிழ் விக்கிப்பீடியா" என்கிற இந்நூலில்

 1. தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்
 2. தமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்
 3. தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்
 4. தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்
 5. தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்
 6. தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக் கட்டுரைகள்
 7. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்
 8. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்
 9. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை வார்ப்புருக்கள்
 10. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்
 11. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்
 12. தமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்
 13. தமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்
 14. தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்
 15. தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்
 16. தமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்
 17. தமிழ் விக்கிப்பீடியா முக்கியப் பயனர்கள்
 18. தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள்
 19. விக்கிமீடியா பிற திட்டங்கள்
 20. தமிழ் விக்கிப்பீடியா அழைப்பு

எனும் 20 தலைப்புகளின் கீழ் நூலின் உள்ளடக்கம் அமைந்துள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம்[தொகு]

இத்தலைப்பில் இணையம், என்சைக்ளோபீடியா எனும் கலைக்களஞ்சியம், இணையக் கலைக்களஞ்சியம், விக்கிப்பீடியா, பிற மொழி விக்கிப்பீடியாக்கள், தமிழ் விக்கிப்பீடியா போன்ற உள் தலைப்புகளில் செய்திகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா பகுப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் முக்கிய பகுப்புகளான தமிழ், பண்பாடு, வரலாறு, அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், புவியியல், சமூகம், நபர்கள் குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா பயனர்கள்[தொகு]

இத்தலைப்பில் பயன்பாட்டாளர்கள், பயனர்கள், பயனர் குழு மற்றும் தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் எனும் நான்கு உள் தலைப்புகள் உள்ளன. பயனர்கள் எனும் உள் தலைப்பினுள், பயனர் கணக்குத் தொடக்கம், பயனர் பெயர், என் பேச்சு, என் விருப்பத் தேர்வுகள், என் கவனிப்புப் பட்டியல், என் பங்களிப்புகள், விடுபதிகை போன்றவை குறித்த செய்திகளும், பயனர் குழு எனும் தலைப்பில் 1. பொது , பயனர், தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்கள், தானியங்கிகள் (அங்கத்தவர் பட்டியல்), நிர்வாகிகள் (அங்கத்தவர் பட்டியல்), அதிகாரிகள் (அங்கத்தவர் பட்டியல்), பயனர்கள் சரி பார்ப்பவர் (அங்கத்தவர் பட்டியல்), மேற்பார்வையாளர்கள் (அங்கத்தவர் பட்டியல்), நிர்வாக வாக்குக் குழு (அங்கத்தவர் பட்டியல்), பதிவிறக்கம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்),மொழிமாற்ற பதிவிறக்கம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்), பதிவேற்றம் செய்வோர் (அங்கத்தவர் பட்டியல்), தள வளர்ச்சியாளர் (அங்கத்தவர் பட்டியல்), முழுப்பார்வையாளர் (அங்கத்தவர் பட்டியல்) போன்ற தலைப்புகளில் செய்திகளும், இறுதியாக தமிழ் விக்கிப்பீடியாவின் பயனர்கள் எனும் தலைப்பில் செய்திகளும் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கொள்கைகளும் வழிகாட்டல்களும்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகள் எனும் தலைப்பில் விக்கிப்பீடியாவின் ஐந்துதூண்கள் எனப்படும் கலைக்களஞ்சியம், நடுநிலைமை, கட்டற்ற கலைக்களஞ்சியம், நன்னடத்தை மற்றும் இறுக்கமான விதிமுறைகள் இல்லாமை போன்றவைகளும், வழிகாட்டல்கள் எனும் தலைப்பில், விக்கி நற்பழக்க வழக்கங்கள் ஒழுங்குப் பிறழ்வுகள், மேற்கோள் காட்டுதல், விசமிகளை எதிர்கொள்தல் போன்ற பொதுவான தலைப்பில் வழிகாட்டல் செய்திகள் தரப்பட்டுள்ளன. இவை தவிர உள்ளடக்கம், தொகுத்தல், தமிழ் மொழி எனும் தலைப்பில் கட்டுரைகள் உள்ளீடு செய்தல், தட்டச்சு செய்தல் போன்ற பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள்[தொகு]

இத்தலைப்பில் பார்வையாளர் பங்களிப்புகள், பயனர் பங்களிப்புகள், பயனர் நிர்வாகிகள் பங்களிப்புகள், பிற பங்களிப்புகள் எனும் உள்தலைப்புகளில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா பயிற்சிக் கட்டுரைகள்[தொகு]

இத்தலைப்பில் வரவேற்பு, தொகுத்தல், வடிவமைத்தல், உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், பேச்சுப் பக்கம், கவனம் கொள்க, பதிகை, மறு ஆய்வு குறித்த பல தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் உருவாக்கம்[தொகு]

இத்தலைப்பில் கட்டுரைப் பொருள் தேர்வு, கட்டுரைத் தலைப்புத் தேர்வு, கட்டுரை அமைப்பு, தமிழ் தட்டச்சு, விக்கி குறிகள், கட்டுரை உள்ளீடு, முன் தோற்றம் பார்த்தல், பக்கங்களைச் சேமித்தல் மற்றும் இணைப்புகள் செய்தல் எனும் தலைப்புகளில் கட்டுரை உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை படிமங்கள்[தொகு]

இத்தலைப்பில் கட்டுரைக்கேற்ற படிமங்களை இடம் பெறச் செய்திட விக்கிப்பீடியாவின் படிமக் கொள்கைகள், படிம வகைகள், படிமம் பதிவேற்றம், கட்டுரையில் படிமத்தை அமைக்கும் முறைகள் போன்ற தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை வார்ப்புருக்கள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்டு வரும் முக்கியமான சில வார்ப்புருக்கள் குறித்த தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை அட்டவணைகள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகளுக்குத் தேவையான அட்டவணை அமைக்கும் சில வழிமுறைகள் சொல்லப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரை செயலிகள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கப்படும் ஒவ்வொரு கட்டுரையிலும் இடம் பெறும் செயலிகள் குறித்த தகவல்கள் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா அண்மைய மாற்றங்கள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் செய்யப்படும் ஒவ்வொரு மாற்றங்கள் குறித்த தகவல்களை அளிக்கும் அண்மைய மாற்றங்கள் பக்கம் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது.

தமிழ் விக்கிப்பீடியா பிற வழிமுறைகள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரை உருவாக்கத்திற்கு உதவும் மணல் தொட்டி, ஆலமரத்தடி, அகேகே, உதவிப் பக்கம், சமுதாய வலைவாசல், சிறப்புப் பக்கங்கள், தானியங்கிக் கட்டுரையாக்கம், கூகுள் தமிழாக்கம், செய்யத் தகுந்ததல்ல, பொதுவான குறைகள் மற்றும் துப்புரவு போன்ற தலைப்புகளில் சிறப்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா கட்டுரைகள் தரமறிதல்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவிலுள்ள கட்டுரைகளின் தரம், முக்கியத்துவம் குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா முதற்பக்கம்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் இடம் பெறும் கட்டுரைகள், செய்திகள், உங்களுக்குத் தெரியுமா?, இன்று, சிறப்புப்படம் போன்றவை குறித்த செய்திகள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா நடப்பு நிகழ்வுகள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் நடப்பு நிகழ்வுகளில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்திகள், மாதச் செய்திகள், மாத நாட்காட்டி, அண்மைய நிகழ்வுகள், அண்மைய இறப்புக்கள்,தொடர் பிரச்சனைகள்,செய்திக் காப்பகம்,வெளி செய்தி ஊடகங்கள் - தமிழ்,செய்தித் திரட்டிகள் - தமிழ், தொலைநோக்குத் திட்டச் செய்திகள் போன்ற உள் தலைப்புகளில் தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா முக்கியப் பயனர்கள்[தொகு]

இத்தலைப்பில் விக்கிப்பீடியர்கள், பயனர்கள் பட்டியல், பயனர் நிர்வாகிகள், அதிகாரிகள், காணாமல் போன விக்கிப்பீடியர்கள், பங்களிப்பாளர் அறிமுகம் மற்றும் முக்கியப் பயனர்கள் எனும் தலைப்பில் சில தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள்[தொகு]

இத்தலைப்பில் தமிழ் விக்கிப்பீடியாவின் ஆண்டறிக்கை மற்றும் புள்ளி விபரங்கள் குறித்த பல தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.

விக்கிமீடியா பிற திட்டங்கள்[தொகு]

இத்தலைப்பில் விக்கிமீடியா அமைப்பின் பிற திட்டங்களான விக்சனரி, விக்கி நூல்கள், விக்கி மேற்கோள்கள், விக்கி மூலம், விக்கி இனங்கள், விக்கி செய்திகள், விக்கி பொது, விக்கி பல்கலைக்கழகம், மேல் - விக்கி மற்றும் பிற விக்கித் திட்டங்கள் குறித்த தகவல்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ் விக்கிப்பீடியா அழைப்பு[தொகு]

இத்தலைப்பில் முடிவாக தமிழ் விக்கிப்பீடியாவில் தமிழறிந்த அனைவரும் பங்களிக்க முன் வருமாறு அழைப்பு விடப்பட்டுள்ளது.

நூல் வெளியீடு[தொகு]

சென்னையில் சென்னைத் தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற்ற விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டு கொண்டாட்ட நிகழ்வில் தமிழ் விக்கிப்பீடியா நூல் வெளியிடப் பெற்றது. கிழக்குப் பதிப்பகம் உரிமையாளர் பத்ரி சேஷாத்ரி நூலை வெளியிட முதல் பிரதியைப் பத்திரிகையாளர் சுகதேவ் (இளையபெருமாள்) பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியைக் கவிஞர். டாக்டர் இமாம் கவுஸ் மொய்தீன் பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு அரசு பரிசு[தொகு]

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் 31 வகைப்பாடுகளில் சிறந்த நூல் மற்றும் நூலாசிரியர், பதிப்பகங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றன. 2010 ஆம் ஆண்டு வெளியான நூல்களில் கணினியியல் துறை நூல்களில் சிறந்த நூலாக இந்நூல் தேர்வு செய்யப்பட்டது.[1]

முதலமைச்சர் பாராட்டு[தொகு]

2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 ல் நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நூலாசிரியர் மு. சுப்பிரமணியைப் பாராட்டி பரிசுத் தொகை ரூபாய் முப்பது ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழையும் வழங்கினார்.

மேற்கோள்கள்[தொகு]

 1. தமிழ்நாடு அரசு செய்தி வெளியீட்டு எண்:254 நாள்:10-04-2012.

வெளி இணைப்புகள்[தொகு]