உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1975

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1975 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் '1975 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள்' மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் தலைப்பு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 கவிதை 1.உரைவீச்சு (முதல் பரிசு) சாலை இளந்திரையன் 1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை.
2 மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் 1.பெரியபுராண ஆய்வுரை (முதல் பரிசு)
2. ஒப்பிலக்கிய நோக்கில் சங்க காலம் (இரண்டாம் பரிசு)
1. மறை திருநாவுக்கரசு
2. கதிர் மகாதேவன்
1. மறைமலையடிகள் பதிப்பகம், சென்னை.
2. இலட்சுமி வெளியீடு, மதுரை.
3 மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் 1.மலர்க மாநில சுயாட்சி (முதல் பரிசு) கே. எஸ். ஆனந்தம் 1. தங்கம் பதிப்பகம், கோபிசெட்டிபாளையம்.
4 குழந்தை இலக்கியம் வள்ளல்கள் வரலாறு (முதல் பரிசு) வே. தில்லைநாயகம் ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை.