இ. மயூரநாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடி இ. மயூரநாதன்

இ. மயூரநாதன் (R. Mayooranathan) என்பவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாவார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் 2003 நவம்பர் 20 ஆம் திகதி புகுபதிந்துள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவை 2003, செப்டம்பர் 30 ஆம் திகதியே உருவாக்கும் முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தை உருவாக்கியவரும் இவரே ஆவார். ஆரம்பகாலங்களில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முயன்றோர் ஒரு சில தொகுப்புகளுடன் மறைந்துவிட்ட நிலையிலும் இ. மயூரநாதன் தமிழரின் நலன் சார்ந்து இந்த கலைக்களஞ்சியத்தை வளர்க்கும் முயற்சியில் இடையறாது உழைத்து வருபவர் ஆவார்.[1] விக்கிப்பீடியாவின் சிறப்புகளில் ஒன்றான வரலாற்றுப் பக்கங்கள் இ. மயூரநாதனின் பங்களிப்புக்களை வரலாறாக காட்டிநிற்கின்றன. இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவர். ஐக்கிய அரபு இராச்சியத்தில், கட்டக்கலைஞராக தொழில் புரியும் இவர் யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றவராவார்.

மயூரநாதனின் இணைவு[தொகு]

இ. மயூரநாதனின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் திகதி பதிவாகியு}}ள்ளது.[2] இவரால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தோற்றம் 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.[3] அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டிருந்துள்ளார். அவை அந்த இடைமுகத் தோற்றத்தின் அடிப்பாகத்தில் அப்படியே உள்ளன. அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இவர் முன்மாதிரியாக நின்று,அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சாட்சிகளாய் காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 2,31,743 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 272 உள்ளனர். இப்போதைக்கு அனைத்து பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 1,64,948 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% வீதமானக் கட்டுரைகள் இ.மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டு எண்ணிக்கையின் படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 -ஐயும் கடந்துச் செல்கிறது. மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காக கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.[4]

இவரது பயனர் பக்கத்தின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[5] இவரது பயனர் பேச்சு பக்கத்தின் தொகுப்பு 2005 மே 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[6]

விருதுகள்[தொகு]

30.03.2017இல் விருதுடன் மயூரநாதன்

மேற்கோள்கள்[தொகு]

  1. இல., பாலசுந்தரராமன் (2009), "Tamil Wikipedia: A Case Study", Wikimania, Buenos Aires: Wikimedia Argentina Chapter, பார்க்கப்பட்ட நாள் 2013-08-20, Mayooranathan, in response to a request posted in a mailing list, completed 95% of the localisation between November 4, 2003 and November 22, 2003. He made some anonymous edits alongside. On November 12, 2003 Amala Singh from the United Kingdom wrote the first article in Tamil, but with an English title Shirin Ebadi.[8] The earliest editor who continues to edit actively, Mayooranathan, has written more than 2760 articles and has kept the project alive during an intervening period when practically nobody else was editing.
  2. இ. மயூரநாதனின் முதல் தொகுப்பு
  3. இ. மயூரநாதன் வடிவமைத்த தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் இடைமுகம்
  4. இ. மயூரநாதன் தொடங்கியக் கட்டுரைகள்
  5. இ.மயூரநாதனின் பயனர் பக்க முதல் தொகுப்பு
  6. இ.மயூரநாதனின் முதல் பயனர் பேச்சு
  7. "இ. மயூரநாதனுக்கு இயல் விருது – 2015". Archived from the original on 2016-05-18. பார்க்கப்பட்ட நாள் 2016-01-06.
  8. ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள், அணுக்கம் 04-04-2017

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இ._மயூரநாதன்&oldid=3543305" இலிருந்து மீள்விக்கப்பட்டது