தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1978
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1978 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1978 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. மலைநாட்டின் மீதினிலே (முதல் பரிசு), 2. பருவ மழை (இரண்டாம் பரிசு) |
1. வா. மு. சேதுராமன் 2. கு. சா. கிருஷ்ணமூர்த்தி |
1. கவியரசன் பதிப்பகம், சென்னை. வானதி பதிப்பகம், சென்னை |
2 | நாவல் | 1. படிகள் (முதல் பரிசு) 2. கனாக் கண்டேன் தோழி (இரண்டாம் பரிசு) |
1. கமலா சடகோபன் 2. ஜே. எம். சாலி |
1. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம் லிமிடெட், சென்னை 2.பூம்புகார் பிரசுரம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1.சங்க இலக்கியத்தில் நெய்தல் நிலம் (முதல் பரிசு) 2. பாரதிதாசனின் கதைப் பாடல்கள் (இரண்டாம் பரிசு) |
1. முத்துக் கண்ணப்பன் 2. இளங்கோ |
1. அதிபத்தர் பதிப்பகம், சென்னை. 2. தமிழ்மணி புத்தகப் பண்ணை, சென்னை. |
4 | மானிடவியல், சமூகவியல், பூகோளம், அரசியல், சட்டம் | ----- | ----- | ----- |
5 | குழந்தை இலக்கியம் | 1. வணக்கத்திற்குரிய வரதராசனார் கதை (முதல் பரிசு) 2. பறந்து செல்வோம் வாரீர் |
1. ஆலந்தூர் கோ. மோகனரங்கன் 2. பி. எல். இராஜேந்திரன் |
1. வசந்தா பதிப்பகம், சென்னை. 2. செல்வ நிலையம், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. நம்நாட்டுச் சித்தர்கள் (முதல் பரிசு) 2.சேக்கிழார் அடிச்சுவட்டில் (இரண்டாம் பரிசு) |
1. இரா. மாணிக்கவாசகம் 2.சோ. சிவபாதசுந்தரம் |
1. அன்னை அபிராமி அருள் , சென்னை 2. வானதி பதிப்பகம், சென்னை. |
7 | நாடகம் | 1. மலைமடு (முதல் பரிசு) 2. ஔரங்கசீப் (இரண்டாம் பரிசு) |
1. கோரா 2. இந்திரா பார்த்தசாரதி |
1. சிவகாமி பதிப்பகம், அண்ணாமலைநகர் 2. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை. |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. இந்திய நூலக இயக்கம் (முதல் பரிசு) 2. காவல்துறையின் கதை (இரண்டாம் பரிசு) |
1. வே. தில்லைநாயகம், 2. துமிலன் |
1. பாரி நிலையம், சென்னை 2. அருணோதயம், சென்னை. |
9 | சிறுகதை | 1. தெய்வம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது (முதல் பரிசு) 2. ஒரு தேவதையின் பகல் நேரங்கள் (இரண்டாம் பரிசு) |
1. பூவை. ஆறுமுகம், 2. பிரதிபா ராசகோபாலன் |
1. மீனாட்சி பதிப்பகம், சென்னை 2. அருணோதயம், சென்னை. |
10 | கல்வி, உளவியல் | தமிழ் ஆங்கில இலக்கணம் (முதல் பரிசு) | 1. வ. அருணாசலம் | 1. ஓம்ஸ் பதிப்பகம், சென்னை |