தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2008
Appearance
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2008 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | நூலின் பிரிவு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | மரபுக்கவிதை | கப்பலுக்கொரு காவியம் | வாய்மைநாதன் (மு.இராமநாதன்) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
2 | புதுக்கவிதை | உனக்கும் எனக்குமான சொல் | அழகிய பெரியவன் (சி.அரவிந்தன்) | ஆழி பதிப்பகம், சென்னை |
3 | புதினம் | நெருப்புக்கு ஏது உறக்கம் | எஸ்ஸார்சி (எஸ்.ராமச்சந்திரன்) | அலமேலு பதிப்பகம், குறிஞ்சிப்பாடி. |
4 | சிறுகதை | எட்டாயிரம் தலைமுறை | தமிழ்மகன் (பா. வெங்கடேசன்) | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
5 | நாடகம் (உரைநடை, கவிதை ) | வைக்கம் | அ. அய்யாசாமி | விழிகள் பதிப்பகம், சென்னை. |
6 | சிறுவர் இலக்கியம் | மரப்பாச்சி | புதுவைத் தமிழ்நெஞ்சன் (அசோகன்) | தமிழ்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி. |
7 | திறனாய்வு | வள்ளலாரும் பெரியாரும் | மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி | தனஜோதி பதிப்பகம், திருவெண்காடு, சீர்காழி. |
8 | மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் | நச்சினார்க்கினியர் உரைநெறி | முனைவர் ச. குருசாமி | ராணி பதிப்பகம், சென்னை. |
9 | பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் | தென்னகத்தின் எழுச்சி | பேராசிரியர் அ. அய்யாசாமி | விழிகள் பதிப்பகம், சென்னை. |
10 | நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) | சங்கத் தமிழிசை | முனைவர் த. கனகசபை | பொன்னி வெளியீடு, சென்னை |
11 | அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் | தமிழ் நிகண்டுகள் | முனைவர் ச. வே. சுப்பிரமணியன் | மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். |
12 | பயண இலக்கியம் | அடேங்கப்பா ஐரோப்பா | வேங்கடம் (திரு. திருவேங்கடம்) | விகடன் பிரசுரம், சென்னை. |
13 | வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு | சமூகவிஞ்ஞானி கலைவாணர் | பேராசிரியை அன்புக்கொடி நல்லதம்பி | மலர் பதிப்பகம், சென்னை. |
14 | நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு | தகடூர் வரலாறும் பண்பாடும் | இரா. இராமகிருட்டிணன் | ராமையா பதிப்பகம், சென்னை. |
15 | கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் | இயற்கை அற்புதங்கள் | வாண்டுமாமா (வி.கே.மூர்த்தி) | கங்கை புத்தக நிலையம், சென்னை. |
16 | பொறியியல், தொழில்நுட்பம் | ----- | ----- | ----- |
17 | மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) | இலக்கிய மனித உரிமைக்கோட்பாடுகள் | முனைவர் ஆ. ஜெகதீசன் | தாமரை பப்ளிகேஷன்ஸ், சென்னை. |
18 | சட்டவியல், அரசியல் | மக்களவைக் கூட்டத்தை தமிழகத்தில் நடத்துக | ரா. பாலகிருஷ்ணன் | கே.பி.கே நினைவு அரசியல்சார் இதழியல் அரங்கம், சென்னை. |
19 | பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் | தொழில் முனைவோர் கையேடு | எஸ்.எல்.வி. மூர்த்தி | கிழக்கு பதிப்பகம், சென்னை. |
20 | மருந்தியல், உடலியல், நலவியல் | வலிய எலும்பே வழுவழுப்பான மூட்டே | தமிழ்நாகை (கோ.அன்பழகன்) | தமிழ் முனை பதிப்பகம், சென்னை. |
21 | தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) | சித்த மருத்துவத்தில் வேர், மரம், செடி, கொடி, இலைகளும் அதன் மருத்துவப் பயன்களும் | பேராசிரியர் க. சிவநேசன் | அருள் பதிப்பகம், சென்னை. |
22 | சமயம், ஆன்மீகம், அளவையியல் | திருநாவுக்கரசர் தேவாரத்தில் சிவ மூர்த்தங்கள் | முனைவர் பா. சுந்தர் | கபிலன் பதிப்பகம் |
23 | கல்வியியல், உளவியல் | கல்விச் சமூகவியல் | கலாநிதி மா. கருணாநிதி (இலங்கை) | குமரன் புத்தக இல்லம், சென்னை. |
24 | வேளாண்மையியல், கால்நடையியல் | வாழை சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள் | இரா. தங்கவேலு, மு. மு. முஸ்தபா | ஸ்ரீ சக்தி புரோமோசனல் லித்தோ பிரஸ், கோயம்புத்தூர். |
25 | சுற்றுப்புறவியல் | காற்று மாசுக்கட்டுப்பாடு மற்றும் மாசுக்கட்டுப்பாடு | ஆர். வி. ஜெபா ராசசேகர் | ஈடன் பதிப்பகம், மதுரை. |
26 | கணிணியியல் | எளிய தமிழில் எக்ஸெல் | ம. லெனின் | சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிக்கேஷன்ஸ், சென்னை |
27 | நாட்டுப்புறவியல் | படகர் அறுவடைத் திருநாள் | டாக்டர் இரா. கு. ஆல்துரை | நெலிக்கோலு வெளியீட்டகம், நீலமலை. |
28 | வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் | ----- | ----- | ----- |
29 | இதழியல், தகவல் தொடர்பு | ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு | இரா. பாவேந்தன் | சந்தியா பதிப்பகம், சென்னை. |
30 | பிற சிறப்பு வெளியீடுகள் | திருக்குறள்-வ.உ.சிதம்பரனார் உரை | முனைவர் இரா. குமரவேலன் | பாரி நிலையம், சென்னை. |
31 | விளையாட்டு | அறிந்துகொள்ளுங்கள் - கால்பந்து | பூ. மாரி அய்யா | ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், கோயம்புத்தூர். |
குறிப்புகள்
- பொறியியல், தொழில்நுட்பம் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
- வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டும் வரப்பெற்றதால் விதி எண் 15ன் கீழ் கருதப்படவில்லை.