ஆ. ஜெகதீசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆ. ஜெகதீசன் (பிறப்பு: மே 16 1972) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு நடுப்படுகையில் பிறந்தவர். விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் இவர், தமிழ் இலக்கியத்தில் மனித உரிமைச் சிந்தனைகள், தமிழ் இலக்கியத்தில் கல்வெட்டியல் கூறுகள், சங்க இலக்கிய மதிப்பீடுகள், பாரதி - பாரதிதாசன் சமூகச் சிந்தனைகள் போன்ற நூல்களை வெளியிட்டுள்ளார். இவர் எழுதிய “இலக்கியத்தில் மனித உரிமைக் கோட்பாடுகள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

  • தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு.சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._ஜெகதீசன்&oldid=2613132" இருந்து மீள்விக்கப்பட்டது