இரா. பாவேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முனைவர் இரா. பாவேந்தன்

இரா. பாவேந்தன் (13 ஏப்ரல் 1970 - 20 சூலை 2019) கோவையைச் சார்ந்த தமிழியல் ஆய்வாளர். இவர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உதவிப்பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் எழுதிய ஆதிதிராவிடன் இதழ்த் தொகுப்பு எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் இதழியல், தகவல் தொடர்பு வகைப்பாட்டில் பரிசு பெற்றது.

எழுதிய நூல்கள்[தொகு]

  • கறுப்பு சிகப்பு இதழியல்[1] (சின்னக்குத்தூசி முன்னுரையுடன்)
  • திராவிட சினிமா (2009), வீ.எம்.எச் சுபகுணராஜன், கயல் கவின் பதிப்பகம், சென்னை (கலைஞர் மு.கருணாநிதி அணிந்துரையுடன்)
  • திராவிட நாட்டுக் கல்வி வரலாறு (2009), கயல் கவின் பதிப்பகம், சென்னை
  • ஆதி திராவிடன் இதழ்த் தொகுப்பு[2] (2008), சந்தியா பதிப்பகம், சென்னை (தமிழக அரசின் சிறந்த இதழியல் மக்கள் தொடர்பியல் விருது பெற்ற் நூல்)
  • தமிழில் அறிவியல் இதழ்கள் (1998), சாமுவேல் ஃபிஸ்க் கிறின் பதிப்பகம், இந்திய தமிழாசிரியர் மன்றத்தின் சிறந்த நூல் விருது (1998), தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற சிறந்த நூல் விருது (1999)
  • சமுகப் புரட்சியாளர் ஜோதிராவ்ஃபூலே (1994), சிந்தனைப் பேரவை, கோவை.
  1. பாவேந்தன், இரா,கறுப்பு சிகப்பு இதழியல், 2009, கயல் கவின் பதிப்பகம்:சென்னை
  2. பாவேந்தன், இரா, ஆதிதிராவிடன், 2008, சந்தியா பதிப்பகம்:சென்னை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._பாவேந்தன்&oldid=2781312" இருந்து மீள்விக்கப்பட்டது