தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 20,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூபாய் 5,000 பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் நூலின் பிரிவு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 மரபுக்கவிதை திருத்தொண்டர் காப்பியம் சூ. இன்னாசி காவ்யா பதிப்பகம், சென்னை.
2 புதுக்கவிதை கனவைப் போலொரு மரணம் அ. வெண்ணிலா காதை பதிப்பகம், சென்னை.
3 புதினம் நதியின் மடியில் ப. ஜீவகாருண்யன் அருள் புத்தக நிலையம், குறிஞ்சிப்பாடி.
4 சிறுகதை ஆலமர இடையழகு எழில் வரதன் காதை பதிப்பகம், சென்னை.
5 நாடகம் (உரைநடை, கவிதை ) அக்கினிக் குஞ்சு முனைவர் மா. பா. குருசாமி காந்திய இலக்கியச் சங்கம், மதுரை.
6 சிறுவர் இலக்கியம் மருது சகோதரர்கள் சு.குப்புசாமி பழனியப்பா பிரதர்ஸ், சென்னை
7 திறனாய்வு சிலம்பில் பாத்திரங்கள் பங்கும், பண்பும் முனைவர் கா. மீனாட்சி சுந்தரம் ருக்மணி-இராமநாதன் அறக்கட்டளை, காரைக்குடி.
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் வ. ஐ. சுப்பிரமணியம் கட்டுரைகள் ( இரண்டு தொகுதிகள் ) வ. ஐ. சுப்பிரமணியம் அடையாளம், திருச்சி
9 பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் அடோல்ஃப் ஹிட்லரின் வாழ்வும் மரணமும் மு. சுப்பிரமணி சீதை பதிப்பகம், சென்னை.
10 நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) உலக சினிமா வரலாறு ; மௌனயுகம் அஜயன் பாலா தென்திசை பதிப்பகம், சென்னை.
11 அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் நடுநாட்டுச் சொல்லகராதி கண்மணி குணசேகரன் தமிழினி, சென்னை.
12 பயண இலக்கியம் கலை வரலாற்றுப் பயணங்கள் மு. ஸ்ரீனிவாசன் சேகர் பதிப்பகம், சென்னை.
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு தமிழர் தந்தை வ.உ.சிதம்பரனார் அனிதா கு. கிருஷ்ணமூர்த்தி அனிதா பதிப்பகம், திருப்பூர்.
14 நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு புதுச்சேரி மாநிலம் - வரலாறும் பண்பாடும் முனைவர் சு.தில்லைவனம் சிவசக்திப் பதிப்பகம், புதுச்சேரி.
15 கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் பெரும்புகழ் எறும்புகள் முனைவர் மலையமான் (நா. இராசகோபாலன் அன்புப் பதிப்பகம், சென்னை.
16 பொறியியல், தொழில்நுட்பம் மக்கள் அறிவியல் இலக்கியம் ; நோக்கும் போக்கும் முனைவர் உலோ. செந்தமிழ்க்கோதை பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
17 மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் 1. பூகம்ப பூமியைப் புரிந்து வெல்வோம்
2. பண்பாடு ; வேரும் விழுதும்
1. முனைவர் க.மணிமாறன், கி. ரேணுகா
2. சு. இராசரத்தினம்
1. ரேணுகா பதிப்பகம், திருநெல்வேலி
2. தமிழ் ஹெரிடேஜ் அசோசியேஷன், கனடா.
18 சட்டவியல், அரசியல் இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும் டாக்டர் ஜி. பாலன், டாக்டர் டி. தட்சிணாமூர்த்தி வானதி பதிப்பகம், சென்னை.
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் ----- ----- -----
20 மருந்தியல், உடலியல், நலவியல் மாற்று மருத்துவங்கள் பகுதி 1, 2, 3, 4 டாக்டர் இரா.மாணிக்கவாசகம் அன்னை அபிராமி அருள், சென்னை.
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) உயிர்காக்கும் சித்த மருத்துவம் டாக்டர் கே. ஏ. சிதம்பரகாங்கேயன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
22 சமயம், ஆன்மீகம், அளவையியல் மாணிக்கவாசகரும் சிவப்பிரகாசரும் முனைவர் க. விநாயகம் ஸ்ரீ அன்னை நூலகம், திண்டிவனம்.
23 கல்வியியல், உளவியல் கற்பித்தலில் புதிய அணுகுமுறை ( வரலாறு ) முனைவர் சு. வசந்தி, முனைவர் பி. இரத்தினசபாபதி வனிதா பதிப்பகம், சென்னை.
24 வேளாண்மையியல், கால்நடையியல் ஜெட்ரோஃபா சாகுபடியும் பயோ டீசலும் முனைவர் வெ. சுந்தரராஜ், முனைவர் சாமுவேல் பால்ராஜ் மெர்க்குரிசன் பப்ளிக்கேஷன்ஸ்,சென்னை.
25 சுற்றுப்புறவியல் தமிழகச் சுற்றுச் சூழல் இரா. பசுமைக்குமார் தாமரை பப்ளிக்கேஷன்ஸ், சென்னை.
26 கணிணியியல் ----- ---- -----
27 நாட்டுப்புறவியல் தமிழர் கலை இலக்கிய மரபுகள் முனைவர் ஆறு. இராமநாதன் மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
28 வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ----- ----- -----
29 இதழியல், தகவல் தொடர்பு ----- ----- -----
30 பிற சிறப்பு வெளியீடுகள் திராவிட இயக்க வரலாறு கே. ஜி. இராதா மணாளன் பாரி நிலையம், சென்னை.
31 விளையாட்டு ----- ----- -----

குறிப்புகள்

  • பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் எனும் வகைப்பாட்டில் நூல்கள் ஏதும் வரப்பெறவில்லை.
  • கணிணியியல், வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம், இதழியல், தகவல் தொடர்பு மற்றும் விளையாட்டு ஆகிய நான்கு வகைப்பாடுகளில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால், விதி 15 இன் கீழ், பரிசுக்குக் கருதப்படவில்லை.
  • மானிடவியல், சமூகவியல், புவியில், நிலவியல் வகைப்பாட்டில் மானிடவியல், நிலவியல் எனத் துறை வேறுபட்டுள்ளமையும், நடுவருள் இருவர் இரு நூல்களுக்கும் முதற் பரிசு மதிப்பெண் கொடுத்துள்ளமையும் கருத்தில் கொள்ளபட்டு, பரிசுகள் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]