தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 1983
Appearance
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 1983 ஆம் ஆண்டிற்கான பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூபாய் 2,000 பரிசுத் தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் அளிக்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 1983 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.
வ.எண் | தலைப்பு | நூலின் பெயர் | நூலாசிரியர் | நூல் வெளியீடு |
---|---|---|---|---|
1 | கவிதை | 1. பெரியார் பிள்ளைத்தமிழ் (முதல் பரிசு), 2. கவிச்சித்தரின் சிவப்பு நிலா (இரண்டாம் பரிசு) |
1. புலவர் மாவண்ணா தேவராசன் 2. க. பொ. இளம்வழுதி |
1. பாரதி நிலையம், சென்னை. 2. இளங்கோ இலக்கிய மன்றம், சென்னை. |
2 | நாவல் | 1. சாயங்கால மேகங்கள் (முதல் பரிசு) 2. நரசிம்மவர்மனின் நண்பன் (இரண்டாம் பரிசு) |
1. நா. பார்த்தசாரதி 2. டாக்டர் பூவண்ணன் (வே. தா. கோபாலகிருட்டிணன்) |
1. தமிழ்ப் புத்தகாலயம், சென்னை 2. பாரி நிலையம், சென்னை. |
3 | மொழி, இலக்கியம் பற்றிய ஆராய்ச்சி நூல்கள் | 1. சித்திரக் கவிகள் (முதல் பரிசு) 2. திருவள்ளுவரின் குறிக்கோளியலும் உலகப் பொதுமையியலும் (இரண்டாம் பரிசு) |
1. வே. இரா. மாதவன் 2. முனைவர் கோ. மோகனராசு |
1. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 2. சென்னை பல்கலைக்கழகம், சென்னை. |
4 | பொறியியல், தொழில்நுட்பவியல் | தொலைக்காட்சிக் கலை (முதல் பரிசு) | வெ. நல்லதம்பி | வள்ளுவன் வெளியீட்டகம், சென்னை. |
5 | மருத்துவம், உடலியல், உணவியல், ஆரோக்கியம், சுகாதாரம் | 1. நோய் அறிதல் (முதல் பரிசு) 2. பல் ஈறு நோய்கள் (தடுப்பு முறைகளும் பாதுகாப்பும்) (இரண்டாம் பரிசு) |
1. டாக்டர் கா. நடராசன் 2. டாக்டர் பி.பி. ராசன், டாக்டர் பு. புட்பராசன் |
1 அபிராமி பப்ளிகேசன்ஸ், சென்னை. 2 நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. |
6 | தத்துவம், சமயம், அளவியல், அறவியல் | 1. தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் (முதல் பரிசு) 2. உலக அமைதி |
1. வி. கந்தசாமி 2. எஸ். டி. மணிவண்ணன் |
1. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. 2. தேன் தமிழ்ப் பதிப்பகம், சேலம். |
7 | சிறுகதை | 1. அமுதத்துளி உதிர்ந்தது (முதல் பரிசு) 2. தர்மம் (இரண்டாம் பரிசு) |
1. பிரேமா நந்தகுமார் 2. வண்ணநிலவன் (இராமச்சந்திரன்) |
1. தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கம், சென்னை. 2. நர்மதா பதிப்பகம், சென்னை. |
8 | கட்டுரை, வாழ்க்கை வரலாறு, சுயசரிதை, பயண நூல்கள் | 1. குட்டித் தீவை எட்டிப் பார்த்தேன் (முதல் பரிசு) 2. பாரதீயம் (இரண்டாம் பரிசு) |
1. குரும்பூர் குப்புசாமி 2. டாக்டர் ந. சுப்பு ரெட்டியார் |
1. அருணோதயம், சென்னை 2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |
9 | வரலாறு, தொல்பொருளியல் | 1. தஞ்சை மராட்டியர் செப்பேடுகள் (முதல் பரிசு) 2. மெய்க்கீர்த்திகள் (இரண்டாம் பரிசு) |
1. செ. இராசு 2. பா. சுப்பிரமணியன் |
1. பதிப்புத்துறை, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 2. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
10 | குழந்தை இலக்கியம் | 1.விந்தைகள் புரிந்த விஞ்ஞானிகள் (முதல் பரிசு) 2. பாட்டு வாத்தியார் (இரண்டாம் பரிசு) |
1. க. அரசுமணி 2. ரேவதி (ஈ. எஸ். அரிஅரன்) |
1. மருதமலையான் பதிப்பகம், சென்னை 2. பழனியப்பா பிரதர்ஸ், சென்னை. |