தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2004

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசுகள் வழங்கும் திட்டம் மூலம் ஆண்டுதோறும் 31 வகைப்பாடுகளின் கீழ் தேர்வு செய்யப்படும் நூல்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிற்காகப் பரிசுக்காகத் தேர்வு செய்யப்பட்ட நூல்களின் நூலாசிரியருக்கு ரூ 10,000 மற்றும் சான்றிதழ், நூலை வெளியிட்ட பதிப்பகத்திற்கு ரூ2,000 மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. இத்திட்டத்தின் கீழ் 2004 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்கள் மற்றும் நூலை எழுதிய நூலாசிரியர்கள், நூலை வெளியிட்ட பதிப்பகங்களின் பட்டியல் இது.

வ.எண் நூலின் பிரிவு நூலின் பெயர் நூலாசிரியர் நூல் வெளியீடு
1 மரபுக்கவிதை முப்பால் முதல்வன் புலவர் நாஞ்சில் நாரண. தொல்காப்பியன் கலைமணி பதிப்பகம், சென்னை.
2 புதுக்கவிதை முக்கூடல் கவிஞர் புவியரசு வசந்தா பதிப்பகம், சென்னை.
3 புதினம் ஆழி சூழ் உலகு ஜோ டி குரூஸ் தமிழினி,சென்னை.
4 சிறுகதை சொல்லொணாப் பேறு நரசய்யா பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
5 நாடகம் (உரைநடை, கவிதை ) ஒலி நாடக வடிவில் சிலப்பதிகாரம் முனைவர் வெ. நல்லதம்பி துரை. இராமு பதிப்பகம், சென்னை.
6 சிறுவர் இலக்கியம் அறிவூட்டும் விஞ்ஞானக் கதைகள் நெல்லை சு. முத்து திருவரசு புத்தக நிலையம், சென்னை.
7 திறனாய்வு சித்திரச் சிலம்பு கு. ராஜவேலு எல். கே. எம். பப்ளிகேசன்ஸ், சென்னை.
8 மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறு வாசிப்பும் முனைவர் இரா. அறவேந்தன் சபாநாயகம் பப்ளிகேசன்ஸ், சிதம்பரம்.
9 பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் இயற்பியலின் தாவோ பொன். சின்னத்தம்பி முருகேசன் சந்தியா பதிப்பகம், சென்னை.
10 நுண்கலைகள்(இசை, நடனம், ஓவியம், சிற்பம்) தமிழக ஓவியக்கலை மரபும் பண்பாடும் முனைவர் இராசு. பவுன்துரை மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்.
11 அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் ஸ்ரீ வைஷ்ணவ சமயக் கலைக்களஞ்சியம் பகுதி 1, 2. முனைவர் சிவ. திருச்சிற்றம்பலம் கங்கை புத்தக நிலையம், சென்னை.
12 பயண இலக்கியம் இமயவலம் சின்ன சாத்தன் சுகீத், சூலூர், கோயம்புத்தூர்.
13 வாழ்க்கை வரலாறு, தன் வரலாறு பாரதி தேடல்கள்: சில நினைவலைகள் சீனி. விசுவநாதன் சீனி. விசுவநாதன் (சொந்த பதிப்பு), சென்னை.
14 நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு திருவக்கரை வரலாறு சு. வேல்முருகன் கம்பன் பதிப்பகம், புதுச்சேரி.
15 கணிதவியல்,வானியல்,இயற்பியல்,வேதியியல் தமிழன் அறிவியல் முன்னோடி பேராசிரியர் கொண்டல் சு. மகாதேவன் மீனா கோபால் பதிப்பகம், சென்னை.
16 பொறியியல், தொழில்நுட்பம் சாண எரிவாயு அறிவியலும் தொழில்நுட்பமும் 1. சௌ. காமராஜ்
2. பொ.துரைசாமி,
3. ஜோ. ஜான்
4. கு. இராமசாமி
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
17 மானிடவியல் (சமூகவியல், புவியில், நிலவியல்) நரிக்குறவர் இன வரைவியல் கரசூர் பத்மபாரதி தமிழினி, சென்னை.
18 சட்டவியல், அரசியல் 1872 ஆம் ஆண்டு இந்தியச் சான்றுச் சட்டம் பேராசிரியர் பி. திருநாவுக்கரசு சி. சீதாராமன் அன் கோ, சென்னை.
19 பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் ----- ----- -----
20 மருந்தியல், உடலியல், நலவியல் எலும்பு மூட்டு நலம் டாக்டர் கோ. அன்பழகன் தமிழ்முனை பதிப்பகம், சென்னை.
21 தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) ----- ----- -----
22 சமயம், ஆன்மீகம், அளவையியல் செந்தமிழ் முருகன் ப. முத்துக்குமாரசுவாமி பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.
23 கல்வியியல், உளவியல் பெற்றால் மட்டும் போதுமா? டாக்டர் இரா. நரசிம்மன்
ஜெயவதி நரசிம்மன்
பத்மா பதிப்பகம், சென்னை.
24 வேளாண்மையியல், கால்நடையியல் ----- ----- -----
25 சுற்றுப்புறவியல் ----- ----- -----
26 கணிணியியல் ----- ----- -----
27 நாட்டுப்புறவியல் தமிழரின் பெருமரபும் சிறுமரபும் முனைவர் சி. மா. ரவிச்சந்திரன் வசந்தா பதிப்பகம், சென்னை
28 வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ----- ----- -----
29 இதழியல், தகவல் தொடர்பு இதழியல் முனைவர் ச. ஈஸ்வரன்,
முனைவர் இரா. சபாபதி
பாவை பப்ளிகேசன்ஸ், சென்னை.
30 பிற சிறப்பு வெளியீடுகள் அவர்கள் எங்கே போனார்கள்? கர்ணன் ஸ்ரீ கார்த்திகேயா பதிப்பகம், மதுரை.
31 விளையாட்டு விளையாட்டுகள் அன்றும் இன்றும் க. பொ. இளம்வழுதி பரிதி பதிப்பகம், கடலூர்.

குறிப்புகள்

  • பொருளியல், வணிகவியல், மேலாண்மையியல் வகைப்பாட்டில் தகுதியான நூல் எதுவுமில்லை.
  • தமிழ் மருத்துவ நூல்கள் (சித்தம், ஆயுர்வேதம்) வகைப்பாட்டில் ஒரு நூல் மட்டுமே வரப்பெற்றதால் திட்டவிதி 15ன் கீழ் பரிசளிக்கும் நிலை எழவில்லை.
  • வேளாண்மையியல், கால்நடையியல் வகைப்பாட்டில் தகுதியான நூல்கள் இல்லாததால் ஏற்கப்படவில்லை.
  • சுற்றுப்புறவியல், கணிணியியல் மற்றும் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் ஆகிய மூன்று வகைப்பாடுகளில் நூல் ஏதும் வரவில்லை.