உள்ளடக்கத்துக்குச் செல்

கோ. அன்பழகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ. அன்பழகன் (பிறப்பு: மார்ச் 11, 1936) என்பவர் ஒரு முடநீக்கியல் மருத்துவர் மற்றும் தமிழக எழுத்தாளர்.இவரது இலக்கியப் பெயர் தமிழ்நாகை. மருத்துவத்தில் இளம்நிலைப் பட்டமும், முடநீக்கியல் துறையில் முதுநிலை அறுவை சிகிச்சை பட்டம் மற்றும் பட்டயமும் பெற்றிருக்கிறார். சென்னை பொது அரசு மருத்துவமனையில் தலைமை முடநீக்கியல் அறுவை சிகிச்சை வல்லுநராகப் பணியாற்றியவ்ர். இவர் எழுதிய "எலும்பு மூட்டு நலம்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்மருந்தியல், உடலியல், நலவியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._அன்பழகன்&oldid=2765761" இலிருந்து மீள்விக்கப்பட்டது