இரா. அறவேந்தன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரா. அறவேந்தன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளியில் வசித்து வரும் இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் இலக்கியம் பட்டத்திலும், புதுவை பல்கலைக்கழகத்தில் முதுகலை, ஆய்வியல் நிறைஞர் பட்டங்களிலும் முதன்மை இடம் பெற்றவர். சிங்கள மரபிலக்கணத்துடன் தமிழ் மரபிலக்கணத்தை ஒப்பிட்டு ஆராய்ந்த முதலாமவர் என்ற சிறப்புடன் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். ஒன்பது நூல்களை எழுதியிருப்பதுடன் ஒன்பது நூல்களுக்குப் பதிப்பாசிரியராகவும் இருந்திருக்கிறார். இவர் எழுதிய "தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண மறு வாசிப்பும்" எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் மொழி வரலாறு, மொழியியல், மொழி வளர்ச்சி, இலக்கணம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

வெளி இணைப்பு[தொகு]

முனைவர் இரா. அறவேந்தனின் வலைப்பூ

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._அறவேந்தன்&oldid=3055542" இருந்து மீள்விக்கப்பட்டது