இரா. குமரவேலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. குமரவேலன் (பிறப்பு: அக்டோபர் 19 1938) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்மொழி அறிவு பெற்றவர். பூங்குன்றன் கவிதைகள், தமிழ் நாடக ஆய்வு, கவிதை நாடகம் - ஒரு கண்ணோட்டம், பொன்னி, தமிழ் நாடக வளர்ச்சி, விடுதலை இயக்கமும் திராவிட இயக்கமும், மணலும் நுரையும் (கலீல் கிப்ரான் - தமிழாக்கம்) என பல நூல்களை எழுதியுள்ளார். கலைமாமணி விருது, நாடகச் செம்மல் விருது போன்ற விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய “திருக்குறள் - வ. உ. சிதம்பரனார் உரை” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிற சிறப்பு வெளியீடுகள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._குமரவேலன்&oldid=3293882" இலிருந்து மீள்விக்கப்பட்டது