உள்ளடக்கத்துக்குச் செல்

இரா. இராமகிருட்டிணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரா. இராமகிருட்டிணன்

இரா. இராமகிருட்டிணன் (பிறப்பு: மே 19 1945) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். ஓசூரில் பிறந்த இவர் தெற்கு தொடருந்துவில் தொடர் வண்டி நிலைய பொறுப்பாளராகவும் (ஸ்டேசன் மாஸ்டர்), தொடருந்து துணை நிலை இராணுவப் படையில் சுபேதாராகவும் பணியாற்றியவர். பன்மொழிப் புலமை பெற்ற இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், ஆய்வியல் நிறைஞர் பட்டமும்,முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் எழுதிய தகடூர் வரலாறும் பண்பாடும் எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் “நாட்டுவரலாறு, கல்வெட்டு, தொல்லியல், கடலியலும் வணிக வழிகளும், அகழாய்வு” எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

இவர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வினை "தருமபுரி மாவட்டத் திருத்தலங்கள்" என்ற தலைப்பில் செய்துள்ளார்.[1]

எழுதிய நூல்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. நூலாசியர் தகவல்கள் - அஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும் நூல்- நர்மதாப் பதிப்பகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._இராமகிருட்டிணன்&oldid=3277269" இலிருந்து மீள்விக்கப்பட்டது