இரா. தங்கவேலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரா. தங்கவேலு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். திருச்சிராப்பள்ளி, தாயனூரில் தேசிய விதை ஆராய்ச்சி மையத்தில் தாவர நோயியல் முதுநிலை விஞ்ஞானியாகப் பணிபுரிகிறார். இவர் தேசிய அளவில் ஜவஹர்லால் நேரு விருதினை பயிர் நோய்க் கட்டுப்பாடு பிரிவில் முனைவர் பட்டப் படிப்பு ஆராய்ச்சிக்காகப் பெற்றுள்ளார். பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல ஆராய்ச்சிக் கருத்தரங்குகளில் பங்கேற்றுள்ளார். இவர் மு. மு. முஸ்தபாவுடன் சேர்ந்து எழுதிய “வாழைச் சாகுபடியில் புதிய தொழிநுட்பங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வேளாண்மையியல் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

ஆதாரம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._தங்கவேலு&oldid=3614099" இருந்து மீள்விக்கப்பட்டது