பத்ரி சேசாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பத்ரி சேஷாத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்ரி சேசாத்ரி
சனவரி 2011இல் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழாவில் நூல் வெளியீட்டின்போது
சனவரி 2011இல் விக்கிப்பீடியா பத்தாம் ஆண்டுவிழாவில் நூல் வெளியீட்டின்போது
பிறப்புபத்ரி சேசாத்ரி
சூன் 30, 1970(1970-06-30)
கும்பகோணம், தமிழ்நாடு
தொழில்எழுத்தாளர், வலைப்பதிவாளர், பதிப்பாளர்
தேசியம்இந்தியர்
கல்வி நிலையம்ஐஐடி,சென்னை
கோர்னெல் பல்கலைக்கழகம்
கருப்பொருள்அரசியல், அறிவியல், மற்றும் பொருளியல்
இணையதளம்
பத்ரி சேஷாத்ரியின் வலைப்பதிவு

பத்ரி சேசாத்ரி (பிறப்பு: ஜூன் 30, 1970) தமிழகப் பதிப்பாளரும் எழுத்தாளரும் ஆவார்.[1]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

கும்பகோணத்தில் பிறந்த பத்ரி சேசாத்ரி நாகப்பட்டினத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து 1991 இல் சென்னை இந்தியத் தொழிநுட்பக் கழகத்தில் இயந்திரவியலில் இளநிலைப் பட்டமும் 1996 இல் அமெரிக்காவின் கோர்னெல் பல்கலைக்கழகத்தில் அதே துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். கிரிக்கின்போ என்ற கிரிக்கெட் விளையாட்டுக்கான இணையத்தள தகவல் நிறுவனத்தை உருவாக்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர்[2]. 2004 ஆம் ஆண்டில் நியூ ஒரைசன் மீடியா[3] என்ற தமிழ்ப் புத்தகப் பதிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தற்போது அதன் பதிப்பாசிரியராகவும் பதிப்பாளராகவும் இருக்கிறார்.

சிறுவர்களுக்காகச் சில அறிவியல் புத்தகங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள இவர், சில ஆங்கிலப் புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் இருக்கிறார். அம்ருதா பத்திரிகையில் தொடர்ந்து அறிவியல், கணிதம் ஆகிய துறைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அரசியல், சமூகம், பொருளாதாரம் தொடர்பான நண்பேன்டா என்ற வாராந்திர விவாத நிகழ்ச்சியில் பங்கெடுத்தார்.

படைப்புகள்[தொகு]

தமிழ்ப் புத்தகங்கள்[தொகு]

  • உலகம் எப்படி தோன்றியது?
  • உயிர்கள் எப்படி தோன்றின?
  • நான் எஞ்சினியர் ஆவேன்
  • கணித மேதை ராமானுஜன்
  • ஐன்ஸ்டைன்
  • 123: இந்தியா - அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தம்
  • ஸ்பெக்ட்ரம் சர்ச்சை

மொழிபெயர்ப்புப் புத்தகங்கள்[தொகு]

ஆங்கிலப் புத்தகங்கள்[தொகு]

  • The Universe
  • Life

மேற்கோள்கள்[தொகு]

  1. "Badri Seshadri's Lessons From the Outsider". 2011-12-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-22 அன்று பார்க்கப்பட்டது.
  2. "CricInfo Co-founder Badri Seshadri explores 'new horizons'". 2009-07-03 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2011-11-22 அன்று பார்க்கப்பட்டது.
  3. Education gateway to economic growth: Badri Seshadri, Co-founder, New Horizon Media

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்ரி_சேசாத்ரி&oldid=3561800" இருந்து மீள்விக்கப்பட்டது