வோல்ட்டயர்
வோல்டேர் Voltaire | |
---|---|
24 வயதில் வோல்டேர் (நிக்கோலா டி லார்கிலியர் வரைந்தது). | |
பிறப்பு | பிரான்சுவா-மாரீ அரூவேட் 21 நவம்பர் 1694 பாரிசு, பிரான்சு |
இறப்பு | மே 30, 1778 பாரிசு, பிரான்சு | (அகவை 83)
புனைபெயர் | வோல்டேர் |
தொழில் | மெய்யியலாளர்கள் |
தேசியம் | பிரெஞ்சு |
பிராங்கோவிசு-மாரீ அரூவேட் (François-Marie Arouet) என்ற பிரெஞ்சு அறிவொளி இயக்க எழுத்தாளர் பெரும்பாலும் வோல்டேர் அல்லது வோல்டயர் எனப்படும் புனைப்பெயரால் அறியப்படுகிறார்.[1] 21 நவம்பர் 1694 முதல் 30 மே 1778 வரையிலான காலகட்டத்தில் வாழ்ந்த இவர் கட்டுரையாளராகவும் மெய்யியலாளராகவும் இயங்கினார். இவர் நையாண்டி செய்வதில் வல்லவராகவும், நிறுவப்பட்ட கத்தோலிக்க பேராலயம் தொடர்பான எதிர்ப்பாளராகவும், மத சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம், மதச்சார்பற்ற நாடு போன்றவற்றை ஆதரிப்பவராகவும் செயல்பட்டார்.
வால்ட்டேர் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நாகரிக எழுத்தாளர் ஆவார். நாடகங்கள், கவிதைகள், நாவல்கள், கட்டுரைகள், வரலாறு மற்றும் விஞ்ஞான படைப்புகள் உட்பட கிட்டத்தட்ட எல்லாவகையான இலக்கிய வடிவங்களிலும் இவர் படைப்புகள் உருவாக்கியுள்ளார். வோட்டேர் 20,000 க்கும் அதிகமான கடிதங்களையும் 2,000 க்கும் அதிகமான புத்தகங்கள் மற்றும் துண்டு பிரசுரங்களையும் எழுதினார்.[2] அந்த நேரத்தில் விதிக்கப்பட்டிருந்த கடுமையான தணிக்கை விதிகளின் கீழ் அவருக்கு ஆபத்து இருந்தபோதிலும், குடிமக்களுக்கான ஒரு வெளிப்படையான வழக்கறிஞராக அவர் பணியாற்றினார். ஒரு நையாண்டித்தனமான தத்துவவாதியாக அவர் தனது படைப்புகளை சகிப்புத்தன்மை, மதக் கோட்பாடு மற்றும் அவர் கால பிரெஞ்சு நிறுவனங்கள் முதலானவற்றை விமர்சிப்பதற்காகப் பயன்படுத்தினார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]பிராங்கோயிசு-மாரீ அரூவேட் பாரிசு நகரில் பிறந்தார். ஒரு வழக்கறிஞரான இவருடைய த்ந்தை பிராங்கோயிசு அரூவேட்டிற்கும் (19 ஆகத்து 1649 – 1 சனவரி 1722), தாயார் மேரி மார்குரைட்டு டௌமார்டுக்கும் (1660 – 13 சூலை 1701) ஐந்தாவது குழந்தையாக வோல்ட்டேர் பிறந்தார். இவர்களது குடும்பம் பிரெஞ்சு உயர்குடிப் பிறப்பின் கீழ்மட்ட நிலையில் இருந்தது.[3] வால்ட்டேரின் பிறப்பு தேதியைக் குறித்து சில ஊகங்கள் வலம்வருகின்றன. ஏனெனில், கௌரின் டி ரோச்பிரௌன் அல்லது ரக்ரூப்யூன் என்ற உயர்குடி பிரமுகருக்கு சட்டவிரோதமாக 1694 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் தேதி தான் பிறந்ததாக அவர் கூறியுள்ளார்.[4] அவரது மூத்த சகோதரர்கள்-அர்மாண்ட் பிராங்கோயிசு மற்றும் இராபர்ட்டு ஆகிய இருவரும் இளம் வயதிலேயே இறந்துவிட்டனர். உயிருடன் இருந்த சகோதரரும், சகோதரி மார்க்குரைட்டு கேத்தரீனும் அப்போது முறையே 9 மற்றும் 7 வயதினராக இருந்தனர்.[5] வால்டேர் தனது குடும்பத்தாரால் 'சோசோ' என்று செல்லமாக அழைக்கப்பட்டார், நவம்பர் 22, 1694 அன்று ஞானசுதானம் செய்து வைக்கப்பட்டார்.[6] வோல்டேர் லைசு லூயிசு-லே-கிராண்ட் மேல்நிலைப் பள்ளியில் (1704–1711) இலத்தீன், இறையியல், சொல்லாட்சி முதலான பாடங்கள் இயேசு சபையினரால் இவருக்குக் கற்பிக்கப்பட்டது.[7] பின்னர் அவர் இத்தாலிய மொழி, எசுப்பானிய மொழி, ஆங்கில மொழி என அனைத்திலும் சரளமாகப் பேசினார்.[8]
வால்டேர் பள்ளிப்படிப்பை முடித்து விட்டு வெளியேறும்போது தான் ஓர் எழுத்தாளராக வரவேண்டும் என விரும்பினார். ஆனால் அவருடைய தந்தையோ இவரை வழக்கறிஞராக்கவே விரும்பினார். ஒரு ஆவண எழுத்துப் பதிவாளருக்கு உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருப்பது போல பாசாங்கு செய்து கொண்டே வால்டேர் கவிதைகளை எழுதிக் கொண்டே தன் காலத்தை அதிகம் செலவழித்தார். இதைக் கண்டுபிடித்த அவரது தந்தை, வால்டேரை சட்டம் படிப்பதற்காக பிரான்சின் நார்மண்டி பகுதியிலுள்ள கென் நகருக்கு அனுப்பினார். ஆயினும்கூட வால்டேர் தொடர் கட்டுரைகளையும் வரலாற்று ஆய்வுகள் எழுதுவதையும் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார். வால்டேரின் நையாண்டி அவரை அங்குள்ள சில குடும்பங்களில் பிரபலமாக்கி இருந்தது. நெதர்லாந்திலுள்ள் புதிய பிரெஞ்சு தூதர் மார்க்வெசு டீ சாட்டியூனிப்பிற்கு செயலாளராக பணியாற்றும் வேலையை 1713 ஆம் ஆண்டில் வால்டேருக்கு அவருடைய தந்தை வாங்கிக் கொடுத்தார்.[9] திகேக்கில் இருந்த சமயத்தில், வால்ட்டேர் ஒரு பிரெஞ்சு புராட்டசுடன்ட் அகதியான பிம்பெட்டி என்று அழைக்கப்பட்ட கேத்தரின் ஒலிம்பி துனோயர் என்ற பெண்ணுடன் காதல் கொண்டார்.[9] அவர்களது மோசமான இவ்விவகாரத்தை கண்டுபிடித்த ஆளுநர் அந்த ஆண்டின் இறுதியில் வால்டேரை பிரான்சிற்கு திருப்பி அனுப்பிவிட்டார்.[10]
வால்ட்டேரின் ஆரம்பகால வாழ்வின் பெரும்பகுதி பெரும்பாலும் பாரிசைச் சுற்றியே இருந்தது. ஆரம்பத்தில் இருந்தே வோல்டேரின் விமர்சனங்கள் அரசாங்க அதிகாரிகளுக்கு சிக்கலைக் கொடுத்தன. இதனால் இவர் இரண்டு முறை சிறை செல்ல வேண்டியதாயிற்று. இங்கிலாந்திற்கு தற்காலிகமாகத் செல்லவேண்டியதாகவும் ஆயிற்று. ஆட்சிப் பொறுப்பிலிருந்த ஒருவரின் முறையற்ற கலவி குறித்த வால்டேரின் வஞ்சப்புகழ்ச்சி வசனம் அவருக்கு பதினோரு மாத சிறைத்தண்டனையைப் பெற்றுத் தந்தது.[12] 1717 ஆம் ஆண்டு சனவரி மாதம் அவரது முதல் நாடகமான ஓடிப்பி (நாடகம்) மேடையில் நடிப்பதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டது. 1718 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தின் நடுவில் இவர் சிறைய்லிருந்து வெளிவந்த ஏழு மாதங்களுக்குப் பின்னர் இந்நாடகம் நிகழ்த்தப்பட்டது.[13] நாடகத்தின் உடனடி விமர்சனங்களும் நாடகம் ஈட்டித்தந்த நிதியும் அவரது நற்பெயரை உறுதி செய்தன.[14] பிரிட்டனின் அரசர் முதலாம் சியார்ச்சு வோல்டேருக்கு பதக்கம் அளித்து பாராட்டினார்.[15]
வால்டேர் முக்கியமாக மத சகிப்புத்தன்மை மற்றும் சுதந்திரச் சிந்தனை ஆகியவற்றிற்காக வாதிட்டார். பூசாரி மற்றும் முடியாட்சி அதிகாரத்தை ஒழிப்பதற்காக பிரச்சாரம் செய்தார், மேலும் மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசியலமைப்பு ஆதரவளித்தார்.[16]
பெயர் மாற்றம்
[தொகு]பாசுடிலில் அனுபவித்த சிறைவாசத்தைத் தொடர்ந்து 1718 ஆம் ஆண்டில் இவர் தன்னுடைய பெயரை வால்டேர் என்று வைத்துக் கொண்டார். இப்பெயர் தோன்றிய விதம் குறித்து ஏதும் அறியப்படவில்லை. அருவேட்டு என்ற இவருடைய துணைப்பெயரை அடிப்படையாகக் கொண்டு இப்பெயர் உருவாகியிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[17] அவரது சகோதரியின் குடும்பப் பாரம்பரியப் படி, அவர் குழந்தையாக இருந்தபோது லீ பெட்டிட் வோலெண்டையர் என அறியப்பட்டார், இப்பெயரே முதிர்ச்சியடைந்த பின்னர் ஒரு புனைப்பெயராக மலர்ந்திருக்கலாம்.[18] அவரது குடும்பத்தின் சொந்த ஊரான ஏர்வால்ட் என்ற சொல்லின் எழுத்து மாற்றுவாகக் கூட வால்டேர் என்ற சொல் உருவாகியிருக்கலாம்.[19]
மற்றொரு சொல்லின் எழுத்துகளை முறைமாற்றி புதுச் சொல் உருவாக்குதலை ரிச்சர்டு ஓம்சு[20] என்ற வாழ்க்கை வரலாற்று ஆசிரியர் ஆதரிக்கிறார். ஆனால் வால்டேர் போன்ற ஒரு எழுத்தாளர் வேகம் மற்றும் தைரியம் ஆகியவற்றின் வெளிப்பாடுகளையும் அப்பெயர் தெரிவிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
1719 மார்ச்சில் யீன்-பாப்டிசுட் ரூசியோவுக்கு எழுதிய ஒரு கடிதத்தில், ரூசியோ மீண்டும் ஒரு கடிதத்தை நீங்கள் அனுப்ப விரும்பினால் அதை மான்சியூர் டி வால்டேர் என்று முகவரியிட்டு அனுப்புங்கள் என்று அக்கடிதத்தை வால்டேர் முடிக்கிறார். அப்பெயர் தனக்கு மகிழ்ச்சியளிப்பதாக ஒரு பின் குறிப்பில் வால்டேர் தெரிவிக்கிறார்.[21] வால்டேர் தன்னுடைய வாழ்வில் கிட்டத்தட்ட 178 பெயர்களைப் பயன்படுத்தி இருப்பதாக அறியப்படுகிறது.[22]
நாடக முயற்சிகள்
[தொகு]வால்ட்டேரின் அடுத்த நாடகமான ஆர்டிமியர் (டி), பண்டைய மாசிடோனியாவில் நடத்தப்பட்டது. 1720 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் நாள் நடந்தேறிய இந்நாடகம் தோல்வியடைந்தது. உரைகளின் சிறு பகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்தன.[23] அதற்குப் பதிலாக வால்டேர் 1717 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் பிரான்ஸின் நான்காம் என்றி பற்றிய ஒரு காவிய கவிதைக்கு திரும்பினார்.[24] அந்நாடகத்தை வெளியிடவும் உரிமை மறுக்கப்பட்டது. 1722 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் வால்ட்டேர் வடக்கு நோக்கிச் சென்று பிரான்சுக்கு வெளியே இருந்து ஒரு வெளியீட்டாளரை கண்டுபிடிக்க முயற்சித்தார். இந்த பயணத்தின் போது அவரது மனைவி, மேரி-மார்க்குரைட் டி ருபெல்மொண்டு, உடன் இருந்தார்.[25]
வால்டேரும் அவரத்கு மனைவியும் வடக்கே தங்கள் பயணத்தைத் தொடர்வதற்கு முன்னர் பிரசல்சில் வால்டேர் மற்றும் ரூசியோ ஆகியோர் சில நாட்கள் சந்தித்துக் கொண்டனர். ஒரு வெளியீட்டாளர் இறுதியாக திகேக்கில் கண்டறியப்பட்டார்.[26] வால்டேர் பிரான்சிற்குத் திரும்பிய போது ரோயனில் ஓர் இரண்டாவது வெளியீட்டாளரை கண்டுபிடித்தார். அவர் லா என்றியேடு என்ற புராண காவியத்தை வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டார்.[27] 1723 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் வால்ட்டேர் பெரியம்மை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டார். அவரது காவிய நாடகத்தின் முதல் பிரதிகள் பாரிசுக்குக் கடத்தப்பட்டு விநியோகிக்கப்பட்டன.[28] அதேவேளையில் இக்காவியம் உடனடி வெற்றியைப் பெற்றது. வால்ட்டேரின் புதிய நாடகமான மரியாம்னேவும், மார்ச் 1724 இல் முதன்முறையாக நடைபெற்றபோது தோல்வியைத் தழுவியது.[29] கடுமையான உழைப்பிற்குப் பின் மீண்டும் 1725 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நிகழ்த்தப்பட்டபோது ஓரளவுக்கு வரவேற்பைப் பெற்று முன்னேற்றம் கண்டது.[29] 1725 செப்டம்பரில் நடைபெற்ற பதினைந்தாம் லூய்சின் திருமணக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்நாடகம் நடைபெற்றது.[29]
கடிதங்கள்
[தொகு]வால்டேர் தனது வாழ்நாளில் பிரத்தியேகமாக கடிதங்கள் எழுதுவதில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 20,000 கடிதங்களை அனுப்பியுள்ளார். தியோடர் பெசுடர்மேன் இந்த கடிதங்களை தொகுத்து 1964 இல் நிறைவு செய்தார். இக்கடிதங்கள் 102 தொகுதிகளை நிரப்பியுள்ளன.[30] இக்கடிதங்கள் விசித்திரமான சொற்பொழிவுகள் மட்டுமல்ல, அன்பான நட்பு, மனிதாபிமான உணர்வு மற்றும் கவர்ச்சியான எண்ணங்கள் ஆகியவற்றையும் கொண்ட ஒரு விருந்து" என்று ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார்.[31]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Voltaire". Random House Webster's Unabridged Dictionary.
- ↑ Biography online
- ↑ Pearson, pp. 9–14
- ↑ Pearson, p. 9
- ↑ Pearson, p. 10
- ↑ Pearson, p. 12
- ↑ Pearson, pp. 24–25
- ↑ Liukkonen, Petri. "Voltaire". Books and Writers (kirjasto.sci.fi). Finland: Kuusankoski Public Library. Archived from the original on 17 February 2015.
{{cite web}}
: Italic or bold markup not allowed in:|website=
(help) - ↑ 9.0 9.1 Pearson, p. 36
- ↑ Pearson, pp. 36–37
- ↑ Pearson, pp. 43, 45
- ↑ Fitzpatrick, Martin (2000). "Toleration and the Enlightenment Movement" in Grell/Porter, Toleration in Enlightenment Europe, p. 64, footnote 91, Cambridge University Press
- ↑ Pearson, pp. 49–50
- ↑ Pearson, pp. 50–52
- ↑ Pearson, p. 52
- ↑ Marvin Perry et al (2015), Western Civilization: Ideas, Politics, and Society, Volume II, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-305-09142-9, p. 427
- ↑ Christopher Thacker (1971). Voltaire. Taylor & Francis. p. 3. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7100-7020-3.
{{cite book}}
:|work=
ignored (help) - ↑ Pearson, p. 17
- ↑ Pearson, p. 24
- ↑ Holmes, Richard (2000). Sidetracks: explorations of a romantic biographer. HarperCollins. pp. 345–66. and "Voltaire's Grin" in New York Review of Books, 30 November 1995, pp. 49–55
- ↑ – "Voltaire to Jean Baptiste Rousseau, c. 1 March 1719". Electronic Enlightenment. Ed. Robert McNamee et al. Vers. 2.1. University of Oxford. 2010. Web. 20 June 2010.
- ↑ – "The appendixes offer even more: a listing of Voltaire's and Daniel Defoe's numerous pseudonyms (178 and 198, respectively) ..."
- ↑ Pearson, p. 54
- ↑ Pearson, p. 55
- ↑ Pearson, p. 57
- ↑ Pearson, p. 59
- ↑ Pearson, p. 61
- ↑ Pearson, p. 62
- ↑ 29.0 29.1 29.2 Pearson, p. 64
- ↑ Brumfitt, J. H. (1965). "The Present State of Voltaire Studies". Forum for Modern Language Studies (Court of the University of St Andrews) I (3): 230. doi:10.1093/fmls/I.3.230. http://fmls.oxfordjournals.org/cgi/pdf_extract/I/3/230. பார்த்த நாள்: 28 February 2012.
- ↑ Will and Ariel Durant, Rousseau and Revolution (1967), p. 138
புற இணைப்புகள்
[தொகு]- Château de Cirey – Residence of Voltaire, visitvoltaire.com
- Gabrielle Émilie Le Tonnelier de Breteuil Marquise du Châtelet, School of Mathematics and Statistics, University of St Andrews, Scotland
- Hewett, Caspar J. M. (August 2006). "The Great Debate: Life of Voltaire". பார்க்கப்பட்ட நாள் 2 November 2008.
- The Société Voltaire
- An analysis of Voltaire's texts (in the "textes" topic) (பிரெஞ்சு)
- Complete French ebooks of Voltaire பரணிடப்பட்டது 2016-01-01 at the வந்தவழி இயந்திரம் (பிரெஞ்சு)
- Biography and quotes of Voltaire
- Institut et Musée Voltaire, Geneva, Switzerland பரணிடப்பட்டது 2009-05-12 at the வந்தவழி இயந்திரம்
- (பிரெஞ்சு) Works by Voltaire edited at athena.unige.ch
- Internet Encyclopaedia of Philosophy on Voltaire
- Monsieur de Voltaire Correspondence in French
- VisitVoltaire.com site with images பரணிடப்பட்டது 2009-02-05 at the வந்தவழி இயந்திரம்
- Complete listing of current published editions of Voltaire's works பரணிடப்பட்டது 2016-05-23 at the வந்தவழி இயந்திரம்
- Voltaire's Candide and Leibniz பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம்
- Voltaire's works: works: text, concordances and frequency list
- Voltaire's writings from Philosophical Dictionary. Selected and Translated by H.I. Woolf, 1924
- Worldly and Personal Influences on Voltaire's Writing பரணிடப்பட்டது 2012-04-05 at the வந்தவழி இயந்திரம்
- Voltaire at the Eighteenth-Century Poetry Archive (ECPA)
- குட்டன்பேர்க் திட்டத்தில் வோல்ட்டயர் இன் படைப்புகள்
- ஆக்கங்கள் வோல்ட்டயர் இணைய ஆவணகத்தில்
- Works by வோல்ட்டயர் at LibriVox (public domain audiobooks)
- Works by Voltaire at ManyBooks
- Voltaire's works and chronology
- About Voltaire in "Lucidcafé" பரணிடப்பட்டது 2006-05-12 at the வந்தவழி இயந்திரம்
- Online Library of Liberty – The Works of Voltaire (1901). Some volumes, including mostly the unabridged Dictionnaire philosophique, translated by William F. Fleming
- (பிரெஞ்சு) Voltaire, his work in audio version பரணிடப்பட்டது 2010-12-30 at the வந்தவழி இயந்திரம்