புஷ்பத்தூர்

ஆள்கூறுகள்: 10°32′27″N 77°24′48″E / 10.540956°N 77.413230°E / 10.540956; 77.413230
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புஷ்பத்தூர்
—  வருவாய் கிராமம்  —
புஷ்பத்தூர்
இருப்பிடம்: புஷ்பத்தூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°32′27″N 77°24′48″E / 10.540956°N 77.413230°E / 10.540956; 77.413230
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் மொ.நா. பூங்கொடி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

புஷ்பத்தூர் (Pushpathur) இந்தியாவின் தமிழ்நாட்டு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய் ஊர். [4][5]பழனி வருவாய் வட்டத்தில் இதன் எண் 1 ஆகும்.[6]

அமைவிடம்[தொகு]

பழனியிலிருந்து உடுமலைப்பேட்டை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பழனியிலிருந்து ஏறத்தாழ 14 கி. மீ. தூரத்திலும், மடத்துக்குளத்திலிருந்து 5 கி.மீ. தூரத்திலும், அமைந்துள்ளது.[7]. இவ்வூர் கடல் மட்டத்திலிருந்து 525 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த ஊரிலிருந்து ஏறத்தாழ 1.5 கி. மீ. தூரத்தில் மேற்கில் அமராவதி ஆறு ஓடுகிறது.இவ்வூர் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் வகைப்பாடு[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, புஷ்பத்தூரில் 1975 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 7448 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.93%. இதில் 3794 பேர் ஆண்கள்; 3654 பேர் பெண்கள் உள்ளனர்.[8] இக்கிராத்தில் ஆரம்பப் பள்ளிகள் 7ம், நடுநிலைப் பள்ளிகள் 2ம், உயர்நிலைப் பள்ளி 1ம், தனியார் சி.பி.எஸ்.இ பள்ளி ஒன்றும் உள்ளது.[சான்று தேவை]

முக்கிய பயிர்[தொகு]

இங்கு அமராவதி ஆற்றின் படுகைப் பகுதியில் உயர்வகை, ஒட்டுத் தென்னை அதிகம் உள்ளது. அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும் மக்காச்சோளமும் கூடுதலாகப் பயிரிடப்படுகின்றன.

நிர்வாக அலகு[தொகு]

கிராமத்தின் தகவல்கள்[தொகு]

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 580 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 1627.03.5 ஹெக்டேர்- (4020.48 ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம் :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை :

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2015-07-18.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-06-23. பார்க்கப்பட்ட நாள் 2015-07-20.
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண். 8. (ப.வெ. 509/ 2015/பி2, நாள்; 17.04.2015).
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.540956 &lon=77.413230 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village _Profile.aspx|2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=புஷ்பத்தூர்&oldid=3564494" இலிருந்து மீள்விக்கப்பட்டது