உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Kalaiarasy/பொது

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Kalaiarasy/பொது!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியா பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்த கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.


உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.--கலை 12:30, 25 ஆகஸ்ட் 2009 (UTC)

--ரவி 23:06, 1 டிசம்பர் 2007 (UTC)

வணக்கம் கலையரசி, விக்கிப்பீடியாவுக்கு உங்களை நானும் வரவேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். தங்களைப் பற்றிய தகவல்களை எம்முடன் பகிர்ந்தமைக்கு நன்றி. விக்கிப்பீடியாவில் தங்களின் பங்களிப்புகளை எதிர்பார்க்கிறோம். முடிந்தால் நோர்வே பற்றிய கட்டுரையை விரிவாக்கி உதவுங்கள். உதவி தேவையென்றால் தயங்காமல் கேளுங்கள்.--Kanags \பேச்சு 10:14, 22 மே 2008 (UTC)[பதிலளி]

கலையரசி, நீங்கள் ஆர்தர் சி. கிளார்க் கட்டுரையில் செய்திருந்த திருத்தங்களைப் பார்த்தேன். அருமையாக செய்துள்ளீர்கள். மிக்க நன்றி. இயன்றபொழுதெல்லாம் அருள்கூர்ந்து இப்படி நல்லாக்கங்கள் செய்து தாருங்கள். உங்கள் துறையிலோ (நுண்ணுயிரியல்) அல்லது ஆர்வம் உள்ள பிற தலைப்புகளிலோ புதிய கட்டுரைகள் ஆக்கியும் தமிழ் விக்கிக்கு ஆக்கம் தர வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 14:57, 25 மே 2008 (UTC)[பதிலளி]

Kanags, செல்வா! நன்றிகள். எனக்கும் இந்த இடத்தில் என்னால் முடிந்தளவு பங்களிப்பு செய்ய வேண்டும் என்றுதான் விருப்பம். ஆனால் தற்சமயம் கொஞ்சம் நேரக் குறைபாடு இருக்கிறது. அதனால் எழுத்துப் பிழை திருத்தத்துடன் இருக்கிறேன். கோடை விடுமுறைக்குப் பிறகு, என்னால் ஓரளவு நேரம் எடுத்து இங்கே கட்டுரைகள் எழுதி பங்களிப்பு செய்ய முடியும் என நம்புகின்றேன். ----கலை

கருத்துக்கள் வேண்டல்

[தொகு]

இந்த ஆண்டு எமக்கு கிடைத்த அரிய பங்களிப்பாளர்களில் நீங்களும் ஒருவர்.

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், ஒரு மீளாய்வும் செய்து, அடுத்த ஆண்டு தொடர்பாக ஒரு திட்டமிடல் செய்வோம். 2010 இல் தமிழ் விக்கிப்பீடியாவின், தமிழ் விக்கித் திட்டங்களில் செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும் என்பது தொடர்பான உங்கள் எண்ணக்கருக்களை பகிர்ந்தால் உதவியாக இருக்கும். குறிப்பான செயற்படுத்தக்கூடிய பரிந்துரைகளாக இருந்தால் நன்று. நன்றி.

விக்கிப்பீடியா:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review
விக்கிப்பீடியா பேச்சு:2009 தமிழ் விக்கிப்பீடியா ஆண்டு அறிக்கை/2009 Tamil Wikipedia Annual Review

மேலும், நேர்வேயில் தமிழ் விக்கிப்பீடியாவை எப்படி அறிமுகப் படுத்தலாம் என்று கூறினால் நன்று. எ.கா நோர்வே தமிழ் ஊடகங்கள், வலைத்தளங்கள் பற்றிய தகவல்கள். நன்றி.

--Natkeeran 02:47, 19 டிசம்பர் 2009 (UTC)

பாராட்டுக்கு நன்றி நக்கீரன். விடுமுறையில் சென்று தற்போதுதான் திரும்பினேன். நோர்வேயில் தமிழ்விக்கிப்பீடியாவை எப்படி அறிமுகப்படுத்தலாம் என்பதுபற்றி முன்பும் ஒருமுறை கேட்டீர்கள். எனக்கும் சரியான வழிமுறை தெரியவில்லை. யோசித்து, மற்றவர்களுடனும் பேசிப்பார்க்க வேண்டும். --கலை 22:08, 27 டிசம்பர் 2009 (UTC)
நன்றி கலை. அங்கிருக்கும் தமிழர் அமைப்புகள், தமிழ் ஊடகங்கள், தமிழ்க் கல்வியில் நிலை பற்றி தகவல்கள் பகிர்ந்தால், அவற்றின் ஊடாக நான் அறிமுகப் படுத்த முடியுமா என்று பாக்கலாம். --Natkeeran 16:32, 1 ஜனவரி 2010 (UTC)

நோர்வேத் தமிழர் பற்றி ஒரு நிகழ்படம்

[தொகு]
இணைப்புக்கு நன்றி நக்கீரன். நோர்வேயில் தமிழர்கள் பற்றிய விபரங்களை சேகரித்துக் கொண்டிருக்கிறேன். சரியான தகவல்கள் யாவும் கிடைத்ததும், அவற்றை தமிழ் விக்கியில் ஒரு இடத்தில் எழுதலாம் என்றிருக்கிறேன். --கலை 11:11, 31 மார்ச் 2010 (UTC)

முதற்பக்க அறிமுகம்

[தொகு]

வணக்கம் கலை. அடுத்த இரு வாருங்களுக்கு, உங்களைப் பற்றிய முதற்பக்க அறிமுகத்தைத் தருவதில் மகிழ்கிறோம்--ரவி 12:57, 16 மே 2010 (UTC)[பதிலளி]

கலை, இன்று முதற்பக்கத்தில் உங்கள் அறிமுகம் இருப்பதைக் கண்டு மகிழ்ந்தேன். பல சிறப்பான கட்டுரைகளை அளித்து தொடர்ந்து நல்லாக்கம் பலவும் செய்து வரும் உங்களைப் பற்றிய அறிமுகத்தை முதற்பக்கத்தில் காண்பது மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகளை நீங்கள் இயன்றவாறு தொடர்ந்து விக்கிப்பீடியாவுக்கு அளிப்பீர்கள், அதன் வழி உலகளாவிய தமிழர்கள் நலம் பெறுவார்கள் என நம்புகிறேன். உங்கள் பங்களிப்புகள் சிறக்க என் நல்வாழ்த்துகள்.--செல்வா 16:19, 16 மே 2010 (UTC)[பதிலளி]
  • கலை, தமிழ் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் தங்கள் அறிமுகம் கண்டேன். மகிழ்ச்சி. தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க பெண் பயனர்கள் குறைவாக உள்ள நிலையில் தங்கள் அறிமுகம் பெண் விக்கிப்பீடியர்களில் இரண்டாம் அறிமுகமாகியிருக்கிறது. இனி மேலும் பல பெண் பயனர்கள் பங்களிக்க முன் வருவார்கள் என நம்பலாம். தங்களின் பணி சிறக்க, தமிழ் விக்கிப்பீடியா பங்களிப்புகள் சிறக்க என் இனிய வாழ்த்துக்கள்.--Theni.M.Subramani 18:03, 16 மே 2010 (UTC)[பதிலளி]
நன்றிகள் ரவி, செல்வா, Theni.M.Subramani


நன்றி

[தொகு]

நிருவாகி அணுக்கம் வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்தமைக்கு மிக்க நன்றி --ஜெ.மயூரேசன் 04:00, 18 ஆகஸ்ட் 2010 (UTC)

நன்றிகள்

[தொகு]

என்னுடைய பிறந்த நாளையொட்டி நீங்கள் தெரிவித்த வாழ்த்துக்களுக்கு எனது மனம் கனிந்த நன்றிகள். --மயூரநாதன் 16:25, 8 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

நிருவாகப் பொறுப்பு ஏற்க விருப்பமா?

[தொகு]

வணக்கம் கலை, நீங்கள் விரும்பினால் தமிழ் விக்கி நிருவாகப் பொறுப்புக்கு உங்களைப் பரிந்துரைக்க விரும்புகிறேன். நன்றி--இரவி 08:02, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கலை முன்வர வேண்டுகிறேன். இது கடினமான பொறுப்பு இல்லை, ஆனால் பயனுடைய துப்புரவுப் பணிகள் செய்யலாம். உங்கள் கட்டுரையாக்கத்தில் தொய்வு வராது . --செல்வா 14:00, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நானும் கேட்க வேண்டும் என்று எண்ணியிருந்தேன். கலை நீங்கள் கட்டாயமாக நிர்வாக அணுக்கம் கொண்டிருக்க வேண்டிய ஒருவர். --மயூரநாதன் 18:42, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
என்னை நிருவாகப் பொறுப்புக்கு பரிந்துரைத்த இரவிக்கும், ஏற்றுக் கொள்ளும்படி கருத்துத் தெரிவித்த செல்வா, மயூரநாதனுக்கும், மற்றும் மடலிட்டவர்களுக்கும் நன்றி. இரவியின் கருத்தைப் பார்த்துவிட்டு என்ன சொல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு நிருவாகி பொறுப்பை ஏற்குமளவுக்கு விக்கியில் அடிப்படை அறிவு, முதிர்ச்சி, அனுபவம் போதுமா, தொழில்நுட்பம் தெரியுமா என்பதே எனது தயக்கத்துக்கு காரணம். அப்படியே அவற்றை கற்றுக்கொண்டு, நிர்வாகப் பணிகளில் மற்றவர்களுக்கு உதவுவதற்காய் நேரத்தை ஒதுக்கும்போது, கட்டுரையாக்கத்தில் நான் விரும்புமளவுக்கு எழுத முடியாமல் போய் விடுமா என்பது அடுத்த தயக்கமாக இருந்தது. செல்வா அதற்கு பதிலளித்துவிட்டார். நன்றி. மேலும் நிர்வாகிகள்பற்றி சிறிது வாசித்தும் பார்த்தேன். அப்போது, ஏனைய நிருவாகிகளுக்கு என்னால் முடிந்த வரையில் உதவுவதுடன், சில பயனுள்ள கருவிகளையும் பயன்படுத்த முடியும் என அறிகிறேன். என்மேல் நம்பிக்கை வைத்து, ஏனையவர்களும் ஆதரவு தந்தால் ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவிக்கிறேன். நன்றி.--கலை 21:46, 16 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கலை, வாக்கெடுப்பு முடிவடைந்து உங்களுக்க நிருவாக அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது. உங்கள் விக்கிப் பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள். --இரவி 15:20, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கலை, நீங்கள் நிருவாக அணுக்கம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் பங்களிப்புகள் தமிழ் விக்கியை முன்னேற்றட்டும்.--அராபத்* عرفات 16:49, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
கலை, தாங்கள் முன்மொழியப்பட்டதை நான் கவனிக்கவில்லை. நீங்கள் நிருவாக அணுக்கம் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி.உங்கள் விக்கிப் பணியை மென்மேலும் சிறப்பாகச் செய்ய வாழ்த்துகள்.--ஹிபாயத்துல்லா 17:11, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
கலை, நிருவாகிகளில் ஒருவராக இணைந்ததில் மகிழ்ச்சி. உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.--Kanags \உரையாடுக 21:22, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
முதல் பெண் செயலாட்சியர் (நிருவாகி) என்னும் பெருமையுடன் தேர்வு பெற்றிருக்கும் உங்களுக்கு என் நல்வாழ்த்துகள். --செல்வா 22:42, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
நிருவாக அணுக்கம் பெற்றமைக்கு வாழ்த்துகள் !!இனி உங்கள் செயலாக்கம் துப்புரவுப் பணிகளுக்கும் கிடைத்து விக்கிப்பணிகள் சிறக்கும்.--மணியன் 23:04, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]
கலை, எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். --மயூரநாதன் 07:47, 24 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

எனக்கு நிருவாக அணுக்கம் கிடைப்பதற்கு ஆதரவு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். என்னால் முடிந்தவரை மேலதிக பங்களிப்பை விக்கிப்பீடியாவுக்கு வழங்குவேன்.--கலை 14:42, 24 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

இது பயன்படும்

[தொகு]

புதிய நிருவாகிகளுக்கான பள்ளி--சோடாபாட்டில் 20:13, 23 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

மிகவும் நன்றி. நிச்சயமாக உதவக்கூடிய இணைப்பு. தேடிக்கொண்டே இருந்தேன். கொடுத்து விட்டீர்கள்.--கலை 14:42, 24 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி வார்ப்புரு

[தொகு]

கலை,

மாதிரி கட்டுரைப்போட்டி வார்ப்புருவைக் கீழே கொடுத்துள்ளேன். இதில் மாற்றங்கள் செய்து பேச்சுப் பக்கத்தில் இடுங்கள்--சோடாபாட்டில் 18:56, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

{{கட்டுரைப் போட்டிக் கட்டுரை|Notes= முதற் பரிசு பெற்ற கட்டுரை (VET8808) |Author =மை. ராசா பிரியங்கா மேரி|College=மீன்வளக் கல்லூரி ஆய்வு நிறுவனம், தூத்துக்குடி|Subject=உயிரியல்}}

நன்றி. மாற்றம் செய்து முடித்த பின்னர்தான் தவறை உணர்ந்து திருத்தினேன். அதற்குள் நீங்கள் கவனித்து விட்டீர்கள். வேண்டிய மாற்றங்களை செய்து விடுகிறேன்.--கலை 19:00, 18 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

பகிர்வுக்கு நன்றி கலை

[தொகு]

--Natkeeran 17:39, 13 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நீக்குக!

[தொகு]
"அம்ஷன் குமார்" இப்பெயரில் ஒரு வெற்றுக் கட்டுரை உள்ளது. அதை உடனடியாக நீக்கவும்.
பார்க்க : அண்மைய மாற்றங்கள்

அன்பு விக்கியன் --சூர்ய பிரகாசு.ச.அ. 13:52, 23 நவம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி.

[தொகு]

நிலைகொள் விவசாயம் கட்டுரையை உடனே கவனித்து ஆங்கில இணைப்பை சேர்த்ததற்கு மிக்க நன்றி.--சஞ்சீவி சிவகுமார் / உரையாடுக 00:27, 20 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

2010 ஆண்டு அறிக்கை, 2011 திட்டமிடல்

[தொகு]

வணக்கம் Kalaiarasy/பொது:

தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகங்களுக்கான தங்களின் தொடர் பங்களிப்புகளுக்கு நன்றி. நமது 2010ஆம் ஆண்டுக்கான தமிழ் விக்கிப்பீடியா அறிக்கை வெளியாகி உள்ளது. இந்த அறிக்கையில் விடுபட்டதாகக் கருதும் கருத்துக்களைத் தாங்கள் சேர்க்கலாம். மேலும் அதன் பேச்சுப் பக்கத்தில் தமிழ் விக்கிப்பீடியா மற்றும் விக்கியூடகத் திட்டங்கள் 2011 ஆம் ஆண்டு முன்னெடுக்கக் கூடிய செயற்பாடுகள் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நம் திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தமிழ் விக்கிப்பீடியாவின் குறைகளையும், தடைகளையும் சுட்டிக் காட்டிக் கூட உங்கள் கருத்துக்கள் இருக்கலாம். நன்றி.

--Natkeeran 17:21, 8 சனவரி 2011 (UTC)[பதிலளி]

Renaming

[தொகு]

I've changed my old username கலை by the new username Kalaiarasy in Ta.wiki on March 9th 2011. I want the name change in all wikis.--கலை 22:21, 14 மார்ச் 2011 (UTC)

அழகான வடிவமைப்பு

[தொகு]

மருத்துவக் கலைசொற் ஒத்தாசைப் பக்கம் மிக நேர்த்தியாக ஒழுங்குபடுத்தி உள்ளீர்கள். விக்கி நுட்பத்தில் நல்ல தேர்ச்சியைக் காட்டுகிறது. நன்றி. --Natkeeran 23:32, 25 மே 2011 (UTC)[பதிலளி]

நன்றி நக்கீரன்.--கலை 08:58, 26 மே 2011 (UTC)[பதிலளி]

சொல் மாற்றம்

[தொகு]
கலை, தகுந்த மாற்றங்களைச் செய்யுங்கள். இந்தச் சொலை நான் நூலில் இருந்தா எடுத்தேன் என்று பார்த்தேன். அப்பிடியில்லை போல் உள்ளது, எனவே துறைசார்ந்தவர்களின் கருத்துப்படி செய்யலாம். பிந்திய பதிலுக்கு மன்னிக்க. --Natkeeran 23:44, 1 சூன் 2011 (UTC)[பதிலளி]

நன்றிகள்

[தொகு]
எனக்கு நிருவாக அணுக்கம் வேண்டி வாக்களித்த,ஊக்கந்தந்த,மனம் நிறையப் பாராட்டிய உங்களுக்கு நன்றிகள். என்னாலான பணிகளை விக்கிக்கு தொடர்ந்து தருவேன். நன்றிகள்--சஞ்சீவி சிவகுமார் 03:03, 17 சூன் 2011 (UTC)[பதிலளி]

பெயர் மாற்றம்

[தொகு]

நீங்கள் உங்கள் பயனர் பெயரை, இலத்தீனிய எழுத்துக்களுக்கு மாற்றிய பிறகு, அனைத்தும் சரியாக உள்ளதா? ஏன் அங்ஙனம் மாற்றினீர்கள் என அறிய விரும்புகிறேன்.நானும் அதுபோலவே, மாற்ற விரும்பி கேட்கிறேன்.02:27, 6 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

ஆம். பெயர் மாற்றத்தின் பின்னர் அனைத்தும் சரியாகவே உள்ளது. நான் மாற்றியதற்கான காரணம் தமிழில் பெயர் இருக்கும்போது வெளிக்கருவிகளைப் பயன்படுத்த முடியவில்லை. உதாரணத்துக்கு தொகுப்பு புள்ளிவிபரங்களை இலகுவில் பெற முடியவில்லை. மேலும் en.wiki, no.wiki போன்றவற்றில் தமிழ் பெயரைப் பயன்படுத்தும்போது, அங்குள்ள மற்றவர்களால் அதனை வாசித்து அறிந்து கொள்ள முடியவில்லை.--கலை 21:43, 6 சூலை 2011 (UTC)[பதிலளி]

நீங்கள் கூறிய காரணங்களுக்காகவே நானும் மாற்ற விரும்புகிறேன். விக்கிப் பொது எனப்படும் விக்கி ஊடக நடுவத்தில் கோப்புகளை வலையேற்றும் போதும், நிறைய சந்தேகங்கள் வருவதுண்டு. அதற்காக பேச்சுபக்கத்தில் ஈடுபடும் போது, சில இடர்கள் வருகிறது.தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்தமைக்கு மிக்கநன்றி.நானும் இரவியிடம் கேட்க போகிறேன்.நோர்வே சொற்களை பதிவேற்றிட, விக்சனரிக்கு வருக! வரும் தமிழ்புத்தாண்டிற்குள் இன்னும் சில படிகள் தமிழ் விக்சனரி முன்னேற, பலரது பங்களிப்புகள் அவசியமாகிறது.ஆதரவு தருக!! வருகிறேன். வணக்கம்.23:47, 8 சூலை 2011 (UTC)உழவன்+உரை..

Invite to WikiConference India 2011

[தொகு]

Hi Kalaiarasy,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

தமிழ் விக்கி நூல்களுக்கு அழைப்பு

[தொகு]
தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம் தங்களின் உதவியை நாடுகிறது

தமிழ் விக்கி நூல்கள் தங்களின் உதவியை நோக்கி உள்ளது. இதுவரை எந்த ஒரு உருப்படியான தமிழ் நூல்கள் (விக்கி மூலத்தில் உள்ள நூல்களைத் தவிர்த்து) எதுவும் இதுவரை இயற்றப்படவில்லை. எனவே தங்களின் உதவி விக்கி நூல்களுக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சுமார் 500 பக்கங்களிலே அங்கு நாம் கொண்டு உள்ளோம். எனவே நமது கவனம் விக்கி நூல்களின் பக்கமும் செலுத்தவேண்டிய கட்டாய நிலையில் உள்ளோம். எனவே தங்களிடம் சில வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். அவைகள்

  1. தாங்கள் விரும்பும் நூல்கள் (விக்கி மூலத்தின் அடுக்கில் கீழ் செல்ல முடியாத நூல்கள், முக்கியமாக பொது காப்புரிமையாக்கப்பட்ட நூல்களை) தமிழ் விக்கி நூல்களில் இருக்கின்றனவா என தேடித் பாருங்கள்.
  2. ஒரு வேளை அங்கு இல்லை என்றால் அந்த புத்தகத்தை ஆரம்பித்து வையுங்கள். முதற் பக்கத்தில் தாங்கள் எந்த எந்தத் தலைப்புகளெல்லாம் இருக்க வேண்டுமோ அவற்றைக் கொண்ட அந்த நூலின் முதற் பக்கத்தை ஆரம்பித்து வையுங்கள்.


தமிழ் விக்கி நூல்கள் சமுதாயம்.

தமிழ் விக்கி ஊடகப் போட்டி

[தொகு]

ஆலமரத்தடியில் தங்கள் கருத்தினைத் தெரிவித்தற்கு நன்றி. அனைவரது கருத்துகளையும் உள்வாங்கி போட்டிக்கான திட்ட முன்மொழிவைத் தயாரித்துள்ளேன். அது குறித்த உங்கள் கருத்துகளை - இப்பக்கத்தில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கி ஊடகப் போட்டி இட வேண்டுகிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 16:23, 4 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]


புலத் தமிழர்களும் தமிழ் கல்வியும்

[தொகு]

நல்ல பகிர்வு கலை. ஆங்கில வழி நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் படிக்க வேண்டும் என்ற உணர்வும், தேவையும் அறவே இல்லை. ஆனால் நேர்டிக் நாடுகள், யேர்மனி, பிரான்சு போன்ற இடங்களில் வசிப்பவர்களுக்கு தமிழை பேற்றிப் படிக்கிறார்கள். ஒரு விதத்தில் ஆங்கில சிந்தனை அடிமைத்தனமே இந்த நாடுகளில் வசிப்பவர்களின் தமிழ் மீது அக்கறை இன்மைக்கு காரணம் எனலாம். கனடாவில் 20% மாணவகள் கூட தமிழ் படிப்பதில்லை. இங்கு எல்லா நிலைகளிலும் தமிழ் பாடமாக எடுக்க முடியும் என்றாலும், அதைத் தெரிவு செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. நாய்க்கு மொழி புரிவது போல, அவருக்கு தமிழ் விளங்கும் ஆனா கதைக்க மாட்டார் என்று எதோ பெருமையாக கூறுவார்கள். அல்லது தமிழ் கதைக்கத் தெரிஞ்சா சரி, எழுதப் வாசிக்க தெரித் தேவை இல்லை என்று கூறுவர். கற்பிக்க ஊக்கம் தருதல், கற்பிக்கும் முறை, உள்ளடக்கம் ஆகிய எல்லாவற்றிலும் மேம்பாடு தேவை. இந்த மாநாடு ஒரு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும்.

தமிழ்ப் பாட்டையும் ஆங்கிலத்தில் எழுதி இசைக் கச்சேரி வைப்பார்கள். தமிழ்த் தேசியத்தின் பாதுகாவலர்கள் என்பார்கள், ஆனால் தமது பிள்ளைகளோடு தமிழ் பேச மாட்டார்கள். இது கனடாவின் நிலைமை, ஆனால் அங்கு அப்படி இல்லை என்பது இந்த மாநாடு ஊடாகத் தெரிகிறது. --Natkeeran 00:33, 22 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]

உதவமுடியுமா?

[தொகு]

விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#Medicine project என்னும் குறிப்பைப் பார்க்கவும். இது மிகவும் பயனுடைய ஒரு திட்டம் போல் தெரிகின்றது. இதற்கு நீங்கள் இயலும்போது உதவமுடியுமா? நானும் பங்களிக்க ஆவலாக உள்ளேன். இப்பொழுது குறுந்தகடு திட்டம் நடக்கின்றது. இதனோடு இதிலும் இயலுமாறு பங்களிக்க முடியுமா என எண்ணிப்பார்க்க வேண்டுகிறேன். நன்றி. --செல்வா 21:00, 24 பெப்ரவரி 2012 (UTC)

உங்கள் பதிவுகள்

[தொகு]

மன்னிக்கவும் கலையரசி!!! நீங்கள் என் பேச்சு பக்கத்தில் எழுதியிருந்த கேள்விகளுக்கு பல பணிகளின் காரணமாக வெகு நாட்களாக பதில் எழுதவில்லை. இன்று மீண்டும் படிக்க நேர்ந்தது. தவறாக என்ன வேண்டாம்--Nan 10:34, 25 பெப்ரவரி 2012 (UTC)

மிக்க நன்றி!

[தொகு]
நன்றி
தமிழ் விக்கி ஊடகப் போட்டியில் தொடர் பங்களிப்பாளராக வெற்றி பெற்றதற்கான உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி! Anton (பேச்சு) 06:00, 31 மார்ச் 2012 (UTC)


தங்களின் வாழ்த்துக்களால் நான் அகம் மகிழ்ந்தேன். ஊடகப் போட்டியில் பெற்ற வெற்றிகான தங்களின் வாழ்த்துக்கு எனது நன்றிகள். --எஸ்ஸார் (பேச்சு) 15:30, 31 மார்ச் 2012 (UTC)

நன்றி

[தொகு]

நிர்வாகித் தேர்தலில் ஆதரவாக வாக்களித்தமைக்கும், தங்கள் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி--சண்முகம் (பேச்சு) 12:11, 26 மே 2012 (UTC) நிர்வாகித் தேர்வில் என்னை ஆதரித்தமைக்கு நன்றி ஸ்ரீகாந்த் (பேச்சு) 14:15, 30 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

தங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கலை. தங்களுக்காக பயனர் வார்ப்புரு வார்ப்புரு:Kalaiarasy/navbar உருவாக்கியுள்ளேன் அதனை நகலெடுத்து தங்கள் பயனர் பக்கங்களில் {{}} என்றவாறு ஒட்டிக்கொள்ளுங்கள். நன்றி-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 12:18, 26 மே 2012 (UTC)[பதிலளி]

நன்றி!
நிருவாகி அணுக்கத்திற்காக எனக்கு வாக்களித்தமைக்கு மிக்க நன்றி.

-பார்வதிஸ்ரீ


கட்டுரைக்கு நன்றி

[தொகு]

கேட்டவுடன் வாழ்க்கை வட்டம் கட்டுரையை உருவாக்கி அதை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துமளவுக்கு தரம் உயர்த்தியதற்கும் நன்றி.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 05:04, 27 மே 2012 (UTC)[பதிலளி]

பகுப்பிற்கு உள்ளிணைப்பு

[தொகு]

சமுதாய வலைவாசலில் நீங்கள் விரும்பியவாறு ஒருங்கிணைக்கப்பட வேண்டிய கட்டுரைகளின் பட்டியலை இணைத்துள்ளேன். [[பகுப்பு:அஅஅஅ]] என்றிட்டால் (பொதுவாக நாம் கட்டுரையின் இறுதியில் இடுகிறோம்; ஆனால் எங்கு வேண்டுமானாலும் இருக்கலாம்) அது பக்கத்தை அந்தப் பகுப்பில் இடும். எனவே அந்தப் பகுப்பிற்கு இணைப்பைத் தர வேண்டுமானால் முன்னால் கோலனுடன் [[:பகுப்பு:அஅஅ]] என்று இட வேண்டும். தேவையின்றி ஆஜர் ஆவதற்கு மன்னிக்கவும். இது எனது நினைவுறுத்தலுக்காகவும் பயன்படும் என இங்கிட்டேன். --மணியன் (பேச்சு) 14:11, 21 சூன் 2012 (UTC)[பதிலளி]

நான் இதனை எப்படிச் செய்வது என்று மண்டையை உடைத்துக் கொண்டேன். மிகவும் நன்றி மணியன். //தேவையின்றி ஆஜர் ஆவதற்கு மன்னிக்கவும்.// கேட்காமல் செய்வர் பெரியர் :). --கலை (பேச்சு) 15:36, 21 சூன் 2012 (UTC)[பதிலளி]

கட்டடக்கலை(சிறப்புக்கட்டுரை)

[தொகு]

கட்டடக்கலையை சிறப்புக்கட்டுரை பகுப்பில் சேர்த்தபின் தற்போது 11 சிறப்புக்கட்டுரைகள் உள்ளன. பார்க்க:சிறப்புக் கட்டுரைகள்---Prash (பேச்சு) 05:43, 16 சூன் 2012 (UTC)[பதிலளி]

கட்டுரை உருவாக்கல் முரண்

[தொகு]

கலை, நீங்கள் உலகப் பாரம்பரியக் குழு உருவாக்கிய அதே நேரத்தில் நானும் உலக பாரம்பரியக் குழு உருவாக்கி உள்ளேன். நான் நீங்கள் முதன்மை கட்டுரை விரிவாக்கத்தில் இருப்பீர்கள் என்று எண்ணி துணையாக இருக்கும் கருத்தில் இந்தக் கட்டுரையை உருவாக்கினேன். இந்நிலையில் இரண்டையும் இணைத்திடுமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன். --மணியன் (பேச்சு) 15:07, 14 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

பிறந்தநாள் வாழ்த்துகள்

[தொகு]
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , Kalaiarasy/பொது அவர்களே! விக்கிப்பீடியா பிறந்தநாள் குழுமம் தங்களை பல்லாண்டு வாழ வாழ்த்துகிறது!

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்--Kanags \உரையாடுக 11:56, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் !!--மணியன் (பேச்சு) 14:25, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

நன்றி கனக்ஸ், மணியன். --கலை (பேச்சு) 16:59, 28 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]
தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்! --Anton (பேச்சு) 07:17, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்(இப்போதுதான் அறிந்தேன்..:))--சங்கீர்த்தன் (பேச்சு) 07:58, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் Anton, சங்கீர்த்தன்.--கலை (பேச்சு) 11:53, 31 ஆகத்து 2012 (UTC)[பதிலளி]

வணக்கம் கலை. பிந்திய வாழ்த்துக்கள்.--சிவம் 23:39, 25 செப்டெம்பர் 2012 (UTC)

நன்றிகள்

[தொகு]

கலை, நான் அமீரகத்துக்கு வெளியே சென்றிருந்ததால் இன்றுதான் உங்கள் வாழ்த்துக்களைப் பார்க்க முடிந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். --- மயூரநாதன் (பேச்சு) 18:19, 18 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

மீளமை செய்துள்ளேன்

[தொகு]

வணக்கம் கலையரசி, விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்) பக்கத்தில் சங்கீர்த்தனன் செய்த மாற்றங்களை தவறுதலாக மீளமை செய்திருந்தீர்கள், அதனை திரும்ப கொண்டுவந்திருக்கிறேன். நன்றி. -- தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:02, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

வணக்கம். ஆம், நான் எனது கைத்தொலைபேசியில் இருந்து விக்கிப்பீடியாவைப் பார்வையிட்டபோது, இந்தத் தவறு நிகழ்ந்தது. மீண்டும் தவறு ஏற்படாமல், கணினியில் வந்து பொறுமையாகச் சரி செய்வதற்கு முதல் நீங்களே சரி செய்து விட்டீர்கள். சரி. உங்கள் பக்கத்திற்கு வந்து உங்களுக்கு ஒரு நன்றி போடலாம் என்றால், அதற்குள் நீங்களே எனக்கு தகவல் சொல்லி விட்டீர்கள். நன்றி தினேஸ். --கலை (பேச்சு) 14:09, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]
:-D--சங்கீர்த்தன் (பேச்சு) 14:22, 28 அக்டோபர் 2012 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]
நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! --மதனாகரன் (பேச்சு) 06:09, 14 சனவரி 2013 (UTC)[பதிலளி]


நன்றிகள்
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி! தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சிக்கு என் பங்கினை ஆற்ற இது பெரிதும் உதவி செய்யும்!
--Anton (பேச்சு) 06:26, 14 சனவரி 2013 (UTC) +1--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:54, 15 சனவரி 2013 (UTC)[பதிலளி]

கருத்து தேவை

[தொகு]

பேச்சு:தமிழர் முறைமணங்கள்--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 16:58, 15 ஏப்ரல் 2013 (UTC)

உதவவும்...

[தொகு]

வணக்கம், சகோதரி..!
பயனர்:Arunthanumalayan அவர்கள், கதிரியக்க மருத்துவம் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார் [1]. அக்கட்டுரைகள் விக்கிநடைக்கு மாற்றப்படவேண்டிய நிலையில் உள்ளன. தங்களுக்கு போதிய நேரம் கிடைக்கையில் அக்கட்டுரைகளை நடை திருத்தி விக்கியாக்கம் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 18:08, 14 மே 2013 (UTC)[பதிலளி]

நேரம் கிடைக்கையில் நிச்சயம் செய்ய முயற்சிக்கின்றேன்.--கலை (பேச்சு) 18:10, 14 மே 2013 (UTC)[பதிலளி]

Inter Wiki Translator குறித்து

[தொகு]

வணக்கம் கலை, Inter Wiki Translator குறித்து தங்களின் ஐயங்களுக்கு பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். இக்கருவிக்கான Help Documentation பயனர்:Jayarathina/iwtஇல் எடுத்துக்காட்டுகளோடு உள்ளது. இது ஆங்கிலத்தில் உள்ளது. இதனைப்படித்தும் புரியவில்லையெனில் அல்லது அது தெளிவாற்றதாய் தெரிந்தாலோ தயவு செய்து என்னை தொடர்பு கொள்ளவும். உங்களுக்கு உதவக்காத்திருக்கின்றேன். --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:01, 15 மே 2013 (UTC)[பதிலளி]

சந்தேகம்

[தொகு]

தயவு செய்து முடிந்தளவு வேகமாக பதிலளிக்கவும்.இக் கட்டுரையில் உள்ளது போல் ஆரஞ்சு என்ற சொல் விக்கிபீடியா கொள்கைகளுக்கமைய கட்டுரைகளில் ஆரஞ்சு நிறமாக காட்டப்படலாமா? --ஆதவன் (பேச்சு) 14:39, 19 மே 2013 (UTC)[பதிலளி]

அப்படிக் காட்டுவது எல்லா இடங்களிலும் அவசியமா என்று தெரியவில்லை. அதேவேளை அப்படிக் காட்டுவதில் தவறேதும் இருப்பதாகவும் தெரியவில்லை. காட்டக்கூடாது என்று விக்கிபீடியா கொள்கை எதுவும் இல்லையென்றே நினைக்கின்றேன்.--கலை (பேச்சு) 14:43, 19 மே 2013 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அரிய வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள். நன்றி.--இரவி (பேச்சு) 12:01, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைக் வேண்டுதல்

[தொகு]

வணக்கம். விக்கிப்பீடியா பற்றி பொது ஊடகங்களில் பரப்புரை செய்யவும், பத்தாண்டுகளை பதிவு செய்யவும் சிறப்புக் கட்டுரைகளை இதழ்களில் வெளியிடுதல் உதவும். அந்த வகையில் தொடர் பங்களிப்பாளரான நீங்கள் பின்வரும் தலைப்புக்களில் ஒன்றில் விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/சிறப்பிதழ்கள்#கட்டுரைத் தலைப்புக்கள் கட்டுரை எழுதித் தர முடிந்தால் சிறப்பு. 400 அல்லது 800 சொற்கள். செப்டெம்பர் 11 2013 திகதிக்குள். குறிப்பாக பின்வரும் தலைப்புக்களில் ஒன்று:

  • தமிழ் விக்கியின் பல்லூடகப் போட்டியின் வெற்றி
  • தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு
  • நோர்வேயில் தமிழ் விக்கியூடகங்களின் தேவையும் வாய்ப்புக்களும்

உங்கள் பரிசீலனைக்கும் பங்களிப்புக்கும் நன்றி. --Natkeeran (பேச்சு) 00:24, 12 ஆகத்து 2013 (UTC)[பதிலளி]

உதவி தேவை...

[தொகு]

வணக்கம்! தமிழ் விக்கியில் பல ஆண்டுகளாக பங்களித்துவரும் பங்களிப்பாளர் எனும் முறையில், தங்களின் உதவி தேவைப்படுகிறது…

  • தமிழ் விக்கியின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களித்த / பங்களித்துவரும் பயனர்களுக்கு 'பாராட்டுச் சான்றிதல்' வழங்கிட நாம் முடிவு செய்ததை தாங்கள் அறிவீர்கள். இதற்கான தெரிவு செய்தலில் உங்களின் உதவியினை நாடுகிறோம்.
  • 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகம்' எனும் காப்பகத்திலிருந்து பயனர்களின் பெயர்களை எடுத்து முதற்கட்ட பட்டியல், இங்கு இடப்பட்டுள்ளது. ஆனால் இது முழுமையடைந்த பட்டியலன்று… இந்தப் பட்டியலை நிறைவு செய்திட தங்களின் உதவி தேவைப்படுகிறது!
  • சிலர் 'முதற்பக்க பங்களிப்பாளர் அறிமுகத்தில்' இடம்பெறவில்லை; சிலர் அதற்குரிய தகவலை இன்னும் தரவில்லை. இன்னும் பலர் கடந்த சில மாதங்களில் நல்ல பங்களிப்புகளைத் தந்திருக்கிறார்கள். இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு சான்றிதழ் பெற இருப்போரின் பட்டியலை தாங்கள் முழுமை செய்து தந்தால் உதவியாக இருக்கும். தொகுப்புகள் எண்ணிக்கை, ஒட்டு மொத்தப் பங்களிப்பு என்பது போல் ஏதேனும் ஒரு வரையறையைக் கொள்ளலாம்.
  • வேறு ஏதேனும் காரணிகள் உங்கள் எண்ணத்தில் தோன்றினால்... அதனையும் கருத்தில்கொண்டு தெரிவினை செய்யலாம்.
  • மிக்க நன்றி!--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 06:09, 26 செப்டம்பர் 2013 (UTC)

நன்றியுரைத்தல்

[தொகு]
நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்
வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 18:45, 15 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]
நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --செந்தி--ஃ உரையாடுக ஃ-- 01:49, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மிக்க நன்றி
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!
--அஸ்வின் (பேச்சு) 03:23, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

--நந்தகுமார் (பேச்சு) 08:18, 16 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

கட்டுரைப் போட்டி

[தொகு]
வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:53, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

பூச்சி

[தொகு]

தங்களின் பூச்சி கட்டுரையில் இன்னும் இருபத்து ஆறாயிரம் பைட்டுகள் சேர்த்தால் அக்கட்டுரை விரிவான கட்டுரைப் போட்டிக்கு தகுதி பெற்றதாகிவிடும். ஆதலால் நான் தங்கள் கட்டுரையை முன்மொழியாக எழுதிவிட்டேன். தங்களால் முடிந்தால் மேலும் 26 ஆயிரம் பைட்டுகள் சேர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 16:26, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

எனக்குச் செய்தியைத் தந்தமைக்கு நன்றி நந்தினிகந்தசாமி. எனக்கு 'பூச்சி' கட்டுரைப் போட்டியில் இருப்பது தெரியாது. பூச்சிகளின் மேல் இருந்த பாசத்தால், திடீரெனத் தோன்றி விரிவாக்கத் தொடங்கினேன் :). //நான் தங்கள் கட்டுரையை முன்மொழியாக எழுதிவிட்டேன்.// என்று எதைக் குறிப்பிட்டிருக்கின்றீர்கள் என்று புரியவில்லையே. எனக்கு முடிந்தளவில் எழுதுகின்றேன். வேறும் யாராவது தொடர்ந்து எழுத முடிந்தாலும் எழுதலாம். :)--கலை (பேச்சு) 22:18, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இங்கு பாருங்கள்.:) --நந்தினிகந்தசாமி (பேச்சு) 22:21, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]
எங்கே? :)--கலை (பேச்சு) 22:23, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

அய்யோ மன்னிச்சிடுங்க. இங்கு பாருங்கள்.--நந்தினிகந்தசாமி (பேச்சு) 22:27, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]

ஓ, சரி. நீங்களும் விரிவாக்கிப் பரிசைத் தட்டிச் செல்லலாம் :). --கலை (பேச்சு) 22:41, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]
இந்த மாதம் போட்டியே இல்லைனு நான் சில கட்டுரைகள் எழுதினேன் அவ்வளவு தான். நீங்கள் எளிதாக வெல்லலாம். உங்கள் ஆர்வத்தினால் பரிசும் கிடைக்கும். முயற்சி செய்யுங்கள் :). இன்னும் 26000 பைட்டுகள் தானே , விடிவதற்குள் சேர்த்துவிடுங்கள் :).--நந்தினிகந்தசாமி (பேச்சு) 22:48, 30 சனவரி 2014 (UTC)[பதிலளி]
நான் இந்தப் போட்டியை எண்ணிப் பார்க்கவில்லை. என்னால் முடிந்த நேரங்களில், எனக்குப் பிடித்த கட்டுரைகளை விரிவாக்குகின்றேன். அவ்வளவே. உங்களுக்குப் பதில் எழுதிவிட்டுப் படுக்கப் போய் விட்டேன் :). போக முன்னர் உங்களை கட்டுரையை விரிவாக்கிப் பரிசை வெல்லும்படி கூறிச் சென்றேனே. நீங்களும் செய்யாமல் விட்டுவிட்டீர்கள் போல் உள்ளது. இன்று வேலை அதிகம். இப்போதுதான் இங்கே எட்டிப் பார்க்க முடிந்தது. :)--கலை (பேச்சு) 15:07, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]
:) பரவாயில்லை கலை. தாங்களே எழுதி விடுங்கள் , இன்னும் நேரம் உள்ளது. உங்களுக்கு பணிச்சுமை இருந்தால் எழுத வேண்டாம்.:)--நந்தினிகந்தசாமி (பேச்சு) 15:19, 31 சனவரி 2014 (UTC)[பதிலளி]

படிமங்கள்

[தொகு]

வணக்கம் கலை, நீங்கள் இன்று தரவேற்றியிருந்த மாத்ரித் படங்களை பொதுவகத்தில் தரவேற்றுவதே நல்லது. நீங்களே எடுத்த படங்கள் என்பதால் அங்கு தரவேற்றுவதில் எவ்விதப் பிரச்சினையும் இருக்காது. படிமங்களுக்குத் தகுந்த பெயரையும் இடுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 20:08, 23 மார்ச் 2014 (UTC)

சரி, அவ்வாறே செய்கின்றேன்.--கலை (பேச்சு) 20:11, 23 மார்ச் 2014 (UTC)

வாழ்த்துக்கள்

[தொகு]

2011 மே மாதம் 6ம் தேதி ஒஸ்லோ திரைப்பட விழாவிற்கு வந்த இயக்குநர் சேரனின் குடும்ப ஆல்பமாக இருக்கட்டும், தற்போது நீங்கள் இணைத்திருக்கும் படங்களாக இருக்கட்டும் அனைத்துமே அருமையாக உள்ளது. --Muthuppandy pandian (பேச்சு) 10:58, 24 மார்ச் 2014 (UTC)

வாழ்த்துக்கு நன்றி. சேரனின் குடும்ப அல்பம் என்று நீங்கள் எதனைக் குறிப்பிடுகின்றீர்கள்? அவரின் குடும்பத்தினரைத் தெரியும். படங்களும் எடுத்தேன். ஆனால் இங்கே பதிவேற்றியதாக நினைவில் இல்லையே. மேலும், ஒவ்வொரு இடத்திற்கும் போய் வரும்பொழுது பல படங்கள் எடுத்து வருவது வழமைதான். ஆனால் அவற்றைப் பதிவேற்ற நேரம்தான் இல்லாமல் இருக்கின்றது. தற்போது பதிவேற்றியவை கடந்த ஆண்டில் எடுத்த படங்கள். நீண்ட இடைவெளி இருப்பதால், சில சமயம் இடங்களின் பெயர் மறந்துபோய், படத்திற்கான சரியான பெயரை வழங்க முடியாமல் போய்விடுகின்றது, எனவே அவற்றைப் பதிவேற்றுவதில்லை. --கலை (பேச்சு) 12:14, 24 மார்ச் 2014 (UTC)

விக்கித் திட்டம் வானியலில் பங்கேற்க அழைப்பு

[தொகு]
திரைகடலோடித் திரவியம் தேடு
திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Kalaiarasy/பொது!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

வானியல்த் துறையை வளர்த்தெடுக்க விக்கியில் பணியாற்றுபவர்கள் மிக மிக அரிது, அப்படி இருகையில் தாங்கள் வானியல் வலைவாசலை மேம்படுத்தி உதவ முன்வந்ததோடு மட்டுமன்றி வானியல் சார்ந்த பல கட்டுரைகளையும் மேம்படுத்த முயன்றதாக அறிகின்றேன். தாங்களும் விக்கித்திட்டம் வானியலில் பங்குகொண்டு அத்துறையை வளர்த்தெடுக்க தங்களை அன்புடன் அழைக்கும் அன்பு இளவல்... -அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 12:04, 27 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் குறுங்கட்டுரைகளை விரிவாக்க உதவி தேவை

[தொகு]

வணக்கங்க, குறித்த கால நீக்கல் வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில குறுங்கட்டுரைகளை விரிவாக்கி உதவ முடியுமா? பல தரப்பட்ட தலைப்புகள் குறித்து ஆர்வமும் பங்களிப்பு முனைப்பும் உடையோர் தமிழ் விக்கிப்பீடியாவில் வெகு சிலரே. எனவே, கட்டுரைகளைத் துவக்கியோரே மெனக்கட்டால் ஒழிய பல்வேறு தலைப்புகள் முன்னேற்றம் காண்பதில்லை. தற்போது இவ்வேண்டுகோளை எதிர்கொள்ளும் சில கட்டுரைகளில் தங்கள் பங்களிப்புகளைக் கண்டேன். எடுத்துக்காட்டுக்கு, கொழுப்பிழையம். எனவே, இவற்றை மேம்படுத்துவதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கலாம் என்று கருதி இத்தகவலை இடுகிறேன். மற்றபடி, வழமை போல் தங்களுக்கு ஆர்வம் உள்ள துறைகளில் குறிப்பிடத்தக்கமையும் போதிய உள்ளடக்கமும் உள்ள தரமான குறுங்கட்டுரைகளை உருவாக்குவத்தில் எந்தச் சிக்கலும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 11:23, 12 மே 2014 (UTC)[பதிலளி]

என்னால் தற்போது செய்யக்கூடிய விக்கிப் பங்களிப்பின் அளவு குறித்து மேலே குறிப்பிட்டிருக்கின்றேன். இது சில காலம் தொடரும். மேலும் பேச்சு:கொழுப்பிழையம் பக்கத்தில் எனது கருத்தை இட்டிருக்கின்றேன். --கலை (பேச்சு) 15:31, 12 மே 2014 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:46, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

தானியங்கி வரவேற்பு

[தொகு]

வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் இங்கு பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 08:33, 7 மே 2015 (UTC)[பதிலளி]

உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை

[தொகு]

விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்) என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--உழவன் (உரை) 17:46, 4 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு

[தொகு]
விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 19:34, 7 சூலை 2015 (UTC)[பதிலளி]

வணக்கம் செல்வசிவகுருநாதன்! எனக்கும் இந்த விக்கிமாரத்தானில் பங்கேற்க விருப்பமுண்டு. ஆனால் குறிப்பிட்ட அந்த நாளில் (19 ஜூலை) பயணத்தில் இருப்பேன். அதனால் அன்றைக்குப் பங்கேற்க முடியாமைக்கு வருந்துகின்றேன். ஜூலை, ஆகஸ்ட்டில் பயணங்கள் அதிகமிருப்பதனால், சரியாகப் பங்களிக்க முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் முன்புபோல் பங்களிக்க முயல்வேன். நன்றி.--கலை (பேச்சு) 20:45, 8 சூலை 2015 (UTC)[பதிலளி]

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:33, 27 சூலை 2016 (UTC)[பதிலளி]

இணைய இணைப்பு வசதி கட்டுப்படுத்தப்பட்ட ஒரு சூழல். பங்களிப்புச் செய்ய முடியவில்லை. அழைப்புக்கு நன்றி மா. செல்வசிவகுருநாதன்

இந்தியா

[தொகு]

இந்தியா கட்டுரையில் அனாமதேயப் பயனர்கள் இருவர் செய்த விசமத் தொகுப்புகளை நீக்கும் முயற்சியில் நீங்கள் சரியாகக் கட்டுரையை மீள்விக்கவில்லை போல் தெரிகிறது. இதனாலேயே நீங்கள் செய்த மாற்றங்களையும் சேர்த்து நீக்கி கட்டுரையை சரியான தொகுப்புக்கு முன்னிலைப்படுத்தியிருக்கிறேன். //கடைசியாக மூன்று அனாமதேயர்களும் செய்த தொகுப்புகள் விசமத்தனமானவை. இவற்றை கிருஷ்ணமூர்த்தியின் தொகுப்புக்கு மீள்விக்க வேண்டும். இதற்கு நல்ல வழி: கிருஷ்ணமூர்த்தியின் கடைசித் தொகுப்பைத் தெரிவு செய்து "தொகு"வைத் தெரிவு செய்ய வேண்டும். அப்போது பின்வரும் எச்சரிக்கை வரும்: எச்சரிக்கை: நீங்கள் தொகுத்துக்கொண்டிருப்பது இப்பக்கத்தின் பழைய திருத்தமொன்றையாகும். இதை நீங்கள் சேமித்தால், மேற்படி திருத்தத்தின் பின்னர் செய்யப்பட்ட மாற்றங்கள் அனைத்தும் இழக்கப்படும்.. இப்போது இதனை சேமித்தீர்கள் ஆனால் அந்த மூன்று தொகுப்புகளையும் ஒரே நேரத்தில் அகற்றலாம்.// நீங்கள் இதனை மணல்தொட்டியிலும் சோதித்துப் பார்க்கலாம்.--Kanags \உரையாடுக 10:02, 7 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

நன்றி Kanags!

விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறை விளைவுகள் கருத்தெடுப்பு

[தொகு]

வணக்கம். கடந்த மே மாதம் சென்னையில் நடைபெற்ற விக்கி நுட்பத் திறன்கள் பயிற்சிப் பட்டறையின் விளைவுகளை அறிவதற்கான சுருக்கமான கருத்தெடுப்பு இங்கே (தமிழில்) உள்ளது. அருள்கூர்ந்து, இதில் கலந்து கொள்ள சில மணித்துளிகள் ஒதுக்குங்கள். இப்பயிற்சிப் பட்டறையின் பயன்களை மதிப்பிடவும், வருங்காலத்தில் விக்கிமீடியா அறக்கட்டளை இது போன்று விக்கிச் சமூகங்களுக்கான நேரடிப் பயிற்சிப் பட்டறைகளை நடத்துமா என்பதை முடிவு செய்யவும் இக்கருத்தெடுப்பு மிகவும் இன்றியமையாததாகும். நன்றி.--இரவி (பேச்சு) 11:55, 29 நவம்பர் 2016 (UTC)[பதிலளி]

ஒரு நினைவூட்டல். ஏற்கனவே இந்தக் கருத்தெடுப்பில் கலந்து கொண்டீர்கள் என்றால் இந்த நினைவூட்டலைப் புறக்கணிக்க வேண்டுகிறேன். --இரவி (பேச்சு) 10:41, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

விக்கிக்கோப்பை

[தொகு]
2017 விக்கிக்கோப்பை
2017 விக்கிக்கோப்பை

வணக்கம்! எமது விக்கிப்பீடியாவில் வருடாந்தம் இடம்பெறும் விக்கிக்கோப்பைப் போட்டியானது 2017 ஆம் ஆண்டின் சனவரி மாதத்தில் இடம்பெறவுள்ளது.


இப்போட்டியில் நீங்களும் பங்கு கொண்டு பல கட்டுரைகளையும உருவாக்கிப் பாராட்டுக்களைப் பெறுவதுடன் மேலும் தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உங்கள் அளப்பெரிய பங்கினை ஆற்றுங்கள்.


போட்டியில் தாங்கள் பங்குபெற விரும்பின் சனவரி 15 ஆம் திகதிக்கு முன்னர் "இங்கு பதிவு செய்க" எனும் கீழுள்ள பொத்தானை இப்போதே அழுத்தி உங்கள் பெயரைப் பதிவுசெய்யுங்கள். மேலதிக விபரங்களை இங்கு தெரிந்து கொள்ளலாம். நன்றி!..


இங்கு பதிவு செய்க
.

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:27, 8 திசம்பர் 2016 (UTC)[பதிலளி]

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு

[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:38, 6 மார்ச் 2017 (UTC)


விக்கிமீடியா வியூகம் 2017

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --Natkeeran (பேச்சு) 20:30, 10 ஏப்ரல் 2017 (UTC)


துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு

[தொகு]

வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் இங்கு உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)

மீளமை

[தொகு]

தாங்கள் செய்த மாற்றம் (குறிஞ்சியின் பேச்சுப்பக்கம்) ஒன்று தவறுதலாக மீளமைக்கப்பட்டுவிட்டது, மீண்டும் தாங்கள் தொகுத்த நிலைக்குக் கொண்டுவந்துவிட்டேன்.--சி.செந்தி (உரையாடுக) 19:20, 13 மே 2017 (UTC)[பதிலளி]

பிரச்சனையில்லை செந்தி. கைத்தொலைபேசியில் பார்க்கும்போது எனக்கும் இப்படி நடப்பதுண்டு.--கலை (பேச்சு) 20:26, 13 மே 2017 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டம்

[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா 15ஆம் ஆண்டுக் கொண்டாட்டங்களை யாழ்ப்பாணத்தில் நடாத்த ஆரம்ப வேலைகளை ஆரம்பித்துள்ளேன். நிகழ்வுகள் வடிவமைப்பிலும் ஒருங்கிணைப்பிலும் நீங்களும் ஈடுபட்டு நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற உதவ வேண்டுகிறேன். நன்றி. --சிவகோசரன் (பேச்சு) 09:34, 18 பெப்ரவரி 2018 (UTC)

சிவகோசரன்! என்னால் முடிந்த உதவிகளைச் செய்கின்றேன்.--கலை (பேச்சு) 09:57, 18 பெப்ரவரி 2018 (UTC)
நன்றி. உங்களையும் ஒருங்கிணைப்பாளராக இணைத்து விடுகிறேன். --சிவகோசரன் (பேச்சு) 15:28, 21 பெப்ரவரி 2018 (UTC)
நான் இலங்கையிலிருந்து வெகு தூரத்தில் இருப்பதனால் என்ன வகையான உதவிகள் தர முடியுமெனத் தெரியவில்லை. பார்க்கலாம். --கலை (பேச்சு) 11:20, 23 பெப்ரவரி 2018 (UTC)
பரவாயில்லை. இணையவழி ஒருங்கிணைப்பில் ஈடுபடலாம். --சிவகோசரன் (பேச்சு) 15:51, 24 பெப்ரவரி 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் பங்கேற்க அழைப்பு

[தொகு]

அன்புள்ள கலையரசி,

உடன் பங்களிப்பவன் என்ற முறையில், இது நான் உங்களுக்கும் மற்ற தமிழ் விக்கிப்பீடியர்களுக்கு எழுதும் தனிப்பட்ட மடல்.

2005ல் இருந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களித்து வருகிறேன். அப்போது தோராயமாக 600 கட்டுரைகள் இருந்தன. இப்போது 1,15,000 கட்டுரைகள் உள்ளன. மலைப்பாக இருக்கிறது. மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. அதே வேளை, கடந்து வந்த பாதையையும் எண்ணிப் பார்க்கிறேன்.

இது ஒரு நெடும் பயணம். பல பேருடைய பல மணிக்கணக்கான உழைப்பைக் கொட்டிய பயணம். ஆங்கில விக்கிப்பீடியா 2001 தொடங்கி 2004 வரை அடைந்த வளர்ச்சியைக் கூட நமது 15 ஆண்டுகளில் நாம் இன்னும் எட்டிப் பிடிக்க முடியவில்லை! அப்படி என்றால், இன்னும் செல்ல வேண்டிய தொலைவோ மிக அதிகம். ஆங்கிலத்தில் ஒருவருக்குக் கிடைக்கக் கூடிய அறிவின் அளவும் தரமும் தமிழர்களுக்குக் கிடைப்பது எப்போது? தமிழர்களின் சமூக வரலாற்று, அரசியல் சூழலுக்கு உட்பட்டு, உடனடியாக கட்டற்ற அறிவைப் பெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.

அதற்கு நாம் புதிய வழிமுறைகளையும் பெரும் திட்டங்களையும் தீட்ட வேண்டியுள்ளது. அப்படிச் செய்ய வேண்டுமானால் நாம் அதற்கு வலுவானவர்கள் என்று உறுதிபட நிறுவ வேண்டிய தேவை உள்ளது. ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன்:

தமிழ் விக்கிமூலத்தில் 2000 நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளோம். இவை பல இலட்சம் பக்கங்கள் உள்ளன. இவற்றை மனித முறையில் சரிபார்ப்பது என்றால் பல பத்தாண்டுகள் ஆகலாம். ஆனால், இயந்திரம் மூலம் சரி பார்க்க முடியுமா? அதற்குப் பல மென்பொருளாளர்களை முழு நேரமாக ஈடுபடச் செய்ய முடியுமா? பெருமெடுப்பில் தன்னார்வலர்களை முழு நேரமாக ஈடுபடுத்த முடியுமா? (இப்படிச் செய்வதற்குச் சமூகத்தின் ஒப்புதலும் விக்கிமீடியா அறக்கட்டளையின் ஒப்புதலும் தேவைப்படும் என்பதைக் கவனிக்க!) அதனால், இதனை ஒரு எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிடுகிறேன்.

நாம் ஏற்கனவே சிறப்பாகச் செயற்படுத்திய சில திட்டங்களுக்கான எடுத்துக்காட்டுகள்:

இத்தகைய வலுவான திட்டங்களின் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு என்று ஒரு நற்பெயரைப் பெற்றுள்ளோம். நாம் அடுத்து கோரும் திட்டங்களுக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வெகு அரிதாகவே விக்கிப்பீடியாவையும் தமிழ் கட்டற்ற அறிவுச் சூழலையும் வெளியாட்கள் புரிந்து கொள்கிறார்கள். புரிந்து கொள்ளும் ஆட்களால் நமக்கு உதவ முடிவதில்லை. உதவ முடிகிற ஆட்களோ நம்மைப் புரிந்து கொள்வதில்லை.

வயிறு பசிக்கும் மாணவனால் பள்ளிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து ஒரு நூற்றாண்டு முன்பே இலவச மதிய உணவுத் திட்டம் கொண்டு வந்தவர்கள் நாம். ஆனால், பில் கேட்சு போன்றவர்களே கூட இன்னும் இது பயனுள்ளது தானா என்று சில ஆப்பிரிக்க நாடுகளில் ஆய்வு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உலகச் சூழலில், நமக்கு என்ன தேவை என்று அறிந்து திட்டங்களை வகுக்க முடிகிற நம்முடன், மற்றவர்கள் இணைந்து கொள்ள பல ஆண்டுகள் ஆகிறது.

2010க்கு முன்பே தகவல் உழவனுக்கு நமது தனிப்பட்ட முயற்சியில் கணினி உதவி அளித்தோம். அதன் பிறகு தமிழ்க் குரிசிலுக்கு இணைய உதவி அளித்தோம். இத்திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னோடியாக அமைந்து இன்னும் பல இந்திய விக்கிப்பீடியர்களுக்கு உதவியது. தற்போது, இதன் நன்மையைப் புரிந்து கொண்டு விக்கிமீடியா அறக்கட்டளையும் கூகுளும் இணைந்து நூற்றுக் கணக்கானவர்களுக்கு இலவசமாக இணையத்தையும் கணினியையும் வழங்குகிறது. இத்திட்டம் பயனுள்ளது தானா என்று இன்னும் கூட சிலருக்கு ஐயமாக இருக்கலாம். ஆனால், பயன் மிக்கது என்பதில் நான் உறுதியாக இருக்கிறோம். திட்டம் முடிந்து விளைவுகளை அலசும் போது, இத்திட்டம் உலக நாடுகள் பலவற்றுக்கும் விரிவுபடுத்தப்பட்டு இன்னும் பல நாட்டு விக்கிப்பீடியருக்கு உதவும். இந்திய அளவில், உலக அளவில் இது போன்ற திட்டங்கள் எப்படி வகுக்கப் படுகின்றன என்று அருகில் இருந்து பார்த்த முறையில் சொல்கிறேன்: மாற்றம் மிகக் கடினமாக உள்ளது. நமக்கு என்ன தேவை என்று தெரிந்தும், அதனைப் பெற்று வருவது மிகச் சிரமமாக உள்ளது. நாம் இத்தகைய திட்டங்களைச் செயற்படுத்தக் கூடியவர்கள் தானா என்று ஐயுறும் போக்கு உள்ளது.

அதனால், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கு உதவும் இத்திட்டம் வெற்றியடையுமா, எந்த அளவு வெற்றியடையும், தமிழ் விக்கிப்பீடியா இதில் செலுத்தப் போகும் பங்கு என்ன என்பது நம் கையிலேயே உள்ளது.

இத்திட்டத்தின் முதற்பகுதியாக கணினி, இணைய உதவி வழங்கினோம். இரண்டாம் பகுதியாக கட்டுரைப் போட்டி தொடங்கியுள்ளது. கவனிக்க: இது வழமை போல் அனைவரும் பங்கு கொள்ளக்கூடிய போட்டியே. கணினி, உதவி பெற்றோருக்கு மட்டுமான போட்டி அன்று.

ஏற்கனவே, பல தமிழ் விக்கிப்பீடியா முன்னோடித் திட்டங்களில் சிறப்பாகப் பங்களித்தவர் என்ற முறையில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டியில் முனைப்புடன் பங்களித்து மாபெரும் வெற்றியடையைச் செய்ய உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

தமிழ் விக்கிப்பீடியர் 50 பேர் மாதம் 15 கட்டுரைகளை எழுதினாலும் 2000 கட்டுரைகள் என்ற இலக்கை இலகுவாக அடைந்து விடலாம். எனவே. உங்களுடைய வழக்கமான விக்கி பங்களிப்பு ஆர்வத்துக்கு இடையே இந்தப் போட்டியிலும் பங்கு பெறக் கோருகிறேன். உங்கள் ஒவ்வொருவராலும் பரிசுகள் வெல்ல முடியாது. அது நம் நோக்கமும் இல்லை. இங்கு பரிசு என்பது ஊக்கம் மட்டுமே. ஆனால், தனிப்பட்ட பரிசுகளைத் தாண்டி அதிகம் கட்டுரைகளை எழுதும் விக்கிப்பீடியாவுக்குச் சமூகப் பரிசு உண்டு. இது சுமார் 10,00,000 இந்திய ரூபாய் மதிப்பில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 40 தமிழ் விக்கிப்பீடியர்களுக்குத் திறன்கள் பயிற்சி அளிக்கும் வாய்ப்பாக அமையும். இந்த வாய்ப்பைத் தட்டிச் செல்வது நமது திறன்களை மேம்படுத்திக் கொள்ளவும் மீண்டும் ஒரு முறை அனைவரும் கண்டு மகிழவும் வாய்ப்பாக அமையும்.

இந்த ஒவ்வொரு தலைப்பும் தமிழர்களுக்கு உடனடித் தேவை தானா என்று கூட உங்களுக்கு ஐயம் இருக்கலாம். இங்கு காணப்படும் தலைப்புகள் யாவும் தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் தேடி ஆங்கில விக்கிப்பீடியாவில் படிக்கப்படும் பக்கங்கள். இவை தமிழ் விக்கிப்பீடியாவில் குறைந்தபட்ச தரத்திலேனும் இல்லாவிட்டால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்தல் ஒழிய இந்த அறிவைத் தமிழர்கள் பெற முடியாது. மொழியின் அடிப்படையில் எழும் இந்த இடைவெளியை நிரப்பத் தான் இந்தப் போட்டி நடைபெறுகிறது. இதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கூடுதலாகப் பல புதிய வாசகர்களும் பங்களிப்பாளர்களும் கிடைப்பார்கள் என்றும் எதிர்பார்க்கிறோம். உங்களுக்கு ஆர்வம் ஊட்டக் கூடிய கலை, இலக்கியம், வரலாறு, புவியியல், அறிவியல், நுட்பம், நல வாழ்வு, பெண்கள் என்று இன்னும் பல்வேறு துறைகளில் கூடுதல் தலைப்புகளைப் பெற முயன்று கொண்டிருக்கிறோம். இந்தக் கூட்டுழைப்பு நிச்சயம் ஒரு அறிவுச் சமூகமாக நம்மை அடுத்த தளத்துக்கு இட்டுச் செல்லும்.

வழமை போல் எத்தனையோ வகையான பங்களிப்புகளில் ஈடுபடும் தாங்கள், இப்போட்டியில் கலந்து கொண்டு இத்திட்டத்தை வெற்றியடையச் செய்வீர்கள் என்றால் அதன் விளைவுகள் மிகவும் தொலைநோக்கானவையாக அமையும். தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு எங்களுக்குக் கூடுதல் திட்டங்களைச் செயற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டு வாங்கும் வலுவான இடத்தில் நம்மை அமர்த்தும். இது வரை நான் இப்படி உங்களுக்குக் கடிதம் எழுதியது இல்லை. இப்போது எழுதுகிறேன் என்றால், கட்டுரைப் போட்டியில் உங்கள் பங்களிப்பு இப்போது தேவை என்று உரிமையோடு கேட்டுக் கொள்ளவே.

இத்திட்டம் தொடர்பாக கேள்விகள், ஐயங்கள் இருப்பின் தயங்காது கேளுங்கள்.

நன்றி. --இரவி (பேச்சு) 09:37, 10 மார்ச் 2018 (UTC)

கட்டுரைப் போட்டியில் தலைப்புகள் குறித்த முக்கிய மாற்றம் ஒன்றைப் பற்றி உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 2000 தலைப்புகள் பெரிதும் திரைப்படங்கள், நடிகர்கள், பாடகர்கள் போன்ற பரவலான ஈடுபாடுடையை தலைப்புகளை மட்டும் கொண்டிருந்தன என்பதைக் கவனத்தில் கொண்டு தற்போது கூடுதலாகப் பல புதிய தலைப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இப் புதிய பட்டியலில் பெண்கள், உடல்நலம், அறிவியல் மற்றும் நுட்பம், வரலாறு மற்றும் புவியியல், கலை மற்றும் அறிவியல் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை தந்து தொகுத்துள்ளோம். இவை தமிழகப் பகுதியில் இருந்து அதிகம் படிக்கப்படும் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரைகள். ஆனால், இவை தமிழில் இல்லை (அல்லது போதுமான விரிவு/தரத்துடன் இல்லை). தமிழகத்தில் இருந்தாலும் ஆங்கிலம் அறிந்தால் மட்டுமே இவ்வறிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலையை மாற்றி தமிழிலேயே இவ்வறிவைத் தரும் முயற்சியே இக் கட்டுரைப் போட்டி. இத்தலைப்புகள் உங்களுக்கு ஆர்வமூட்டும் அதே வேளை சமூகத்துக்கும் பயனுடையதாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இது வரை கிடைத்துள்ள தரவின் அடிப்படையில் இத்தலைப்புகளின் கீழ் எழுதப்படும் கட்டுரைகள் வழமையான கட்டுரைகளைக் காட்டிலும் சராசரியாக நான்கு மடங்கு வாசகர்களைப் பெற்றுத் தருவதை அறிய முடிகிறது. உங்கள் ஆர்வத்தின் அடிப்படையில் இவ்விரண்டு பட்டியல்களில் இருந்தும் கட்டுரைகளை எழுதலாம். மீண்டும் நினைவூட்டுகிறேன். இப்போட்டியின் விளைவு என்பது தமிழ் விக்கிப்பீடியாவுக்கு மட்டுமன்று, பிற இந்திய மொழி விக்கிப்பீடியாக்களுக்கும், நம்மைப் போன்ற வளரும் நாடுகளைச் சேர்ந்த விக்கிப்பீடியாக்களுக்கும் பெரும் பயன் நல்க வல்லது. ஆகவே, மறந்து விடாதீர்கள். மறந்தும் இருந்து விடாதீர்கள். (யாராச்சும் சோடா கொடுங்கப்பா :) ) போட்டியில் கலந்து கொண்டு திட்டத்தை வெற்றியடையச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 17:49, 18 மார்ச் 2018 (UTC)

Share your experience and feedback as a Wikimedian in this global survey

[தொகு]
WMF Surveys, 18:19, 29 மார்ச் 2018 (UTC)

Reminder: Share your feedback in this Wikimedia survey

[தொகு]
WMF Surveys, 01:17, 13 ஏப்ரல் 2018 (UTC)

Your feedback matters: Final reminder to take the global Wikimedia survey

[தொகு]
WMF Surveys, 00:27, 20 ஏப்ரல் 2018 (UTC)

Thank you for being one of Wikipedia's top medical contributors!

[தொகு]
please help translate this message into your local language via meta
The 2017 Cure Award
In 2017 you were one of the top ~250 medical editors across any language of Wikipedia. Thank you from Wiki Project Med Foundation for helping bring free, complete, accurate, up-to-date health information to the public. We really appreciate you and the vital work you do! Wiki Project Med Foundation is a user group whose mission is to improve our health content. Consider joining here, there are no associated costs.

Thanks again :-) -- Doc James along with the rest of the team at Wiki Project Med Foundation 03:13, 26 ஏப்ரல் 2018 (UTC)

அருமை. வாழ்த்துகள். --இரவி (பேச்சு) 06:14, 26 ஏப்ரல் 2018 (UTC)
Thanks James!. வாழ்த்துக்கு நன்றி. --கலை (பேச்சு) 18:01, 26 ஏப்ரல் 2018 (UTC)

வேங்கைத் திட்டம் - தமிழ் முந்துகிறது

[தொகு]

வணக்கம். இது வேங்கைத் திட்டத்தில் கட்டுரைகள் எழுதி வருவோர் அனைவருக்கும் பொதுவான செய்தி.

நேற்று (சனி) அனைவரும் அயராது கட்டுரைகளை அளித்ததில் கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்குப் பிறகு மீண்டும் பஞ்சாபியை முந்தி இருக்கிறோம் என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் - 981. பஞ்சாபி - 974. இந்த முன்னணியைத் தக்க வைப்பது நமது வெற்றிக்கு மிகவும் முக்கியம். இன்று முதல் போட்டி முடியும் மே 31 வரை ஒவ்வொரு நாளும் குறைந்தது 50+ கட்டுரைகளை எழுதுவது வெற்றியை உறுதி செய்யும். இது வரை 44 பேர் போட்டியில் கட்டுரைகள் எழுதியிருக்கிறோம். எல்லாராலும் இந்த வாரம் பங்களிப்பது இயலாது என்பதால், ஒவ்வொருவரும் அடுத்த ஐந்த நாட்களும் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு கட்டுரைகள் எழுதினாலும் போட்டியை வெல்லலாம். போட்டி முடியும் வரை ஒவ்வொரு நாள் நிலவரத்தை இங்கு இற்றைப்படுத்துகிறேன். நன்றி -- இரவி

மீண்டும் பஞ்சாபியர் முன்னணி!!

[தொகு]

வணக்கம். தற்போதைய நிலவரம் தமிழ் - 1028 ~ பஞ்சாபி - 1040. மீண்டும் பஞ்சாபி விக்கிப்பீடியர் முன்னணி பெற்றுள்ளார்கள்! தற்போது தமிழில் போட்டிக்கு அளிக்கப்பட்டுள்ள கட்டுரைகள் 10 முதல் 20 கட்டுரைகள் (தானியங்கித் தமிழாக்கம், மற்ற விதிகளைப் பின்பற்றாமை) ஏற்கப்படாமல் போகலாம் என்பதால் நாம் இன்னும் முனைந்து கட்டுரைகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. இன்றோடு சேர்த்து மீதம் 4 நாட்கள் மட்டுமே. சென்ற ஆண்டு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் சிலரும் போட்டியில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 கட்டுரைகள் எழுத முனைவோம். ஒவ்வொரு தலைப்புப் பட்டியலின் தொடக்கத்திலும் முன்னுரிமைப் பட்டியல் மஞ்சள் வண்ணத்தின் கீழே தரப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கட்டுரை எழுதுவது என்ற முடிவெடுக்க இவை உங்களுக்கு உதவலாம். பலரும் ஒரே கட்டுரையை எழுதுவதைத் தவிர்க்கும் பொருட்டு, கட்டுரையை எழுதத் தொடங்கியவுடன் உடனுக்கு உடன் அவற்றைப் பதிப்பித்துச் சேமியுங்கள். வெல்வோம். நன்றி. -- இரவி

வேங்கைத் திட்டம் - இன்று இல்லையேல் என்றும் இல்லை!

[தொகு]

வணக்கம். இன்னும் 24+ மணி நேரங்களில் வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி நிறைவடைகிறது. தற்போதைய நிலவரம். தமிழ் - 1123 ~ பஞ்சாபி - 1185. இடைவெளி அதிகமாகத் தோன்றலாம். ஆனால், பங்கேற்பாளர்கள் எண்ணிக்கையில் நாம் 50ஐத் தொடுகிறோம். அவர்கள் 29 பேர் இருக்கிறார்கள். போட்டியல் தமிழ் வெல்லவேண்டும் என இன்று புதிதாக 10+ ஆசிரியர்களும் தங்களும் அன்றாடப் பணியை ஒதுக்கி வைத்து இணைந்திருக்கிறார்கள். நாம் 5 மணி நேரம் ஒதுக்கி ஆளுக்கு 5 கட்டுரை எழுதினாலும் போட்டியை இலகுவாக வெல்லலாம். இயன்றவர்கள் வேலைக்கு விடுப்பு போட்டு இன்னும் கூடுதலாகவும் எழுதலாம். (ரொம்ப overஆ போறமோ :) ) கடந்த காலங்களில் ஒரே நாள் விக்கி மாரத்தானில் 200 கட்டுரைகள் எழுதிய அனுபவமும் நமக்கு இருக்கிறது. சொல்ல வருவது என்னவென்றால், இன்று இல்லையேல் என்றும் இல்லை. அதே வேளை உற்சாகம் குறையாமல் உடலை வருத்திக் கொள்ளாமல் பங்களிப்போம். போட்டியைத் தாண்டி நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு முயற்சியாக பல முக்கிய கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம் என்பதே உண்மையான மகிழ்ச்சி. வாட்சாப்பு, முகநூலில் போட்டியார்கள் பங்கு பெறும் குழு அரட்டை உள்ளது. அங்கு இணைந்து கொண்டால் அனைவரும் கூடி உற்சாகமாகப் பங்களிக்கலாம். நாம் கற்ற மொத்த வித்தையும் இறக்குவோமா? வெல்வோம்! ஜெய் மகிழ்மதி :) --இரவி

வேங்கைத் திட்டம் - இறுதி 5 மணி நேரம்

[தொகு]

வணக்கம். வேங்கைத் திட்டம் கட்டுரைப் போட்டி இன்னும் ~5 மணி நேரத்தில் நிறைவுறும். அதாவது சூன் 1 இந்திய நேரம் காலை 05:29:29 வரை. தற்போதைய நிலவரம் தமிழ் 1229 ~ பஞ்சாபி 1316. வெல்ல முடியுமா என்பதே அனைவர் மனதிலும் உள்ள கேள்வி. ஒரு பத்து பேர் அடுத்த 5 மணி நேரம் மணிக்கு ஒரு கட்டுரை எழுதினாலும் நம்மால் வெல்ல இயலும் என்று கணக்குப் போட்டுச் சொல்லும் கட்டத்தைத் தாண்டி விட்டோம். கடந்த மூன்று மாதங்களில் 1200+ தரமான கட்டுரைகளை உருவாக்கி இருக்கிறோம். இதனால் 1,00,000 பேருக்கு மேல் புதிதாகப் பயன் பெற்றுள்ளார்கள். இனி நாம் உருவாக்கும் ஒவ்வொரு கட்டுரையும் இப்பயனைக் கூட்டுவதே. இப்போட்டியை வாய்ப்பாகப் பயன்படுத்தி கடைசி பந்து வரை அடித்து விளையாடுவோம்! -- இரவி

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018

[தொகு]

பெண்கள் நலனுக்கான விக்கி மகளிர் 2018, பெண்கள் உடல்நலம் சார்ந்த கட்டுரைகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் நடைபெறும் தொடர்தொகுப்பு (Edit-a-thon). அக்டோபர் மாதம் முழுவது நடைபெறும் இத்தொடர்தொகுப்பு போட்டியில் பங்குபெற்று பெண்கள் நலன்சார்ந்த கட்டுரைகளை உருவாக்கி/மேம்படுத்தி உதவுமாறு தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். போட்டிக்குறித்த தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலம். நன்றி --நந்தினிகந்தசாமி (பேச்சு)

முயற்சி செய்கிறேன் நந்தினி.--கலை (பேச்சு) 10:23, 2 அக்டோபர் 2018 (UTC)[பதிலளி]

Results from global Wikimedia survey 2018 are published

[தொகு]

19:25, 1 அக்டோபர் 2018 (UTC)

விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018 பங்கேற்க அழைப்பு

[தொகு]

வணக்கம்.

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

2015-ம் ஆண்டு முதல் விக்கிப்பீடியா ஆசிய மாதம், ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதத்தில் நடைபெறுகிறது. இந்த வருடமும், விக்கிப்பீடியா ஆசிய மாதம், 2018, நவம்பர் மாதம் 1-ஆம் முதல் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுகிறேன். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 14:15, 3 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

பொங்கல் வாழ்த்துக்கள்

[தொகு]

அன்புடையீர், வணக்கம். தங்களுக்கு, தங்கள் குடும்பத்தினருக்கும், என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்றும் அன்புடன் --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:23, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]

@Gowtham Sampath: உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய தைப்பொங்கல் நல் வாழ்த்துகள்.--கலை (பேச்சு) 19:42, 14 சனவரி 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Kalaiarasy/பொது&oldid=2635165" இலிருந்து மீள்விக்கப்பட்டது