விக்கிப்பீடியா பேச்சு:அடிப்படை தகவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு கட்டுரையில் போதிய உள்ளடக்கம் என்றால் என்ன, அதனை யார், எப்படித் தீர்மானிப்பது என்பது தொடர்பான உரையாடல்கள் அண்மையில் கூடியுள்ளன. இது தொடர்பான ஒரு கொள்கை / இணக்க வழிகாட்டலை முன்னிட்டு இவ்வுரையாடலைத் துவக்குகிறேன். தற்போது என்னிடம் தீர்வுகள் / பரிந்துரைகள் / முன்முடிவுகள் ஏதும் இல்லை. பிரச்சினைகளை மட்டும் முன்வைக்கிறேன்.

ஒரு கட்டுரையில் குறைந்தது மூன்று வரிகள் இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம் என்பது நாம் பல ஆண்டுகளாகப் பின்பற்றி வரும் ஒரு நடைமுறை. இதில் உள்ள போதாமையை மட்டும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்:

1. மூன்று வரிகள் ஏற்புடையது என்று நாம் சொல்வது மூன்று சொற்றொடர்களையா? கணினித் திரையில் ஒன்றுக்கு ஒன்றாக மூன்று வரிகள் வரக்கூடிய ஒன்றா? முற்றுப்புள்ளி இல்லாமல் பல சொற்களுக்கு நீளும் பின்நவீனத்துவப் பாணி எழுத்து நடையை ஒரு வரியாகக் கொள்வதா இல்லை இதன் நீளத்தை எப்படி அளப்பது? எனவே, மூன்று வரி என்பதற்குப் பதில் Twitter போல எழுத்துகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுவதா? அல்லது, கட்டுரையின் பைட்டு அளவைக் கணக்கிடுவதா? கட்டுரையின் பைட்டு அளவில் உரைப்பகுதியைச் சேராத உள்ளடக்கும் சேரும்.

வரி என்றாலும் எழுத்து என்றாலும் சொற்றொடர் என்றாலும் ஒரு கட்டுரைக்குத் தேவையான அடிப்படை தகவலைத் தராமலேயே எழுத்துத் திறமை அல்லது போதாமையை முன்வைத்து மாற்றி மாற்றி எழுதலாம்.

எடுத்துக்காட்டுக்கு,

சோமனூர் கட்டுரையில் பின்வருமாறு தகவல் உள்ளது:

//சோமனூர் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் உள்ள ஓர் ஊர். இவ்வூரில் விசைத்தறித் தொழில் ஒரு முக்கியமான தொழிலாகும். இவ்வூரில் ஒரு தொடர்வண்டி நிலையமும் உள்ளது.//

இதில் மூன்று சொற்றொடர்கள் / வரிகள் உள்ளன. நமது வரையறை படி இது ஏற்க வேண்டிய கட்டுரை.

ஆனால், இக்கட்டுரையைப் படிக்கக் கூடியவர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்:

  • ஏற்கனவே சோமனூரில் உள்ளவர்கள். இவர்கள் புதிதாக அறிந்து கொள்ள இக்கட்டுரையில் ஒன்றும் இல்லை.
  • சோமனூர் என்று ஒன்று இருக்கிறது என்று அறிந்த கோவை உள்ளூர்வாசிகள். இவ்வூரின் தொழில் தவிர இங்கு அறிந்து கொள்ள ஒன்றும் இல்லை.
  • சோமனூருக்கு முற்றிலும் புதியவர்கள். இவர்களுக்குச் சோமனூர் எங்கிருக்கிறது என்று கண்டு கொள்வதற்கான புவியிடக் கூறுகள் இல்லை. இப்படி ஒரு ஊர் இருக்கிறதா என்று அறிவதற்கான ஆதாரம் இல்லை. கோவையில் இரயில் நிலையம் உள்ள சோமனூர் ஏதாவது இருக்கிறதா என்று அவர்கள் தேடித் தான் கண்டுபிடிக்க வேண்டும்.

இதே பாணியில்,

//அம்மாப்பட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர். இவ்வூரில் வேளாண்மை முதன்மைத் தொழில். இவ்வூரில் ஒரு பேருந்து நிலையமும் தண்ணீர் தொட்டியும் இருக்கிறது//

என்று ஒரு கட்டுரை எழுதிக் காட்டும் போது மட்டும் அதன் அபத்தம் உறைக்கிறது.

இங்கு சோமனூர் குறிப்பிடத்தக்க ஊரா என்பது வேறு உரையாடல்.

சோமனூரின் புவியிடக்கூறுகள் என்ன, அதன் அருகமை ஊர்கள் என்ன, அதன் ஊராட்சி தகுதி நிலை என்ன, மக்கள் தொகை / அஞ்சல் குறியீட்டு எண் என்ன போன்ற விவரங்கள் அவ்வூரைப் பற்றிய அடிப்படை தகவலைத் தருமாறு இருக்கும். அதற்கு மேல் அவ்வூரைப் பற்றிக் கூடுதல் தகவல் சேர்க்க முடிந்தால் நலம்.

இந்த அனைத்து அடிப்படை தகவலையும் ஒரு புதுப்பயனரோ மற்றவர்களோ உடனே சேர்க்க வேண்டும் என்றில்லை. ஆனால், பல மாதங்கள் ஆன பிறகும் அடிப்படை தகவல் இல்லாத போது, இதே பாணியில் பல கட்டுரைகள் வரும் போது இது ஒரு தரச் சிக்கலாக மாறுகிறது.

எனவே, மூன்று வரி என்றால் என்ன என்பது தொடங்கி மூன்று வரிகள் இருந்தாலும் அது எப்படி அடிப்படை தகவல் இல்லாமல் பயனற்றதாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

ஜிப்ரால்டர் கல்லூரி என்ற கட்டுரை பின்வருமாறு உள்ளது.

//ஜிப்ரால்டர் கல்லூரி என்பது ஜிப்ரால்டர் நாட்டில் அமைந்துள்ள கல்லூரி. இது பதின்வயதைத் தாண்டியவருக்கு கல்வி கற்பிப்பதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது. இதை ஜிப்ரால்டர் அரசு நிர்வகிக்கிறது. முதலில் பொதுக் கல்லூரியாக இருந்து, பின்னர் தொழில்நுட்பக் கல்லூரியாக மாற்றப்பட்டது.//

இதனை

ஜிப்ரால்டர் கல்லூரி என்பது ஜிப்ரால்டர் நாட்டில் அமைந்துள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி என்று ஒரே வரியில் மாற்றி எழுத முடியும்.

ஒரு கல்லூரி என்றால் பதின் வயதைத் தாண்டியுள்ளவர்கள் தான் படிப்பார்கள் என்பதால் இது கட்டுரைக்குப் போதிய பயன் தராத ஒரு வரியாகவே பார்க்க முடியும்.

மூன்று வரிகள் என்பதில் இருந்து ஆறு வரி என்றோ இரண்டு கிலோ பைட்டு என்றோ எப்படி அளவைக் கூட்டினாலும் அடிப்படை தகவல் குறித்த பிரச்சினைகள் இருக்கக்கூடும். ஆனால், அளவைக் கூட்டுவது ஒரு வேளை அடிப்படை தகவலை உள்ளடக்கி எழுதுவதற்கான கட்டாயத்தைக் கொண்டு வரலாம்.

முன்கூட்டியே ஒவ்வொரு துறைக்கும் எது அடிப்படை தகவல் என்று இணக்க முடிவுக்கு வருவது கடினமானது. அதே வேளை தரக் கண்காணிப்பில் ஈடுபடுவோருக்கு தெளிவாக, புறவயமான வழிகாட்டல்களும் தேவை. கருத்துகளை வரவேற்கிறேன். நன்றி. --இரவி (பேச்சு) 14:43, 17 ஏப்ரல் 2014 (UTC)

இத் தகவல் யாருக்காவாது உதவி செய்யுமா?[தொகு]

ஒரு குறுங்கட்டுரை எழுதப்படும் போது, "இத் தகவல் யாருக்காவாது உதவி செய்யுமா?" என்ற அளவீடே முதன்மையான அளவீடாக இருக்க வேண்டும். சோமனூர் என்ற எடுத்துக்காட்டை எடுத்துக் கொள்வோம். விசைத்தறி என்ற தகவல் தமிழர் நெசவுக்கலை பற்றி ஆய்வு செய்யும் ஒருவருக்குப் பயன்படம். இதனை தமிழ்நாட்டில் நெசவுத்தொழில் நடைபெறும் ஊர்கள் என்ற பகுப்புக்குள் சேர்க்கலாம். ஒருவர் என்ன, எப்ப தேடுவார், அவருக்கு இதுதான் முக்கியம் என்று முன்கூட்டியே முடிவுசெய்ய முடியாது. ஒரு தொடரூந்து நிலையம் இருக்கும் என்பது அந்த ஊரின் போக்குவரத்து வசதி பற்றிய தகவல் ஆகும். அம்மாப்பட்டியில் வேளாண்மைத் தொழில் இருப்பது உங்களுக்கு ஒரு பரிச்சியமான செய்தியாக இருக்கலாம். ஆனால் வேளாண்மைத் தொழில் எங்கு நடைபெறுகிறது என்று தேடுபுவருக்கு இல்லை.

"The problem is that "useful" is subjective and changes all the time. If I'm lost in London, an A-Z would be useful and a cookery book would be useless. But if I want to cook something, it's the other way round.

Deletionists are trapped with an outdated metaphor. They want to make a "quality encyclopaedia". The notion of quality, like usefulness, is relative. Relevance is a much better measure. The concept of an encyclopaedia comes from the print age. Limited space meant limited entries, so the notion of 'notability' helps when choosing what goes in. Limitations on how often a new edition could be printed meant that accuracy was all important. You don't want your encyclopaedia to be filled with mistakes.

Online there are no space limitations so notability is less important and corrections can be – and are – made very quickly, which means accuracy is always a work in progress.

The question Wikipedians should ask when looking at a page is "would this help someone searching for information on this subject". Nothing else matters. If the entry isn't notable, who cares? The point is, would someone find it useful? If an entry hasn't been properly verified, flag it as such: "This page is improperly verified and the information here should be treated with caution. Please help verify it if you can."

மேற்கோள்--Natkeeran (பேச்சு) 16:02, 17 ஏப்ரல் 2014 (UTC)

எப்படி எழுதப்படுகிறது என்பதை இறுக்கமாகக் கட்டுப்படுத்த முடியாது[தொகு]

தகவல் செறிவுடன் கட்டுரைகள் எழுதப்பட வேண்டும் என்பது வரவேற்கப்பட வேண்டிய ஒரு வழிகாட்டலே. செறிவை மதிப்பிடுவது அவ்வளவு இலகுவானது இல்லை. அது பெரிதும் அகம் சார்ந்த அல்லது subjective மதிப்பீடு. ஒருவரின் எழுதுமுறை, பிற ஒருவரின் எழுதுமுறையில் இருந்து வேறுபடும். ஆகவே வசனங்கள் அடிப்படையிலேயே இந்த மதிப்பீட்டைச் செய்ய முடியும். தற்போது இருக்கும் மூன்று வசனங்கள் வழிகாட்டல் போதுமானது. --Natkeeran (பேச்சு) 16:08, 17 ஏப்ரல் 2014 (UTC)