பேச்சு:கொழுப்பிழையம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழுப்பிழையம் உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

இந்தக் கட்டுரை இழையவியலில் இருக்க வேண்டிய முக்கியமான கட்டுரை என்பதனால் (என்று நான் நினைத்ததனால்) நான் எழுத ஆரம்பித்த கட்டுரை. நான் அனேகமாக நான் ஆரம்பித்த கட்டுரைகளை தொடர்ந்து மேம்படுத்தவே முயன்று வந்திருக்கின்றேன். எதனை மேம்படுத்துகின்றேன் என்பதெல்லாம் எனக்குக் கிடைக்கும் நேரத்தைப் பொறுத்தும், அந்த நேரம் எதனைப் பற்றி எழுதலாம் என எனக்குத் தோன்றுகின்றதென்பதைப் பொறுத்தும் அமையும். பல சமயம் நான் ஆரம்பிக்காத கட்டுரைகளை மேம்படுத்தத் தோன்றினால் அவற்றை விரிவாக்குவதிலும், உரைதிருத்தம் செய்வதிலும் நேரம் போய் விடும். இந்தக் குறிப்பிட்ட கட்டுரை என்னாலோ, அல்லது வேறு யாராலுமோ மேம்படுத்தப்படக் கூடிய கட்டுரை என்றே நம்புகின்றேன். எனவே தயவுசெய்து நீக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கின்றேன். அப்படியின்றி வார்ப்புருவில் உள்ளது போன்று, ஒரு மாத காலத்திற்குள் மேம்படுத்தாவிடில் அழிக்கப்படும் என்றால் எதுவும் சொல்வதற்கில்லை. --கலை (பேச்சு) 15:26, 12 மே 2014 (UTC)[பதிலளி]

கலை, இது முக்கியமான கட்டுரையே. இன்னும் பல பங்களிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்து இக்கட்டுரையை மேம்படுத்தும் நோக்கிலேயே குறித்த கால நீக்கல் வேண்டுகோள் இடப்பட்டது. அண்மையில் இவ்வாறு அணுகப்பட்ட பல கட்டுரைகள் சிறப்பான மேம்பாடு கண்டுள்ளன. எடுத்துக்காட்டுக்கு, பணப் பயிர், அணுவுலை விபத்துகள். பல தரமான முதற்பக்க கட்டுரைகள் உருவாக்கம், மற்ற பலர் தொடங்கிய கட்டுரைகளையும் விரிவாக்குவது என்று உங்கள் சிறப்பான பங்களிப்புகள் அனைவரும் அறிந்ததே. நான் உங்கள் பேச்சுப் பக்கத்தில் விடுத்திருந்த செய்தி, உங்களைத் தனிப்பட்ட முறையில் குறை கூறுவது போல் தொனித்திருந்தால், அதற்கு வருந்துகிறேன். நிச்சயம் இக்கட்டுரை விரிவாக்கப்படும், நீக்கப்படாது என்பதற்கு உறுதியளிக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 07:37, 16 மே 2014 (UTC)[பதிலளி]

கலை தொப்பை என்பது இதை தான் குறிக்கிறதா? அல்லது அது வேறா? --தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 06:25, 22 ஏப்ரல் 2021 (UTC)

@தென்காசி சுப்பிரமணியன்:! தொப்பை என்பது பெரிய வயிற்றுப் பகுதியைக் குறிக்கும் பேச்சுவழக்கில் உள்ள சொல்லாகத்தான் அறிந்திருக்கிறேன். கொழுப்பிழையத்தை அப்படிக் குறிப்பது தெரியாது. ஏதாவது இணைப்புகள் தந்தீர்கள் என்றால் பார்க்கலாம். நன்றி--கலை (பேச்சு) 18:31, 22 ஏப்ரல் 2021 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொழுப்பிழையம்&oldid=3136167" இலிருந்து மீள்விக்கப்பட்டது