அணுவுலை விபத்துகள்
அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் (Nuclear and radiation accidents) என்பவை மக்கள், சுற்றுச்சூழல் அல்லது அணுவுலை மற்றும் கதிரியக்க மையம் ஆகியவற்றிற்கு குறிப்பிடத்தக்க கதிரியக்க விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்வுகளாக பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தால் வரையறை செய்யப்பட்டுள்ளது. தனி நபர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் விளைவுகள் (கதிரியக்க நச்சேற்றம்), சுற்றுச்சூழலில் பெருமளவு கதிரியக்கத்தை வெளியிடல், அணு உலையின் நடுப்பகுதி எதிர்பாராத விதத்தில் உருகுதல் ஆகியவற்றை இத்தகு விபத்துகளுக்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்[1]. 1986 ஆம் ஆண்டு நிகழ்ந்த செர்னோபில் அணு உலை விபத்தில், அணு உலையின் நடுப்பகுதி (reactor core) பாதிப்படைந்து குறிப்பிடத்தக்க அளவுகளில் கதிர்வீச்சு வெளிப்பட்டதை பாரிய அணு உலை விபத்தாகக் கருதலாம். என்றாலும், அணுவுலை மற்றும் கதிரியக்க விபத்துகள் பரவலாக அனைத்து நாடுகளிலும் நடந்திருக்கின்றன.
அணுவுலை விபத்துகளினால் ஏற்படும் தாக்கங்கள் குறித்த விவாதங்கள் முதல் அணுவுலைகள் 1954 ஆம் ஆண்டு நிறுவப்பட்டபோதே தொடங்கிவிட்டன. இத்தகு விபத்துகள் அணு ஆற்றல் மையங்கள் குறித்த பொதுமக்களின் அச்சத்திற்கு, கவலைகளுக்கு முதன்மைக் காரணியாக விளங்குகிறது[2]. விபத்துகள் நடப்பதற்கான இடர்களைக் குறைக்கும், சுற்றுச்சூழலில் வெளிப்படும் கதிரியக்க அளவுகளைக் குறைக்கும் சில தொழில்நுட்ப நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டாலும், பல்வேறு தாக்கங்களைக் கொண்ட பல அணுவுலை விபத்துகள், தவறுகள், நிகழ்வுகள் நடந்திருக்கின்றன[2][3].
2010 ஆம் ஆண்டு வெளியீட்டின்படி உலகமெங்கும் அணுவுலை மின் உற்பத்தி நிலையங்களில் 99 விபத்துகள் நடந்துள்ளன[4]. செர்னோபில் அணு உலை விபத்திற்குப் பிறகு 57 விபத்துகள் நடந்துள்ளன. அணு ஆற்றல் சம்பந்தப்பட்ட அனைத்து விபத்துகளில் 57 சதவிகிதம் (56/99) அமெரிக்காவில் நடந்துள்ளன[4]. 2011 செப்டம்பெரில் பிரான்சில் நிகழ்ந்த அணு விபத்து; 2011, மார்ச் 11இல் நிகழ்ந்த புகுஷிமா, ஜப்பான் அணு உலை விபத்து; 1986, ஏப்ரல் 26இல் நிகழ்ந்த செர்னொபில் அணு விபத்து;1979 இல் அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரி மைல் தீவு விபத்து, 1961இல் அமெரிக்க இராணுவத்தின் சோதனை அணு ஆற்றல் உலை, தாழ்திறன் அணுவுலை எண் - ஒன்று (Stationary Low-Power Reactor Number One, SL-1) விபத்து ஆகியவைக் குறிப்பிடத்தக்க விபத்துகளாகக் கருதப்படுகின்றன[5].
அணு ஆற்றலால் இயங்கிய முன்னாள் சோவியத் ஒன்றிய நீர்மூழ்கிகளின் அணு உலையின் நடுப்பகுதி பாதிப்படைந்ததால் நிகழ்ந்த விபத்துகளில் சம்பந்தப்பட்ட நீர்மூழ்கிகளின் பட்டியல்: கே-19 (1961), கே-11 (1965), கே-27 (1968), கே-140 (1968), கே-429 (1970), கே-222 (1980), கே-314 (1985), கே-431 (1985)[5],[6],[7]. தீவிர கதிரியக்க விபத்துகளாக சோவியத் ஒன்றிய கிஷ்டிம் [Kyshtym] பேரழிவு (1957), இங்கிலாந்தில் வின்ட்ஸ்கேல் [Windscale] விபத்து, கோசுட்டா ரிக்கா கதிரியக்கச் சிகிச்சை விபத்து[8], எசுப்பானியாவின் சரகோசாவில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சை விபத்து[9], மொராக்கோவில் நிகழ்ந்த கதிரியக்க விபத்து[10], பிரேசில் விபத்து[11], மெக்சிகோ நகரத்தில் நடந்த கதிரியக்க விபத்து, தாய்லாந்தில் நிகழ்ந்த கதிரியக்கச் சிகிச்சைக் கருவி விபத்து[12], இந்தியாவின் மாயாபுரியில் நடந்த கதிரியக்கவியல் சார்ந்த விபத்து[12] ஆகியவற்றைக் கூறலாம்.
அண்மையில் நடைபெற்ற அணுவுலை, கதிரியக்க விபத்துகளைக் குறித்த செய்திகளை பன்னாட்டு அணுசக்தி முகமையகத்தின் இணையதளத்திலிருந்து தெரிந்து கொள்ளலாம்[13].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Staff, IAEA, AEN/NEA. International Nuclear and Radiological Events Scale Users' Manual, 2008 Edition (PDF) (in Technical English). Vienna, Austria: International Atomic Energy Agency. p. 184. Archived from the original (PDF) on 2011-05-15. பார்க்கப்பட்ட நாள் 2010-07-26.
{{cite book}}
: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link) - ↑ 2.0 2.1 M.V. Ramana. Nuclear Power: Economic, Safety, Health, and Environmental Issues of Near-Term Technologies, Annual Review of Environment and Resources, 2009, 34, p. 136.
- ↑ Matthew Wald (February 29, 2012). "The Nuclear Ups and Downs of 2011". New York Times. http://green.blogs.nytimes.com/2012/02/29/the-nuclear-ups-and-downs-of-2011/.
- ↑ 4.0 4.1 Benjamin K. Sovacool. A Critical Evaluation of Nuclear Power and Renewable Electricity in Asia Journal of Contemporary Asia, Vol. 40, No. 3, August 2010, pp. 393–400.
- ↑ Kristin Shrader-Frechette (October 2011). "Fukushima, Flawed Epistemology, and Black-Swan Events" (PDF). Ethics, Policy and Environment, Vol. 14, No. 3.
- ↑ Johnston, Robert (September 23, 2007). "Deadliest radiation accidents and other events causing radiation casualties". Database of Radiological Incidents and Related Events.
- ↑ Medical management of radiation accidents pp. 299 & 303.
- ↑ Strengthening the Safety of Radiation Sources p. 15.
- ↑ Lost Iridium-192 Source
- ↑ The Radiological Accident in Goiania p. 2.
- ↑ 12.0 12.1 Pallava Bagla. "Radiation Accident a 'Wake-Up Call' For India's Scientific Community" Science, Vol. 328, 7 May 2010, p. 679.
- ↑ "IAEA Publications". Archived from the original on 2007-11-23. பார்க்கப்பட்ட நாள் 2007-11-23.
வெளியிணைப்புகள்
[தொகு]- U.S. Nuclear Accidents (lutins.org)
- US Nuclear Regulatory Commission (NRC) website
- International Atomic Energy Agency website
- Plutopia: Nuclear Families, Atomic Cities, and the Great Soviet and American Plutonium Disasters
- Concerned Citizens for Nuclear Safety
- World Nuclear Association: Radiation Doses
- Radiological Incidents Database
- [1]
- Nuclear Files.org
- Annotated bibliography for civilian nuclear accidents from the Alsos Digital Library for Nuclear Issues பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்
- Critical Hour: Three Mile Island, The Nuclear Legacy, And National Security. Updated edition, ஜூன் 2006
- Nuclear Emergency and Radiation Resources