நவலூர் குட்டப்பட்டு
நவலூர் குட்டப்பட்டு | |
— ஊராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மா. பிரதீப் குமார், இ. ஆ. ப [3] |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
‘’’நவலூர் குட்டப்பட்டு‘’’ (N. KUTTAPATTU) தமிழ்நாடு, திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒரு ஊராட்சி. [4][5]
நாற்புறமும் வயல் சூழ்ந்து, பொன்னி நதியின் கிளை நதியாம் மேட்டுக் கட்டளைக் கால்வாயின் நதியோரமும், அரியாற்றின் கரையோரமும், நஞ்சை கொஞ்சும் நவலூர் குட்டப்பட்டு கிராமம் அமைந்துள்ளது.
நவலூர் குட்டப்பட்டு ஊராட்சியில் நவலூர், அருவங்கால்பட்டி, குட்டப்பட்டு, மணமேடு, முத்துகுளம், கீழக்காடு மற்றும் வண்ணாங்கோவில் ஆகிய கிராமங்கள் அடங்கி உள்ளன.
நவலூர் குட்டப்பட்டு கிராமம் சுமார் 3000 குடும்பங்கள் உள்ளன. இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயத்தினர் எவ்வித பேதமின்றி சகோதர நேயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மேலும் இந்த கிராமம் பெரிய குளம், பப்பாங்குளம், முத்துக்குளம் என குளக்கரைகளால் சூழ்ந்த நஞ்சை பரப்புகள் நிறைந்த பகுதி...
வரலாறுகள்
[தொகு]தமிழ் மன்னர்கள் காலத்திலிருந்தே மக்கள் வாழ்ந்தத்திற்கான ஆதாரங்களாக சில பேச்சு வழக்கு கதைகள் உள்ளன. குளங்கள் தூர்வாரும் போது பழங்காலத்து மக்கள் பயன்படுத்திய பொருட்கள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் நவலூர் குட்டப்பட்டும் அதை சுற்றியுள்ள சில பகுதிகள் முஸ்லீம் மன்னர் ஆட்சி காலத்தில் இனமாக முஸ்லிம் மக்களுக்கு அளிக்கப்பட்டது. அவர்களின் பரம்பரையை சேர்ந்த குடும்பங்கள் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இவ்வுரையை சேர்ந்த வரலாறுகள் அனைத்தும் ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு இருந்தது. பிற்கால மக்கள் அவற்றை பராமரிக்காததால் அவைகள் அழிந்து விட்டன.
நவலூர் குட்டப்பட்டு திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் சுமார் 25000 மக்கள் வாழ்கிறார்கள். மேலும் இந்த கிராமம் ஒரு அங்கன் வாடியும், ஒரு அரசு நடுநிலைப் பள்ளியும், ஒரு தனியார் நடுநிலைப் பள்ளியும் (நேரு நினைவு நடுநிலைப் பள்ளி), மேல்நிலைப் பள்ளியும் (அன்னை இந்திரா காந்தி நினைவு மேல் நிலைப்பள்ளி), ஆங்கில தொடக்கப்பள்ளியும் (அன்னை தெரசா தொடக்கப்பள்ளி), மெட்ரிகுலேஷன் பள்ளியும் (புனித வின்சன்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி), புனித டான் போஸ்கோ தொழில் கல்விப் பயிற்சிப் பள்ளியும், சிவானி தொழில் கல்வி கல்லூரியும், கேர் பொறியியல் கல்லூரியும், தமிழ்நாடு வேளாண்மை கல்லூரியும், புனித ப்ரிஸ்ட் பல்கலைக்கழகமும் அமைந்துள்ளது.
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "Manikandam Block - Panchayat Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.
- ↑ "Srirangam Taluk - Revenue Villages". National Informatics Centre-Tamil Nadu. Archived from the original on 2015-02-07. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2015.