நங்லோய் ஜாட்

ஆள்கூறுகள்: 28°41′00″N 77°04′00″E / 28.68333°N 77.06667°E / 28.68333; 77.06667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நங்லோய் ஜாட்
நங்லோய்
நங்லோய் ஜாட் is located in டெல்லி
நங்லோய் ஜாட்
மேற்கு தில்லியில் நங்லோயின் அமைவிடம்
நங்லோய் ஜாட் is located in இந்தியா
நங்லோய் ஜாட்
நங்லோய் ஜாட் (இந்தியா)
ஆள்கூறுகள்: 28°41′00″N 77°04′00″E / 28.68333°N 77.06667°E / 28.68333; 77.06667
நாடு இந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்மேற்கு தில்லி மாவட்டம்
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,50,371
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)

நங்லோய் ஜாட் (Nangloi Jat) அல்லது "நங்லோய் என்று பிரபலமாக அறியப்படும் இது, இந்தியாவின் தில்லியின் மேற்கு மாவட்டத்திலுள்ள ஒரு பகுதியாகும். இது பஸ்சிம் விகார், தில்லியின் புறநகர் சுற்றுப்பாதை சாலை, நஜாப்கர் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது.

நங்லோய் அருகே உள்ள ஆசுத்தல் கிராமத்தின் மூலையில் ஒரு மாளிகை அமைந்துள்ளது, இது லாட் என்று பிரபலமாக அறியப்படுகிறது. 75 அடி உயர மினார் ஒன்று 1650இல் முகலாய பேரரசர் ஷாஜஹானால் கட்டப்பட்டது.[1][2] மேலும், அவரது வேட்டை விடுதியாகவும் செயல்பட்டது.[1] இது குதுப் மினார் போன்ற வடிவமைப்பில் உள்ளது.</ref>[3] மேலும், சிவப்பு மணற்கற்களால் ஆனது.

மக்கள்தொகையியல்[தொகு]

2001 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[4] நங்லோய் ஜாட்டின் மக்கள் தொகை 150,371 ஆகும். இதில் 55% ஆண்களும் , 45% பெண்களும் இருக்கின்றனர். இங்குள்ள மக்களின் சராசரி கல்வியறிவு விகிதம் 63% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 71% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 53%ஆக்வும் உள்ளது. இதன் மக்கள் தொகையில் 17% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "Hastsal Minar: Capital's 'mini Qutub Minar' may soon get a much-needed facelift". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 21 September 2018.
  2. "Qutub Minar clone still awaits saviour". பார்க்கப்பட்ட நாள் 14 August 2009.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Hastsal Minar, Palam[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நங்லோய்_ஜாட்&oldid=3777303" இலிருந்து மீள்விக்கப்பட்டது