சங்கொல்லி இராயண்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சங்கொல்லி இராயண்ணா
சங்கொல்லி இராயண்ணாவின் ஓவியம்
பிறப்புஇராயண்ணா
15 ஆகஸ்ட் 1796
சங்கொல்லி, பெல்காம் மாவட்டம்
இறப்பு26 ஜனவரி 1831
நந்தகாடு, பெல்காம்
தேசியம் இந்தியா
மற்ற பெயர்கள்இராயண்ணா பாரமப்ப ரோகண்ணவர்
பணிகிட்டூர் இராணுவ சைனிகர்
பட்டம்கிரந்திவீரன்

சங்கொல்லி இராயண்ணா (Sangolli Rayanna) (15 ஆகஸ்ட் 1796 - 26 ஜனவரி 1831) கர்நாடகாவின் கிட்டூர் சுதேச மாநிலத்தில் ஒரு இந்திய இராணுவத்தைச் சேர்ந்த போர்வீரர். அந்த காலத்தில் ராணி சென்னம்மா ஆட்சி செய்த கிட்டூர் இராச்சியத்தின் படை வீரராக இருந்த இவர் இறக்கும் வரை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துடன் போராடினார். இவரது வாழ்க்கை 2012இல் சங்கொல்லி இராயண்ணா என்ற பெயரில் கன்னடத்தில் திரைப்படமாக வெளியானது.

செயல்பாடுகள்[தொகு]

இராயண்ணா 1824 ஆம் ஆண்டு கிளர்ச்சியில் பங்கேற்றதற்காக ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். [1] இவர் தொடர்ந்து ஆங்கிலேயர்களுடன் போராடினார். மன்னர் மல்லசர்ஜா மற்றும் இராணி சென்னம்மா ஆகியோரின் வளர்ப்பு மகனான சிவலிங்கப்பாவை கிட்டூரின் ஆட்சியாளராக நிறுவ விரும்பினார் . [2] இவர் உள்ளூர் மக்களை அணிதிரட்டி, ஆங்கிலேயர்களுக்கு எதிராக கரந்தடிப் போரைத் தொடங்கினார். இவரும் இவரது இராணுவமும் பல இடங்களில் அரசாங்க அலுவலகங்களை எரித்தனர். பிரித்தானிய துருப்புக்களை அழித்தனர். மேலும், கருவூலங்களை சூறையாடினர். இவர் நில உரிமையாளர்களுக்கு வரி விதித்து மக்களிடமிருந்து ஒரு இராணுவத்தை கட்டியெழுப்பினார். ஆங்கிலேயர்களால் இவரை வெளிப்படையான போரில் தோற்கடிக்க முடியவில்லை. எனவே, துரோகத்தால், இவர் ஏப்ரல் 1830 இல் பிடிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். புதிய ஆட்சியாளராக வேண்டிய சிறுவன் சிவலிங்கப்பாவும் ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டான். 1829–30ல் ஆங்கிலேயருக்கு எதிரான கிளர்ச்சியில், சித்தி வீரரான கஜவீரன் இவருக்கு உதவினான். [3]

26 ஜனவரி 1831 அன்று பெல்காம் மாவட்டத்தில் நந்தகாட்டிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆலமரத்தில் தூக்கிலிடப்பட்டார். [4]

இராயண்ணாவை தூக்கிலிட்ட மரம்

மரியாதை[தொகு]

கர்நாடகாவின் பெங்களூருவில் சங்கொல்லி இராயண்ணா சிலை

வடக்கு கர்நாடகாவில் இயற்றப்பட்ட வீர நாட்டுப்புற பாடல்களான கீ கீ பாடல்கள் [5] கிட்டூர் சென்னம்மா, இராயண்ணா மற்றும் சுதந்திரத்திற்கு முந்தைய கர்நாடகாவின் பிற நபர்களைப் பற்றி பாடுகின்றன. [6] பெங்களூருவின் தொடர் வண்டி நிலையம் அருகே வலது கையில் உருவிய வாளுடன் குதிரையில் அமர்ந்திருக்கும் இராயண்ணாவின் முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது. [7] பெங்களூரு நகரத்தின் முக்கிய தொடர் வண்டி நிலையம் 2015இல் "கிரந்திவீரா சங்கொல்லி இராயண்ணா தொடர் வண்டி நிலையம்" என்று மறுபெயரிடப்பட்டது. [8] இருப்பினும் அதிகாரப்பூர்வமாக 03-02-2016 அன்று அறிவிக்கப்பட்டது [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sangolli Rayanna and the rise of caste heroes". The New Indian Express. https://www.newindianexpress.com/states/karnataka/2016/dec/06/sangolli-rayanna-and-the-rise-of-caste-heroes-1546119.html. 
  2. Gopalakrishnan(Editor), Subramanian; Gopalakrishnan, edited by S. (2007). The South Indian rebellions: before and after 1800 (1st ). Chennai: Palaniappa Brothers. பக். 103. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183795005. https://books.google.com/books?id=i81mLhBEBgQC&pg=PA103. 
  3. Ali, Shanti Sadiq (1996). The African dispersal in the Deccan : from medieval to modern times. New Delhi: Orient Blackswan. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788125004851. https://books.google.com/books?id=-3CPc22nMqIC&pg=PA232. 
  4. R P, Sambasadashiva Reddy. "Miscellany". Deccan Herald, Bangalore. http://www.deccanherald.com/content/100063/ipl-2012.html. 
  5. Khajane, Muralidhara. "We've come for your vote…". தி இந்து. Archived from the original on 12 ஏப்ரல் 2009. https://web.archive.org/web/20090412044913/http://www.hindu.com/2009/04/08/stories/2009040860390300.htm. 
  6. Datta, Amaresh (Ed.). Encyclopaedia of Indian Literature: devraj to jyoti, Volume 2. https://books.google.com/books?id=zB4n3MVozbUC&pg=PA1293. 
  7. "Sangolli Rayanna statue unveiled in City, at last". http://www.deccanherald.com/content/100505/sangolli-rayanna-statue-unveiled-city.html. 
  8. "Bengaluru railway station to be named after Sangolli Rayanna". http://www.deccanherald.com/content/474962/bengaluru-railway-station-named-sangolli.html. 
  9. http://www.scr.indianrailways.gov.in/view_detail.jsp?lang=0&id=0,5,268&dcd=7096&did=145449704189594354ECD102CEC97451280C24522002C.web91

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சங்கொல்லி_இராயண்ணா&oldid=3265880" இருந்து மீள்விக்கப்பட்டது