கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோவை பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் ஓர் தன்னாட்சி நிறுவனம், அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 2001 ஆம் ஆண்டு கோவை கலைமகள் கல்வி அரகட்டளையினால் தொடங்கப்பட்டது. இந்நிறுவனம் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்திலுள்ள வெள்ளிமலைப்பட்டினத்தில் செயல்பட்டு வருகிறது.

அறிமுகம்[தொகு]

இந்நிறுவனம் மாணாக்கர்களின் தொழில்நுட்ப புத்திக் கூர்மையை மேம்படுத்தவும், அவர்களின் திறன் பயிற்சி பெறவும் உதவுகிறது[1].

படிப்புகள்[தொகு]

இந்நிறுவனத்தில் பின்வரும் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன[2]:

இளங்கலை பட்டப்படிப்புகள்:

  1. கட்டுமானப் பொறியியல்
  2. இயந்திரப் பொறியியல்
  3. கணினி அறிவியல், பொறியியல்
  4. மின், மின்னணு பொறியியல்
  5. மின்னணு, தகவல் தொடர்பு பொறியியல்
  6. இயந்திர மின்னணுவியல்
  7. தகவல் தொழில்நுட்பவியல்
  8. அறிவியல் மற்றும் மனிதநேயம்

முதுகலை பட்டப்படிப்புகள்:

  1. கணினி அறிவியல், பொறியியல்
  2. வடிவமைப்பு பொறியியல்
  3. தகவல் தொடர்பு அமைப்பியல்

நிர்வாக படிப்புகள்:

  1. முதுநிலை வியாபார நிர்வாகம்

சான்றுகள்[தொகு]