கொடைக்கானல் சாலை தொடருந்து நிலையம்
கொடைக்கானல் ரோடு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல் மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 10°10′45″N 77°54′34″E / 10.17917°N 77.90944°E | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயக்கத்தில் | ||||
நிலையக் குறியீடு | KQN | ||||
மண்டலம்(கள்) | தென்னக இரயில்வே | ||||
கோட்டம்(கள்) | மதுரை | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
|
கொடைக்கானல் ரோடு தொடருந்து நிலையம் (Kodaikanal Road railway station, நிலையக் குறியீடு:KQN) அல்லது கொடைரோடு தொடருந்து நிலையம் ஆனது, தமிழ்நாட்டின், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்மைநாயக்கனூர் அருகே, மதுரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த கொடை ரோட்டில் உள்ள தொடருந்து நிலையமாகும்.[1] இத்தொடருந்து நிலையம் பாகையில் அமைந்துள்ளது.
கன்னியாகுமரியிலிருந்து, மதுரை வழியாக, சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா புதுதில்லி செல்லும் அனைத்து விரைவு மற்றும் பயணியர் தொடருந்துகளும் கொடைரோடு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.
அமைவிடம்
[தொகு]மதுரைக்கு வடக்கே 42 கிமீ தொலைவிலும்; திண்டுக்கல்லுக்கு தெற்கே 28 கிமீ தொலைவிலும், கொடைக்கானலுக்கு கிழக்கே 80 கிமீ தொலைவிலும் கொடை ரோடு தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி போன்ற பிற நகரங்களிலிருந்து மலைவாழிடமான, கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுக்க, தொடருந்துகளில் குடும்பத்துடன் வரும் ஆங்கிலேயர்களின் வசதிக்காக, 1875-இல் அம்மைநாயக்கனூர் அருகே 1.5 கிமீ தொலைவில் தொடருந்து நிலையம் நிறுவப்பட்டது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kodai road train schedule
- ↑ Kodaikanal Department Of Municipal Administration And Water Supply, Historical Moments பரணிடப்பட்டது 24 மார்ச்சு 2009 at the வந்தவழி இயந்திரம், 2005