கைப்பூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


கைப்பூர் மாவட்டம்
خیرپور ڈسٹرکٹ
خیرپور ڈسٹرکٹ
மாவட்டம்
Pakistan - Sindh - Khairpur.svg
கைப்பூர் மாவட்டம் خیرپور ڈسٹرکٹ خیرپور ڈسٹرکٹ is located in Sindh
கைப்பூர் மாவட்டம் خیرپور ڈسٹرکٹ خیرپور ڈسٹرکٹ
கைப்பூர் மாவட்டம்
خیرپور ڈسٹرکٹ
خیرپور ڈسٹرکٹ
ஆள்கூறுகள்: 27°32′N 68°46′E / 27.533°N 68.767°E / 27.533; 68.767ஆள்கூறுகள்: 27°32′N 68°46′E / 27.533°N 68.767°E / 27.533; 68.767
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து
மாவட்டம்கைப்பூர் மாவட்டம்
நிறுவப்பட்டது1546
மக்கள்தொகை (2017)[1]
 • மொத்தம்24,04,334
 • தரவரிசை5th:Sindh
இனங்கள்Khairpuri
நேர வலயம்பாகிஸ்தான் சீர் நேரம் (ஒசநே+5)
தொலைபேசி குறியீடு0243
வருவாய் வட்டங்கள்8
கிராம ஊராட்சிகள்89

கைப்பூர் மாவட்டம் (Khairpur District) பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தில் சுக்கூர் கோட்டத்தில் உள்ளது.[2] இம்மாவட்டத்தின் தலைமையிட நகரம் கைப்பூர் ஆகும். சிந்து மாகாணத்தில் வடக்கிற்கும், மத்தியப் பகுதிக்கும் நடுவில் கைப்பூர் மாவட்டம் அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்[தொகு]

15,910 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கைப்பூர் மாவட்டம் கைப்பூர், தாரி மீர்வா, கோட் திஜி, கிங்கிரி, சோபா தேரா, காம்பத், பைஸ் கஞ்ச், நரா என 7 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[3]

எல்லைகள்[தொகு]

கைப்பூர் மாவட்டத்தின் வடக்கில் சிகார்பூர் மாவட்டம் மற்றும் சுக்கூர் மாவட்டங்களும், மேற்கில் லர்கானா மாவட்டம், நௌசரோ பெரோஸ் மாவட்டம் மற்றும் சிந்து ஆறும், தெற்கில் சங்கார் மாவட்டம் மற்றும் நவாப்ஷா மாவட்டங்களும் கிழக்கில் இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலமும் அமைந்துள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்புபடி, கைப்பூர் மாவட்ட மக்கள்தொகை 2.4 மில்லியன் ஆகும்.[4] இம்மாவட்ட மக்களில் 32.27% நகர்புறங்களில் வாழ்கின்றனர்.

  • மொழிகள்:

இம்மாவட்ட மக்களில் சிந்தி மொழியை 93.85%, பஞ்சாபி மொழியை 3.16%, உருது மொழியை 1.37%, பலூச்சி மொழியை 0.92% பேசுகின்றனர்.

  • சமயம்:
    • இசுலாம் : 96.86%
    • இந்து சமயம்: 2.93%
    • கிறித்தவம்: 0.09%
    • அகமதியா: 0.07%
    • பிறர்: 0.04%
    • எழுத்தறிவு:
    • எழுத்தறிவு: 90%

மாவட்ட நிர்வாகம்[தொகு]

கைப்பூர் மாவட்டம் 8 வருவாய் வட்டங்களையும், 76 ஒன்றியக் குழுக்களையும், 11 நகராட்சிகளையும், 6800 கிராமங்களையும் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "DISTRICT WISE CENSUS RESULTS CENSUS 2017" (PDF). www.pbscensus.gov.pk. 29 ஆகத்து 2017 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 6 நவம்பர் 2017 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Khairpur: then and now - Daily Times" (in en-US). Daily Times. 2018-02-06. https://dailytimes.com.pk/195940/khairpur-then-and-now/. 
  3. "Khairpur History". Khairpur.gos.pk.
  4. Population Distribution in Sindh According to Census 2017

உசாத்துணை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கைப்பூர்_மாவட்டம்&oldid=2976163" இருந்து மீள்விக்கப்பட்டது