கூகுள் டிரெண்ட்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கூகுள் டிரெண்ட்சு (Google Trends) கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் ஓர் வசதியாகும். இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் தேடப்பட்ட முதன்மையான சொற்களைக் காட்டும். பயனர் ஒருவர் தான் தரும் சொல் அல்லது சொற்கள் உலகின் எந்தப் பகுதிகளில் தேடப்பட்டன என்றும் எந்த காலகட்டத்தில் அதிகம் தேடப்பட்டன என்றும் அறிந்துகொள்ள முடியும். இவ்வசதியின் மூலம் லத்தீன் எழுத்துக்கள் சாராத மொழிகளிலும் தேடிப் பெறலாம்.[1] தரப்பட்ட சொல்லின் தேடல் வரம்பு பட வடிவில் காட்டப்படும். அதிகம் தேடப்பட்ட சொற்கள் கூகுள் ஹாட் டிரென்ட்சு என்ற தலைப்பில் காட்டப்படுகிறது. சொற்கள் மட்டுமின்றி வலைத்தளங்களையும் உள்ளிட்டு தேடும் வசதியைக் கொண்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கூகுள்_டிரெண்ட்சு&oldid=3271817" இருந்து மீள்விக்கப்பட்டது