கிராரி சுலைமான் நகர்

ஆள்கூறுகள்: 28°41′48″N 77°03′52″E / 28.6968°N 77.0644°E / 28.6968; 77.0644
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிராரி நகர்
கிராரி கிராமம்
தில்லியின் புறநகர் பகுதி
கிராரி நகர் is located in டெல்லி
கிராரி நகர்
கிராரி நகர்
தில்லியில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 28°41′48″N 77°03′52″E / 28.6968°N 77.0644°E / 28.6968; 77.0644
நாடுஇந்தியா
மாநிலம்தில்லி
மாவட்டம்வடமேற்கு தில்லி மாவட்டம்
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம்
 • Mother Tongueஅரியான்வி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்110086
நிர்வாக அமைப்புவடக்கு தில்லி மாநகராட்சி

'கிராரி சுலைமான் நகர் (Kirari Suleman Nagar) கிராரி கிராமம் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் தில்லி மாநிலத்தின் வடமேற்கு மாவட்டத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். பரத்பூர் மாநிலத்தின் ஜாட் மன்னன் சூரஜ் மல் முதலில் குடியேறிய ஒரு நகர்ப்புற கிராமமாகும். கிராமத்தின் சில பகுதிகள் இப்போது பெரிதும் நகரமயமாக்கப்பட்டு தொழில்மயமாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் நகரம் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் வளர்ந்துள்ளது. ஆனால் அது நிறுவப்பட்ட கிராமத்தின் கலாச்சாரம் மட்டும் இன்றும் உள்ளது.

1990 முதல் 2020 வரை பீகாரிலிருந்தும், உத்தரப் பிரதேசத்திலிருந்தும் இங்கு வந்து குடியேறினார்கள்.[1] புலம்பெயர்ந்தோர் நிறைய பேர் இப்போது கிராமத்தின் சில பகுதிகளில் குடியேறியுள்ளனர். அவர்கள் கடினமாக உழைத்து, அரசியல் உட்பட எல்லாத் துறைகளிலும் செழித்து வருகிறார்கள். இரித்துராஜ் கோவிந்த் என்பவர் கிராரியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினாராக உள்ளார்.[2]

வரலாறு[தொகு]

1803இல் பிரித்தானியர்களின் வருகைக்குப் பிறகு, 1807ஆம் ஆண்டில் தில்லியைக் காட்டும் இந்தியாவின் தேசிய ஆவணக் காப்பகத்தின் சேதமடைந்த ஒரு அறையில் காணப்பட்ட வரைபடத்தில் இக்கிராமம் முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக (கிராரி) தோன்றியுள்ளது. சிறிய கிராமங்கள் முதல் பெரிய கிராமங்கள் வரையிலான குடியிருப்புகளின் படிநிலையை இது எடுத்துக்காட்டுகிறது.[3]

1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி, இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எஞ்சியிருந்த சமஸ்தானங்களை ஒன்றிணைத்து இராஜபுதனத்தையும், 'ராஜஸ்தான்' சமஸ்தானங்களிலிருந்து அல்வார், பரத்பூர், தோல்பூர் , கரௌலி ஆகியவற்றை இணைத்து 'மத்திய மாகாணம்' என்ற அமைப்பை இந்திய அரசு உருவாக்கியது. சூன் 1949இல், மத்திய மாகாணத்தின் நான்கு சமஸ்தானங்களும் ராஜஸ்தானில் இணைக்கப்பட்டன. பரத்பூர் மாநிலத்தின் சார்பில், மத்சயவச ஜாட் தீரஜ் மாத்தூர் , நாத மாத்தூர் ஆகியோர் தில்லிக்கு அருகில் உள்ள கராலா, பன்சாலி, பன்த் குர்த், கிராடி, அச்தாசர் ஆகிய ஐந்து கிராமங்களை நிறுவி அதன் ஆட்சியாளராக நியமிக்கப்பட்டனர். இந்த அலுவலகத்தின் இடிபாடுகள் இன்னும் கராலாவில் கிடக்கின்றன. இந்த கிராமத்தில் இருந்தே ககானா கிராமம் உருவானது.

கிராரியில் இருந்து நிதாரி கிராமம் உருவாக்கப்பட்டது.

மக்கள்தொகை[தொகு]

இந்தியாவின் 2012 census,[4] கிராரி சுலைமான் நகரின் மக்கள்தொகை 154633 (2001). இதில் 55% ஆண்களும் 45% பெண்களும் உள்ளனர். நகரின் சராசரி கல்வியறிவு விகிதம் 49% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட குறைவாக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 51% ஆகவும் பெண்களின் கல்வியறிவு 38% ஆகவும் இருக்கிறது. நகரில், 20% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள். 2017 ஆம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியால் கிராரி சுலைமான் நகர் அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்பானது.

புகைப்படம்[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Most migrants in Delhi still from UP, but Bihar's share rising fast" (in en). The Times of India. September 1, 2013. https://timesofindia.indiatimes.com/city/delhi/Most-migrants-in-Delhi-still-from-UP-but-Bihars-share-rising-fast/articleshow/22198225.cms. 
  2. "Kirari Election Results 2020: AAP's Rituraj Govind wins by over 5,000 votes" (in en). India Today. February 11, 2020. https://www.indiatoday.in/elections/delhi-assembly-polls-2020/story/kirari-assembly-seat-election-results-vote-counting-2020-1645246-2020-02-11. 
  3. Chaudhuri, Zinnia Ray. "Six Delhi maps chart the city's evolution from 1807 to 2021". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-16.
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராரி_சுலைமான்_நகர்&oldid=3777008" இலிருந்து மீள்விக்கப்பட்டது