ஐதராபாத்து ஊறுகாய்
ஐதராபாத்து ஊறுகாய் (ஆங்கிலம்: Hyderabadi pickle; உருது:حیدرآبادی اچار) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலம் ஐதராபாத்தில் தயாரிக்கப்படும் ஒரு வகை இந்திய ஊறுகாய் ஆகும்.[1] இந்த ஊறுகாய் பல்வேறு சுவைகளில் தயாரிக்கப்படலாம் (குறிப்பாக மாங்காய்) இயற்கையான செயல்முறைகள் மூலம் முதிர்ச்சியடைந்த காய்கறிகள் மற்றும் பாரம்பரிய முறையில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மசாலாப் பொருட்களைக்கொண்டு இந்த ஊறுகாய் தயாரிக்கப்படுகிறது.[2]
இவை இவற்றின் கலவையான சுவைகளுக்காக அறியப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மசலாசுவையுடன் சில காரமாகவும் இருக்கும். இந்தத் தயாரிப்பு வணிகப் பெயருடன் சந்தைப்படுத்தப்படுகிறது.
ஐதராபாத் கலப்பு ஊறுகாய்
[தொகு]இதன் முக்கிய பொருட்கள் மாங்காய், கேரட், தேசிப்பழம், பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பிற மசாலாப் பொருட்கள்.
ஐதராபாத் மாங்காய் ஊறுகாய்
[தொகு]மசாலா கலந்த புளிப்புச் சுவைகொண்ட இந்த ஊறுகாயின் முக்கிய மூலப்பொருளாக மாம்பழம் உள்ளது.
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tickle your senses with a vast variety of Hyderabadi pickle" (in ஆங்கிலம்). இந்தியன் எக்சுபிரசு. February 13, 2015. Archived from the original on November 3, 2016. Retrieved October 21, 2022.
- ↑ "Hyderabadi Pickle: New Products (Mitchell's)". Archived from the original on 2010-04-20. Retrieved 2010-08-30.