உள்ளடக்கத்துக்குச் செல்

உமா துலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உமா துலி
பிறப்பு1943 மார்ச் 3
புது தில்லி, இந்தியா
பணிசமூகப் பணியாளர்
செயற்பாட்டுக்
காலம்
1981லிருந்து
விருதுகள்பத்மசிறீ
நேரு சுமிருதி விருதும் குடியரசுத்தலவரின் தங்கப் பதக்கமும்
ஆங்காங் அறக்கட்டளை விருது
ஆசிய- பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைய விருது
ஜூகிஞ்வாலா விருது
மானவ் சேவை விருது
கெலன் கெல்லர் விருது
பெண் சாதனையாளர் விருது
இலட்சுமிபதி சிங்கானியா – லக்னோ, இந்தியா மேலாண்மைக் கழகம் வழங்கிய தேசிய தலைமைத்துவ விருது
வலைத்தளம்
Official web site of Amar Jyoti Charitable Trust

உமா துலி (Uma Tuli) இந்தியாவைச் சேர்ந்த இவர் ஓர் சமூக சேவகரும், கல்வியாளரும், மேலும் அமர் ஜோதி நற்பணி மன்றத்தின் நிறுவனருமாவார்.[1] புது தில்லியைத் தளமாகக் கொண்ட அரசு சாரா அமைப்பான, இதில் மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வுக்காக பணியாற்றி வருகிறார்.[2][3][4][5] இவர் 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசின் நான்காவது மிக உயர்ந்த குடிமை விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[6]

சுயசரிதை

[தொகு]

இவர் 1943 மார்ச் அன்று புதுதில்லியில் பிறந்தார்.[2][3][4] குவாலியரின் ஜிவாஜி பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் , மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் சிறப்பு கல்வியில் மற்றொரு முதுகலைப் பட்டமும் பெற்றார்.[7] பின்னர், தில்லி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். தில்லியிலும், குவாலியரிலும் உள்ள பல்வேறு கல்லூரிகளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கற்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

இவர், அமர் ஜோதி நற்பணி மன்றத்தை நிறுவினார்.[2][5][7][8] ஆசிரியராக தனது சம்பளத்திலிருந்து திரட்டிய சேமிப்புடன், 1981 இல்.[9] இந்த நிறுவனம், பல ஆண்டுகளாக, உடல் ரீதியான ஊனமுற்றோருக்கான உள்ளடக்கிய கல்வி, சுகாதாரம், தொழிற்பயிற்சி, வேலைவாய்ப்பு, விளையாட்டு, கலாச்சார வசதிகள் ஆகியவற்றின் ஒற்றை சாளர வழங்குநராக வளர்ந்துள்ளது.[3][4] உடலியக்க மருத்துவப் படிப்புகளுக்காக தில்லி பல்கலைக்கழகம், சிறப்பு கல்வியில் ஆசிரியர்களின் பயிற்சிக்காக ரோகாம்ப்டன் பல்கலைக்கழகம், மணிப்பால் பல்கலைக்கழகம், மத்தியப் பிரதேச போஜ் திறந்தநிலை பல்கலைக்கழகம் ,இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இந்த நிறுவனம் வலைப்பின்னலைக் செய்துள்ளது. இது குவாலியரில் ஒரு கிளையையும் கொண்டுள்ளது.

இவர், மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட முதல் அதிகாரத்துவமற்றவராக அறியப்படுகிறார் [10] இது, 2001 முதல் 2005 வரை இவர் வகித்த பதவியாகும்.[2][7] இவர் தனது பதவிக் காலத்தில், நடமாடும் நீதிமன்றங்களை அமைப்பதற்கான முயற்சிகளைத் தொடங்கினார். பேருந்திலும், தொடர்வண்டியிலும் சலுகை பயணத்திற்கான ஊனமுற்றோர் சான்றிதழ்களை இலவசமாக விநியோகித்தலையும், ஊனமுற்ற நபர்களுக்கு எளிதில் அணுகுவதற்கான பொது இடங்களை ஏற்படுத்துவது போன்றவற்றைத் தொடங்கினார்.[3][4] 1978 குடியரசு தின அணிவகுப்பில் ஊர்க்காவல் படைக் குழுவிற்கு தலைமை தாங்கிய முதல் பெண் தளபதியாக இருந்தார். 1995 குடியரசு தின அணிவகுப்பில் அமர் ஜோதி அறக்கட்டளையின் மாணவர்கள் பங்கேற்றதன் பின்னணியில் இவரது முயற்சிகள் பதிவாகியுள்ளன. இது உடல் ரீதியான சவாலான குழந்தைகளுக்கு முதன்மையானது என்று கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிக் குழந்தைகள் சாதாரண குழந்தைகளுடன் போட்டியிடும் ஐந்து தேசிய ஒருங்கிணைந்த விளையாட்டு கூட்டங்களை நடத்துவதற்கும் இவர் பங்களித்ததாக கூறப்படுகிறது.[8] 2000 ஆம் ஆண்டில் செக் குடியரசின் பிராகா நகரில் நடைபெற்ற 5 வது அபிலிம்பிக்சிற்கான இந்தியக் குழுவின் தலைவராக இருந்தார். 2003 இல் புதுதில்லியில் நடைபெற்ற 6 வது அபிலிம்பிக்சை ஏற்பாடு செய்த குழுவுக்கும் தலைமை தாங்கினார். அமர் ஜோதி அறக்கட்டளையின் துணையுடன் [9] இவர் பல கட்டுரைகளையும் ஸ்பிரிட் ட்ரையம்ப்ஸ் அன்ட் பெட்டர்கேர் பார் லோகோமோட்டர் டிஸெபிலிடி என்ற புத்தகம் உட்பட பல புத்தகங்களையும் வெளியிட்டுள்ளார்.[11] மேலும், பல தேசிய, சர்வதேச கருத்தரங்குகளில், மாநாடுகளில் கட்டுரைகளையும் வழங்கியுள்ளார்.[5]

பதவிகள்

[தொகு]

இவர் 1981 ஆம் ஆண்டு துவங்கியதிலிருந்து அமர் ஜோதி அறக்கட்டளையின் நிர்வாக செயலாளராக உள்ளார்.[3][4][12] இவர் 2001 முதல் ஐந்து ஆண்டுகள் இந்திய அரசாங்கத்திற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான தலைமை ஆணையராக பணியாற்றினார்.[9] அமெரிக்காவின் சர்வதேச புனர்வாழ்வு மைய கல்வி ஆணையத்தின் தலைவராகவும், அதன் தேசியச் செயலாளராகவும் இருந்தார்.[7] இவர் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் உறுப்பினராக இருந்து வருகிறார். மேலும் பல குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான மும்பையைச் சேர்ந்த வள மற்றும் பயிற்சி மையமான குரலும் பார்வையும் என்ற ஆலோசனைக் குழுவில் பணியாற்றியுள்ளார். இவர் இந்திய தேசிய அபிலிம்பிக் சங்கத்தின் பொதுச் செயலாளராக உள்ளார். மேலும், சர்வதேச அபிலிம்பிக்ஸ் கூட்டமைப்பின் நிர்வாக உறுப்பினராகவும் உள்ளார். சமூகத்தின் பலவீனமான பிரிவுகளின் வளர்ச்சிக்காக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான சொசைட்டி ஃபார் எம்பவர்மென்ட் அண்ட் டிரேட் அப்லிஃப்ட்மென்ட் ஆஃப் ஆர்டிசன்ஸ் என்ற அமைப்பின் புரவலராகவும் உள்ளார்.[11]

விருதுகளும் அங்கீகாரங்களும்

[தொகு]

இவரது உள்ளடக்கிய கல்விக்கான சேவைகளுக்காக இலண்டனின் ரோகாம்ப்டன் பல்கலைக்கழகம், இவருக்கு கௌரவ பட்டத்தை வழங்கியுள்ளது.[3][4] இவரது தலைமையில் அமர் ஜோதி அறக்கடளை 1991 இல் சிறந்த நிறுவனமாகவும், தடையில்லா வளாகங்களை உருவாக்கியதற்காகவும் இரண்டு தேசிய விருதுகளைப் பெற்றுள்ளது.[2][7] இவர் நேரு சுமிருதி விருது, குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கம் (1981), ஆங்காங் அறக்கட்டளை விருது (1987), ஆசிய- பசிபிக் நாடுகளுக்கான ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக ஆணைய விருது, மானவ் சேவை விருது, கெலன் கெல்லர் விருது போன்ற விருதுகளை பெற்றுள்ளார்.[11]

மகளிர் சாதனையாளர்களின் கூட்டமைப்பிலிருந்து மகளிர் சாதனையாளர் விருதைப் பெற்ற இவருக்கு அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள பெர்க்லி நகரமும் சிறப்பு அங்கீகார மேற்கோளுடன் கௌரவித்தது.[7][11] இவர் 2010 இல் இலட்சுமிபதி சிங்கானியா - லக்னோ, இந்தியா மேலாண்மைக் கழகம் வழங்கிய தேசிய தலைமைத்துவ விருதைப் பெற்றார் [3][4] . இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அரசால் பத்மசிறீவிருதுக்கான குடியரசு தின கௌரவப் பட்டியலில் சேர்க்கப்பட்டார்.

மேலும் படிக்க

[தொகு]
  • "Interview Part 1". Gyan Yathra. 8 May 2012. Archived from the original on 15 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  • "Interview Part 2". Gyan Yatra. 21 May 2012. Archived from the original on 15 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

குறிப்புகள்

[தொகு]
  1. "Amar Jyoti". Amar Jyoti Charitable Trust. 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 "Elets". Elets. 2014. Archived from the original on 9 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 "AJCT Bio". AJCT. 2014. Archived from the original on 19 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "Atul Vidyalaya Documentary of Dr Uma Tuli". Video. 25 September 2013. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014 – via YouTube.
  5. 5.0 5.1 5.2 "UNESCO". UNESCO. 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Padma Shri" (PDF). Padma Shri. 2014. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014. {{cite web}}: Unknown parameter |https://www.webcitation.org/6U68ulwpb?url= ignored (help)
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 7.5 "Global Skill Summit" (PDF). Global Skill Summit. 2014. Archived from the original (PDF) on 14 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  8. 8.0 8.1 "UN Special". UN Special. 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.
  9. 9.0 9.1 9.2 "Interview 1". Gyan Yathra. 8 May 2012. Archived from the original on 15 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Interview 2". Gyan Yatra. 21 May 2012. Archived from the original on 15 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. 11.0 11.1 11.2 11.3 "SETU". SETU. 2014. பார்க்கப்பட்ட நாள் 9 December 2014.
  12. "AJCT Secretary". AJCT. 2014. Archived from the original on 19 அக்டோபர் 2014. பார்க்கப்பட்ட நாள் 8 December 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உமா_துலி&oldid=3928027" இலிருந்து மீள்விக்கப்பட்டது