உள்ளடக்கத்துக்குச் செல்

1969 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1969

← 1967 30 ஆகத்து 1969 1974 →
 
வேட்பாளர் கோபால் சுவரூப் பதக்
கட்சி சுயேச்சை
சொந்த மாநிலம் உத்தர பிரதேசம்

தேர்வு வாக்குகள்
400

முந்தைய குடியரசுத் துணைத் தலைவர்

காலியிடம், கடைசியாக பதவியில்
வி. வி. கிரி
சுயேச்சை

குடியரசுத் துணைத் தலைவர் -தெரிவு

கோபால் சுவரூப் பதக்
சுயேச்சை


இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1969 என்பது 30 ஆகத்து 1969 அன்று நடைபெற்றது. இந்தியாவின் நான்காவது துணைக் குடியரசுத் தலைவராக கோபால் சுவரூப் பதக் வெற்றி பெற்றார்.[1] தற்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் மறைவுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தற்போதைய துணைத் தலைவர் வி. வி. கிரி பதவி விலகியதால் இத்தேர்தல் நடந்தது.

அட்டவணை[தொகு]

தேர்தல் அட்டவணை 31 சூலை 1969 இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]

எஸ்.எண். வாக்கெடுப்பு நிகழ்வு தேதி
1. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி 9 ஆகஸ்ட் 1969
2. வேட்புமனு பரிசீலனைக்கான தேதி 11 ஆகஸ்ட் 1969
3. வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி 14 ஆகஸ்ட் 1969
4. வாக்கெடுப்பு தேதி 30 ஆகஸ்ட் 1969
5. வாக்கு எண்ணும் தேதி 30 ஆகத்து 1969

முடிவுகள்[தொகு]

இந்திய நாடாளுமன்றத்தின் 759 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார். இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 400 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பதக் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Background material regarding fourteenth election to the office of the Vice-President, 2012, Election Commission of India
  2. 2.0 2.1 "Background material related to Election to the office of Vice-President of India, 2017". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 26 January 2022.