உள்ளடக்கத்துக்குச் செல்

அரசு பொறியியல் கல்லூரி, திருவரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசு பொறியியல் கல்லூரி, திருவரங்கம்
வகைபொது
உருவாக்கம்2013
அமைவிடம்
சேதுராப்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம்
, ,
10°40′40″N 78°35′58″E / 10.677830°N 78.599487°E / 10.677830; 78.599487
வளாகம்நகரம்
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்http://www.gces.edu.in

அரசு பொறியியல் கல்லூரி, திருவரங்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் கோட்டம், சேதுரப்பட்டியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஆகும். இது 2013-ல் நிறுவப்பட்டது. இங்கு பொறியியல் துறையில் பல்வேறு படிப்புகள் வழங்கப்படுகிறது.

வரலாறு

[தொகு]

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கான முன்மொழிவைத் தமிழக அரசு 2013ஆம் ஆண்டு அறிவித்தது. இந்நிறுவனம் முழுமையாக ரூபாய் 60.01 கோடியில் 30.2 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது.

கல்வி

[தொகு]

இந்த நிறுவனம் இளநிலை பொறியியல் பட்டப்படிப்புக்கு வழிவகுக்கும் இளநிலை படிப்புகளை வழங்குகிறது. மேல்நிலைப் பள்ளித் தேர்வில் மாணவர்கள் பெறும் மதிப்பெண் தரவரிசையின் அடிப்படையில் இளநிலையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

துறைகள்

[தொகு]

நிறுவனம் பின்வரும் துறைகள் இக்கல்லூரியில் உள்ளன:[1]

  • கணினி அறிவியல் பொறியியல்
  • பொதுப் பொறியியல்
  • இயந்திர பொறியியல்
  • மின் மற்றும் மின்னணு பொறியியல்
  • மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல்
  • ஆங்கிலம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • கணிதம்
  • நூலகம்
  • நிர்வாக துறை

அமைவிடம்

[தொகு]

இக்கல்லூரி திருச்சிராப்பள்ளி நகரிலிருந்து 18 கி.மீ. தொலைவில் தேசிய நெடுஞ்சாலை 38-இல் சேதுரப்பட்டியில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Government College of Engineering – Srirangam". gces.edu.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 31 May 2018. Click "Academics" and then "Departments".