திருச்சிராப்பள்ளியில் போக்குவரத்து
Appearance
திருச்சிராப்பள்ளியில் நன்கு வளர்ந்த போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ளது. கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் மையத்தில் அமைந்துள்ள நிலையில், திருச்சி சாலை, இரயில் மற்றும் வான் வழியாக இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
சாலைகள்
[தொகு]தே.நெ 45, தே.நெ 45 பி, தே.நெ 67, தே.நெ 210 மற்றும் தே.நெ 227 தேசிய நெடுஞ்சாலைகள் இந்நகரத்தின் வழியாக செல்கிறது. திருச்சிராப்பள்ளி போக்குவரத்து கும்பகோணம் நகரில் தலைமையிடத்தைக் கொண்டுள்ளது.[1] வேலூர், காரைக்குடி, தஞ்சாவூர், கன்னியாகுமரி, சென்னை, மதுரை, சேலம், பழனி, புதுச்சேரி, கோயம்புத்தூர், கொடைக்கானல், திருப்பதி போன்ற ஊர்களுக்கு செல்ல வழக்கமான பேருந்து உள்ளன. இங்கிருந்து கர்நாடகத்துக்கும், கேரளத்துக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.