உறையூர் அழகிய மணவாளர் கோயில்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருக்கோழி [1](திரு உறையூர்) | |
---|---|
![]() | |
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருக்கோழி, உறந்தை, நிகளாபுரி, திருவுறையூர், உறையூர் |
பெயர்: | திருக்கோழி [1](திரு உறையூர்) |
அமைவிடம் | |
ஊர்: | உறையூர் |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | அழகிய மணவாளன் |
தாயார்: | கமலவல்லி நாச்சியார் |
தீர்த்தம்: | கல்யாண தீர்த்தம், சூர்ய புஷ்கரணி |
ஆகமம்: | பாஞ்சராத்ரம் |
மங்களாசாசனம் | |
பாடல் வகை: | நாலாயிர திவ்வியப் பிரபந்தம் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
விமானம்: | கல்யாண விமானம் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழ மன்னர்கள் |
உறையூர் அழகிய மணவாளர் கோயில் 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு இரண்டாவது திருத்தலம் ஆகும். இது திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூரில் அமைந்துள்ளது. இத்தலம் திருஉறையூர் (திருக்கோழி) என்ற பெயரில் புராண காலத்தில் அழைக்கப்பட்டுள்ளது.
தலவரலாறு[தொகு]

- துவாபர யுகத்தில் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்த நந்தசோழன் தமக்கு புத்திர பாக்கியம் அருள திருவரங்கத்து பெருமாளை வேண்டி வர தாயார் தாமரை ஓடையில் சிறு குழந்தையாகக் கிடக்க, கமலவல்லி எனப்பெயரிட்டு தம் மகளாக வளர்த்த மன்னன், கமலவல்லி திருமணக்கோலத்தில் அரங்கநாதனுன் மறைந்த பின்னர் திருமண நினைவாக நந்தசோழ மன்னர் எழுப்பிய திருக்கோயில்
- கலியுகத்தில் மண்ணில் மறைந்த இப்பகுதியை மீட்டு சோழ மன்னன் இப்பொழுதிருக்கும் பெருமாளையும் தாயாரையும் பிரதிஷ்டை செய்து அமைத்த திருக்கோயிலே தற்போது உள்ளது.
சிறப்பு[தொகு]
- திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலம்.
திருக்கோழி பெயர்க்காரணம்[தொகு]
சோழ நாட்டு அரண்மனை யானை இங்கு வந்தபோது கோழி ஒன்று யானையைத் தாக்கி ஓடச் செய்ததால் கோழியூர் என்ற பெயர் ஏற்பட்டு அது பின்னர் திருக்கோழி என மாறிற்று.
அமைவிடம்[தொகு]
திருச்சி ரயில் நிலையத்திலிருந்து 5மைல் தொலைவில் உள்ளது. முதன்மைத் திருத்தலமான ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலிலிருந்து 3km நடந்து வரும் தூரத்தில் அமைந்துள்ளது.
மங்களாசாசனம்[தொகு]
திருமங்கையாழ்வார், தான் எழுதிய பெரிய திருமொழியில் ஒரே ஒரு பாசுரத்தில் மட்டும் மங்களாசாசனம் செய்த திவ்ய தேசம் இது.
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலரே ஒப்பர் குன்றமன்ன
பாழியும் தோளும் ஓர் நான்குடையர்
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணமென்னில்
மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா.
- பெரிய திருமொழி