நன்றுடையான் விநாயகர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நன்றுடையான் விநாயகா் கோயில் (Nandrudayan Vinayaka Temple), திருச்சிராப்பள்ளியில் உள்ள தேவதானத்தின் அருகில்  கிழக்கு பொலிவார்ட் சாலையில் அமைந்துள்ளது. இக் கோயிலில் விநாயகர்  முதன்மையான தெய்வமாக காட்சியளிக்கின்றாா். விநாயகர்  சிலை மனித உருவில் சித்தரிக்கப்பட்டிருக்கும் ஒரே  கோயில் நன்றுடையான் விநாயகா் கோயில் ஆகும்.[சான்று தேவை]

வரலாறு[தொகு]

திருச்சிராப்பள்ளியில் உள்ள நன்றுடையான் விநாயகா் கோயில் மிகப் பழமையான இந்து ஆலயங்களில் ஒன்றாகும். 7 ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த நாயன்மாரும், சம்பந்தரும்  இத்திருத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளார்கள்.[1]

கட்டிடக்கலை[தொகு]

இக் கோயில் திராவிடக் கட்டிடக்கலை பாணியில்  கட்டப்பட்டுள்ளது. 5 அடி உயரமான விநாயகர் சிலை மனித உருவில் அமைந்துள்ளது. மேலும் மிகப்பொிய நந்தி கிழக்கு முகமாக அமைந்துள்ளது.[1]  கோயில் வளாகத்திற்குள் 4 அடி உயரம் கொண்ட ஆதி  விநாயகருக்கென்று  சன்னதி உள்ளது[1]. கோயிலின் உள்ளே  ஆதிசங்கரர், வேத வைசியர், காயத்ரி, சதாசிவ பிரம்மேந்திரர் மற்றும் பட்டினத்தாாின் சிலைகளும் உள்ளன. [1]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  • "Temples". Trichy Tourism. Government of India.