பொன்மலை சந்தை

ஆள்கூறுகள்: 10°47′11″N 78°43′38″E / 10.7865°N 78.7272°E / 10.7865; 78.7272
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொன்மலை சந்தை
இருப்பிடம்:பொன்மலை திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா
அமைவிடம்10°47′11″N 78°43′38″E / 10.7865°N 78.7272°E / 10.7865; 78.7272
திறப்பு நாள்1926; 98 ஆண்டுகளுக்கு முன்னர் (1926)
உருவாக்குநர்பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு

பொன்மலை சந்தை (Golden Rock Shandy) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளியில் உள்ள பொன்மலையில் உள்ள ஒரு சந்தை ஆகும்.

பின்னணி[தொகு]

1926ஆம் ஆண்டு பிரித்தானிய ஆட்சியின் போது இந்த வாராந்திர சந்தையானது, திருச்சி நகரின் மையப் பகுதியிலிருந்து வெகு தொலைவில் வசிக்கும் தொடருந்து ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மற்றும் இப்பகுதியில் வசிப்பவர்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக நிறுவப்பட்டது.[1]

உழவர் சந்தையாக இருந்ததால், இது ஆரம்பத்தில் காய்கறிகள் மட்டும் விற்பனைச் செய்யப்பட்டன. பின்னர் இந்த வசிப்பிடத்தில் மக்கள் தொகை பெருகியதால், அனைத்து வகையான உலர் பொருட்கள் மற்றும் நுகர்பொருட்கள், உலோகப் பொருட்கள், பானைகள், ஆடைகள், தளபாடங்கள், இறைச்சி, மீன், கோழி, கால்நடைகள் மற்றும் ஈரமான பொருட்கள் விற்பனைத் தொடங்கியது. மின்னணு சாதனங்கள் மற்றும் இதர பொருட்களும் இங்குக் கிடைக்கின்றன.[1][2]

சந்தை நாட்கள்[தொகு]

இரயில்வே ஊழியர்களுக்கு மாதம் இருமுறை சம்பளம் ரொக்கமாக வழங்கப்பட்டதால், தொடக்கத்தில், ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறையும், ஞாயிற்றுக்கிழமைகளில் விடியற்காலை முதல் சாயங்காலம் வரையிலும் சந்தை பரபரப்பாகச் செயல்பட்டது. பதினைந்து நாள் கட்டணம் செலுத்தும் முறை ரத்து செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 3-ம் தேதி ரொக்கமாகச் சம்பளம் வழங்கப்பட்டபோது, இருவார கால அட்டவணையைக் கைவிட்டு அந்த நாட்களில் மட்டுமே சந்தை நடத்தப்பட்டது. ஊழியர்களின் சம்பளம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதால், கடந்த சில ஆண்டுகளாக ஞாயிற்றுக்கிழமை மட்டுமே தற்பொழுது சந்தை செயல்படுகிறது.[3]

பெருமை[தொகு]

பாரத மிகு மின் நிலையம், படைக்கலத் தொழிற்சாலை, கே. கே. நகர், பொன்மலைப்பட்டி, அரியமங்கலம், காட்டூர், மேலகல்கொண்டார்கோட்டை, கீழகல்கொண்டார்கோட்டை, கொட்டப்பட்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 30,000 பேர் இந்தச்சந்தைப் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.[2][3]

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பொன்மலை_சந்தை&oldid=3773971" இலிருந்து மீள்விக்கப்பட்டது